உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிசு மன்றோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 21 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("Alice_Munro_2006_(cropped).jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 13 June 2024.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ஆலிசு மன்றோ
Alice Munro
பிறப்புஆலிசு ஆன் லெயிட்லோ
(1931-07-10)10 சூலை 1931
விங்கம், ஒண்டாரியோ, கனடா
இறப்பு13 மே 2024(2024-05-13) (அகவை 92)
போர்ட் ஹோப், ஒண்டாரியோ, கனடா
தொழில்சிறுகதை எழுத்தாளர்
மொழிஆங்கிலம்
கல்வி நிலையம்மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகம்
வகைசிறுகதை
குறிப்பிடத்தக்க விருதுகள்தலைமை ஆளுநரின் விருது (1968, 1978, 1986)
கில்லர் பரிசு (1998, 2004)
பன்னாட்டு புக்கர் பரிசு (2009)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2013)
துணைவர்
  • யேம்சு மன்றோ
    (தி. 1951; முறிவு 1972)
  • செரால்டு பிரெம்லின்
    (தி. 1976; இற. 2013)
பிள்ளைகள்4

ஆலிசு ஆன் மன்றோ (Alice Ann Munro, 10 சூலை 1931 – 13 மே 2024) என்பவர் ஓர் கனடிய எழுத்தாளர். இவர் 2013ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், 2009ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பன்னாட்டுப் பரிசையும் தனது படைப்புகளுக்காக வென்றவர். இவர் மும்முறை கனடாவின் புனைகதைக்கான ஆளுநர் விருதினை (Governor General's Award) வென்றுள்ளார்.[1][2] இவர் தனது படைப்புகளில் தென்மேற்கு ஒன்ராறியோவிலேயே அதிகம் மையப்படுத்தியிருக்கின்றார்.[3] இவர் புனைகதையின் மிக பெரிய சமகால எழுத்தாளர் என்றும் "கனடாவின் செக்கோவ்" என்றும் புகழப்படுள்ளார்.[4].82 வயதாகும் முன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் அவர் ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவரது தந்தையார் பெயர் லெயிட்லா ஒரு விவசாயி. தாய் அன்னி கிளார்க் ஒரு பள்ளி ஆசிரியை. ஆலிசு மன்ரோ தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் கதையான ஒரு நிழலின் வடிவம் (The Dimensions of a Shadow) 1950 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வெளியானது. அந்நேரத்தில் இவர் உணவு பரிமாறுபவராகவும், நூலக எழுத்தராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மன்ரோ ஜேம்ஸ் என்பவரை 1951-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சீலா, கேத்தரின், ஜெனி ஆகிய குழந்தைகள் பிறந்தன. இதில் கேத்தரின் பிறந்த 15 மணி நேரதில் இறந்து விட்டார். 1963-இல் இத்தம்பதியினர் விக்டோரியா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மன்றோ புத்தகங்கள் (Munro's Books) என்ற புத்தகக் கடையைத் தொடங்கினர். அக்கடையானது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1966-இல் இவர்களுக்கு ஆண்ட்றா என்ற குழந்தை பிறந்தது. இவர்கள் 1972-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் மன்றோ ஜெரால்ட் பிரீம்லின் எனும் புவியியலாளரைத் திருமணம் செய்து கொண்ட்டர். பிரீம்லின் 2013 ஆம் ஆண்டு இறந்தார்.[6]

இறப்பு

[தொகு]

மறதிநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆலிசு மன்றோ 2024 மே 13 அன்று கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள அவரது வீட்டில் அவரது 92-ஆவது அகவையில் காலமானார்.[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Nobel Prize in Literature 2013 - Press Release" (PDF). Archived from the original (PDF) on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  2. "Alice Munro wins Man Booker International prize". The Guardian. 27 மே 2009. http://www.guardian.co.uk/books/2009/மே/27/alice-munro-man-booker-international-prize. 
  3. Marchand, P. (29 ஆகஸ்ட் 2009). "Open Book: Philip march and on Too Much Happiness, by Alice Munro". The National Post இம் மூலத்தில் இருந்து 2011-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110825143705/http://network.nationalpost.com/NP/blogs/afterword/archive/2009/08/29/open-book-philip-marchand-on-too-much-happiness-by-alice-munro.aspx. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2009. 
  4. Merkin, Daphne (24 அக்டோபர் 2004). "Northern Exposures". New York Times Magazine. http://www.nytimes.com/2004/10/24/magazine/24MUNRO.html. பார்த்த நாள்: 25 பெப்ரவரி 2008. 
  5. "கனடாவை சேர்ந்த ஆலிக் மன்ரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!". Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
  6. "Gerald Fremlin (obituary)". Clinton News-Record. April 2013. http://www.yourlifemoments.ca/sitepages/obituary.asp?oId=700628. பார்த்த நாள்: 1 July 2013. 
  7. "Alice Munro, Canadian author who won Nobel Prize for Literature, dies at 92" (in en-CA). The Globe and Mail. 2024-05-14. https://www.theglobeandmail.com/canada/article-alice-munro-death-author/. 
  8. CBC Staff (14 May 2024). "Alice Munro, Canadian author who mastered the short story, dead at 92". CBC News (Toronto: கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) இம் மூலத்தில் இருந்து 14 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240514204502/https://www.cbc.ca/news/canada/alice-munro-author-dead-obit-1.7203737. 
விருதுகள்
முன்னர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2013
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிசு_மன்றோ&oldid=4016264" இலிருந்து மீள்விக்கப்பட்டது