அகமதுநகர் சுல்தானகம்
அகமதுநகர் சுல்தானகம் நிசாம் சாகி வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
28 மே 1490–1636 | |||||||||
நிசாம் சாகி வம்சத்தின் அகமதுநகர் சுல்தானகத்தின் கொடி | |||||||||
தலைநகரம் | அகமதுநகர் அவுரங்காபாத் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம் (official)[1] உருது மராத்தி | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
நிசாம் ஷா | |||||||||
• 1490–1510 | முதலாம் அகமது நிசாம் ஷா | ||||||||
• 1510-1553 | முதலாம் புர்கான் நிசாம் ஷா | ||||||||
• 1553-1565 | முதலாம் உசைன் நிசாம் | ||||||||
• 1565-1588 | முதலாம் முர்தசா நிசாம்/சந்த் பீபி | ||||||||
• 1588-1589 | இரண்டாம் உசைன் ஷா | ||||||||
• 1588-1591 | இஸ்மாயில் நிசாம் ஷா | ||||||||
• 1591-1595 | இரண்டாம் புர்கான் நிசாம் ஷா | ||||||||
• 1595-1596 | இப்ராகிம் நிசாம் ஷா/ சந்த் பீபி | ||||||||
• 1596-1596 | இரண்டாம் அகமது நிசாம் ஷா | ||||||||
• 1596-1600 | பகதூர் நிசாம் ஷா | ||||||||
• 1600–1610 | இரண்டாம் முர்தஜா ஷா | ||||||||
• 1610–1631 | மூன்றாம் புர்கான் நிசாம் ஷா | ||||||||
• 1631–1633 | மூன்றாம் உசைன நிசாம் ஷா | ||||||||
• 1633–1636 | மூன்றாம் முர்தஜா நிசாம் ஷா | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 28 மே 1490 | ||||||||
• முடிவு | 1636 | ||||||||
நாணயம் | பாலஸ் [2] | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
அகமதுநகர் சுல்தானகம் (Ahmadnagar Sultanate) தென்னிந்தியாவின் வடமேற்கு தக்காணப் பீடபூமியில், குஜராத் சுல்தானகத்திற்கும், பிஜப்பூர் சுல்தானகத்திற்கும் இடைய உள்ள நிலப்பரப்புகளை 1490 முதல் 1636 முடிய ஆட்சி செலுத்தியது. இது தக்காணத்தில் இருந்த ஐந்து சுல்தானகங்களில் ஒன்றாகும். பிற தக்காண சுல்தானகங்கள்; பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகம் ஆகும்.
இச்சுல்தானகம் பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சி காலத்தில் 1490ல் மாலிக் அகமது என்பவரால் நிறுவப்பட்டது.
அகமதுநகர் சுல்தானகத்தின் துவக்க காலத்தில் ஜூன்னார் முதல் தலைநகராக விளங்கியது. ஜூன்னார் என்ற பெயரை பின்னர் சிவனேரி என மாற்றினர்.
நிசாம் சாகி வம்சத்தின்[3] மாலிக் அகமது தனது பெயராய் அகமதுநகரை நிறுவி அதனை தமது சுல்தானகத்தின் தலைநகராகக் கொண்டார்.[4] [5]
அகமது சுல்தானியர் 1499ல் தௌலதாபாத் நகரத்தையும், 1574ல் பேரர் சுல்தானகத்தையும் கைப்பற்றினர்.
1636ல் முகலாயப் பேரரசின் தக்காண ஆளுநர் அவுரங்கசீப் அகமதநகர் சுல்தானகத்தை வென்று முகலாயப் பேரரசில் இணைத்தார்.
வரலாறு
[தொகு]அகமத்நகர் சுல்தானகத்தை நிறுவிய மாலிக் அகமதின் தந்தை நிசாம் உல் முல்க் மாலிக் ஹசன் பகாரி, உண்மையில் ஒரு இந்து பிராமணர் ஆவார்.[6]:189 நிசாம் சாகி வம்சத்தை நிறுவிய மாலிக் அகமது, தான் நிறுவிய அகமத்நகரை, அகமத்நகர் சுல்தானகத்திற்கு தலைநகராக்கினார்.
-
முதலாம் உசைன் நிசாம் ஷா
-
இரண்டாம் புர்கான் நிசாம் ஷா
-
சந்த் பீபி
தலிகோட்டா சண்டை
[தொகு]26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் அகமத்நகர் சுல்தான் முதலாம் உசைன் நிசாம் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
முதலாம் உசைன் நிசாம் ஷாவின் மனைவி சந்த் பீபி, கோல்கொண்டா சுல்தானகம் மற்றும் பிஜப்பூர் சுல்தானகம் ஆகியவைகளுடன் கூட்டு சேர்ந்து அவுரங்கசீப்பின் முகலாயப் பேரரசின் படைகளை எதிர்த்து நின்றார்.
அகமதுநகர் சுல்தான்கள்
[தொகு]நிசாம் சாகி வம்சத்தின் கீழ்கண்ட சுல்தான்கள் அமகதுநகர் சுல்தானகத்தை ஆண்டனர்.[7]
- முதலாம் அகமது நிசாம் ஷா 1490–1510
- முதலாம் புர்கான் நிசாம் ஷா 1510–1553
- முதலாம் உசைன் நிசாம் ஷா 1553–1565
- முதலாம் முர்தாஜா நிசாம் ஷா 1565–1588
- இரண்டாம் நிசாம் ஷா 1588 –1589
- இஸ்மாயில் நிசாம் ஷா 1589–1591
- இரண்டாம் புர்கான் நிசாம் ஷா 1591–1595
- இப்ராகிம் நிசாம் ஷா 1595–1596
- இரண்டாம் அகமது ஷா 1596
- பகதூர் நிசாம் ஷா 1596–1600
- இரண்டாம் முர்தஜா நிசாம் ஷா 1600–1610
- மூன்றாம் புர்கான் நிசாம் ஷா 1610–1631
- மூன்றாம் உசைன நிசாம் ஷா 1631–1633
- மூன்றாம் முர்தஜா நிசாம் ஷா 1633–1636
-
அகமதுநகர் கோட்டை ஓவியம், ஆண்டு 1885
-
அகமதுநகர் கோட்டை
இதனையும் காணக
[தொகு]- பாமினி சுல்தானகம்
- தக்காண சுல்தானகங்கள்
- கோல்கொண்டா சுல்தானகம்
- பேரர் சுல்தானகம்
- பிஜப்பூர் சுல்தானகம்
- பீதர் சுல்தானகம்
- தலிகோட்டா சண்டை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brian Spooner and William L. Hanaway, Literacy in the Persianate World: Writing and the Social Order, (University of Pennsylvania Press, 2012), 317.
- ↑ Stan Goron and J.P. Goenka, The coins of the Indian sultanates : covering the area of present-day India, Pakistan, and Bangladesh (New Delhi : Munshiram Manoharlal, 2001).
- ↑ Nizam Shāhī dynasty
- ↑ Nizam Shāhī dynasty
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- ↑ Ferishta, Mahomed Kasim (1829). History of the Rise of the Mahometan Power in India, till the year A.D. 1612 Volume III. Translated by Briggs, John. London: Longman, Rees, Orme, Brown and Green.
- ↑ Michell, George & Mark Zebrowski. Architecture and Art of the Deccan Sultanates (The New Cambridge History of India Vol. I:7), Cambridge University Press, Cambridge, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-56321-6, p.274
மேலும் படிக்க
[தொகு]- Shyam, Radhe (2008). Kingdom of Ahmadnagar, Delhi: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2651-5
- Sohoni, Pushkar (2010). "Local Idioms and Global Designs: Architecture of the Nizam Shahs" (Doctoral dissertation, University of Pennsylvania).
- Sohoni, Pushkar(2015), Aurangabad with Daulatabad, Khuldabad and Ahmadnagar, Mumbai : Jaico Publishing House ; London : Deccan Heritage Foundation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184957020
- Chopra, R.M. (2012), The Rise, Growth And Decline in Indo-Persian Literature, Iran Culture House, New Delhi, Chapter on "Persian Literature in Ahmadnagar Sultanate".