உள்ளடக்கத்துக்குச் செல்

தாமரை ஊசித்தட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல வால் ஊசித்தட்டான் (blue-tailed damselfly) அல்லது தாமரை ஊசித்தட்டான் ( இசுனூரா எலிகன்சு) என்பது கோயெனாகிரியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊசித்தட்டான் ஆகும்.[1]

உள்ளினமும் வகையினங்களும்

 எலிகன்சு உள்ளினத்தின் வகையினங்கள் பின்வருமாறு: [2]
  • இசுனூரா எலிகன்சு எபினேரி சுக்கிமிடு, 1938
  • இசுனூரா எலிகன்சு எலிகன்சு (வாண்டர் இலிண்டன், 1820)
  • இசுனூரா எலிகன்சு பொந்திகா சுக்கிமிடு, 1939
  • இசுனூரா எலிகன்சு f. இன்புசுகான்சு
  • இசுனூரா எலிகன்சு f. இன்புசுகான்சு-அபுசொலீட்டா
  • இசுனூரா எலிகன்சு f. உரூபெசென்சு
  • இசுனூரா எலிகன்சு f. டய்பிகா
  • இசுனூரா எலிகன்சு f. வயோலாசியா

விவரிப்பு

இதன் உடலின் இறுதிப் பகுதியில் நீல நிற பட்டைகள் காணப்படுவதால் இதற்கு இந்த பெயர். இதன் உடல் மெல்லிய மஞ்சள் நிறத்தில் காணப்படும். கண்கள் கருப்பு பட்டையுடன் பச்சை நிறமும் கலந்து காணப்படும். சிறு மென் மயிர்களோடு இளம் மஞ்சள் கலந்த கருப்பு நிற கால்கள் காணப்படும். இறகுகள் ஊடுருவும் தன்மையில் இருக்கும்.

தாயகம் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பகுதிகளாகும். இவைகள் சற்று மெதுவான ஓட்டம் கொண்ட ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளின் மீது காணலாம். ஆனால் இவை அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப்படுவதில்லை.

இவை வண்ணத்துப் பூச்சி, பட்டாம் பூச்சி, கொசு, ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை உண்டு அவற்றின் இனத்தைக் கட்டுப் படுத்துவனவாகக் காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் 2300 மீட்டர் உயரத்திலும் தாமரை ஊசித் தட்டான்கள் பறப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.[3]

காட்சிமேடை

மேற்கோள்கள்

  1. Bisby F.A., Roskov Y.R., Orrell T.M., Nicolson D., Paglinawan L.E., Bailly N., Kirk P.M., Bourgoin T., Baillargeon G., Ouvrard D. Catalogue of life
  2. Biolib
  3. புத்தகம்: பூச்சிகள் ஓர் அறிமுகம், ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம், வானம் பதிப்பகம், பக்கம் : 99


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_ஊசித்தட்டான்&oldid=3739354" இலிருந்து மீள்விக்கப்பட்டது