உள்ளடக்கத்துக்குச் செல்

அபிடோஸ் (தார்தனெல்சு நீரிணை)

ஆள்கூறுகள்: 40°11′43″N 26°24′18″E / 40.19528°N 26.40500°E / 40.19528; 26.40500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிடோஸ்
Ἄβυδος (in பண்டைக் கிரேக்க மொழி)
மாசிடோனிய தங்க ஸ்டேட்டர் நாணயம், அபிடோஸ் நாணயச் சாலை. 323–317 அல்லது 297 கி.மு.
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Turkey Marmara" does not exist.
இருப்பிடம்சானக்கலே, கனக்கலே மாகாணம், துருக்கி
பகுதிMysia
ஆயத்தொலைகள்40°11′43″N 26°24′18″E / 40.19528°N 26.40500°E / 40.19528; 26.40500
வகைகுடியேற்றம்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு சு. 670 [1]
பயனற்றுப்போனதுசு. 1304-1310/1318[2]
பகுதிக் குறிப்புகள்
பொது அனுமதிகட்டுப்படுத்தப்பட்டது

அபிடோஸ் (Abydos (Hellespont), பண்டைக் கிரேக்கம்Ἄβυδος, இலத்தீன்: Abydus ) என்பது மைசியாவின் ஒரு பழங்கால நகரம் மற்றும் கிறித்துவ ஆயரின் தலைமையகமாக இருந்த இடமாகும்.[nb 1] இது ஹெலஸ்பாண்டின் ஆசிய கடற்கரையில் (தார்தனெல்சு நீரிணை), பண்டைய நகரமான செஸ்டோசுக்கு எதிரே மற்றும் துருக்கியில் உள்ள சானக்கலே நகருக்கு அருகில் உள்ள நாரா பர்னு ப்ரோமென்ட்டரியில் அமைந்துள்ளது. அபிடோஸ் சு. கிமு 670 களில் நீரிணையில் மிகக் குறுகிய இடத்தில், [1] ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய இடங்களில் ஒன்றாக இருந்தது. இதன் முக்கியத்துவம் 13 ஆம் நூற்றாண்டுவரை நீடித்ததாக தெரிகிறது. [4] 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அபிடோஸ் நகரம் கைவிடப்பட்டது. [2]

அபிடோசானது கிரேக்கத் தொன்மவியலில், ஹீரோ மற்றும் லியாண்டரின் தொன்மங்களில் லியாண்டரின் இருப்பிடமாக கூறப்படுகிறது. [5] 12 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளரான தியோடர் ப்ரோட்ரோமோஸ் எழுதிய புதினமான ரோடந்தே அண்ட் டோசிக்கிள்சில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. [6]

தொல்லியல்

[தொகு]

1675 ஆம் ஆண்டில், அபிடோசின் தளம் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் ராபர்ட் வூட், ரிச்சர்ட் சாண்ட்லர், ஜார்ஜ் கோர்டன் பைரன் போன்ற ஏராளமான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் பயணிகள் பார்வையிட்டனர். [7] நகரின் அக்ரோபோலிஸ் துருக்கியில் மால் டெப் என்று அழைக்கப்படுகிறது. [8]

நகரம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, அபிடோசின் இடிபாடுகள் கிபி 14 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை கட்டுமான மூலப் பொருட்களுக்காக உடைத்து எடுக்கபட்டன. [9] மேலும் இங்கிருந்த சுவர்கள் மற்றும் கட்டிடங்களின் எச்சங்கள் குறைந்தபட்சம் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பதிவாகியுள்ளன. இருப்பினும், சிறிய எச்சங்கள் எஞ்சியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தடைசெய்யப்பட்ட இராணுவ மண்டலமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டது, இதனால் சிறிய அளவில் கூட அகழ்வாயுவுகள் நடைபெறவில்லை. [7] [10]

குறிப்புகள்

[தொகு]
  1. Abydos is placed either within Mysia,[3] or the Troad.

அடிக்குறிப்புகள்

  1. 1.0 1.1 Hansen & Nielsen (2004), p. 993
  2. 2.0 2.1 Leveniotis (2017), pp. 13-14
  3. For Abydos within Mysia, see
    • Grainger (1997), p. 675
    • Allen & Neil (2003), p. 189
    • Bean (1976), p. 5
  4. Kazhdan (1991) "Kallipolis" (A. Kazhdan), pp. 1094–1095
  5. Hopkinson (2012)
  6. Kazhdan & Wharton (1985), p. 202
  7. 7.0 7.1 Gunter (2015), p. 1
  8. Bean (1976), p. 5
  9. Leveniotis (2017), p. 3
  10. Archivum Callipolitanum II. A Catalogue of Ancient Ports and Harbours