அனிதா அமாங்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அனிதா அமாங் | |
---|---|
உகாண்டா நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மார்ச் 2022 | |
குடியரசுத் தலைவர் | யோவேரி முசவேனி |
முன்னையவர் | ஜாக்கப் உலுனயா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 நவம்பர் 1973 புக்கேடியா மாவட்டம், உகாண்டா |
குடியுரிமை | உகாண்டா |
தேசியம் | உகாண்டா |
அரசியல் கட்சி | தேசிய எதிர்ப்பு இயக்கம் |
துணைவர் | மோசஸ் மாகோகோ ஹாசிம்]] (தி. 2022) |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி |
|
வேலை | பட்டயக் கணக்கறிஞர், அரசியல்வாதி , வழக்கறிஞர் |
அறியப்படுவது | அரசியல் உகாண்டா நாடாளுமன்றத்தின் பதினோராவது பேரவைத் தலைவர் |
அனிதா அன்னெட் அமாங் ( Anita Annet Among ; பிறப்பு 23 நவம்பர் 1973) உகாண்டாவைச் சேர்ந்த ஓர் பட்டயக் கணக்கறிஞரும், வழக்கறிஞரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2022 முதல் உகாண்டாவின் 11வது பாராளுமன்றத்தின் பேரவைத் தலைவராகவும் உள்ளார்.[1] [2] முன்னதாக 10வது பாராளுமன்றத்தில் (2016–2021) இவர் புக்கேடியா மாவட்ட மகளிர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்தார்.[3] இவர் ஆளும் “தேசிய எதிர்ப்பு இயக்கம்” கட்சியில் சேருவதற்கு முன்பு “ஜனநாயக மாற்றத்திற்கான மன்றம்” கட்சியில் இருந்தார். அங்கு இவர் 10வது பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்தெடுக்கப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உகாண்டா அரசாங்கத்திற்கு எதிரான சித்திரவதை புகாரில் இவர் இடம் பெற்றுள்ளார்.[4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அனிதா அமாங், புக்கேடியா மாவட்டத்தில் 23 நவம்பர் 1973 இல் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை உள்ளூர் பள்ளிகளில் பயின்றார். 2005 இல் மேக்கரேர் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், மேக்கரேர் பல்கலைக்கழகத்தால் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் வழங்கப்பட்டது.[5]
2018 இல், கம்பாலா சர்வதேச பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டத்தைப் பெற்றார். [6] அந்த நேரத்தில் இவர் ஒரு பட்டயக் கணக்கறிஞர் தகுதியை அடைந்திருந்தார்.
தொழில்
[தொகு]நாட்டின் பெரிய வணிக வங்கிகளில் ஒன்றான சென்டினரி வங்கியில் 1998 முதல் 2006 வரை பணிபுரிந்தார். 2006 இல் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில், இவர் கிளை மேலாளர் பதவிக்கு உயர்ந்திருந்தார். பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இவர் மேக்கரேர் பல்கலைக்கழக வணிகப் பள்ளி மற்றும் கம்பாலா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கணக்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
அரசியல்
[தொகு]2007 இல் புக்கேடியா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. 2011 இல், இத்தொகுதியில் போட்டியிட்ட அனிதா அமாங் தேசிய எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் கட்சியின் ரோஸ் அகோலிடம் மாவட்ட பெண் பிரதிநிதிகான இடத்தை இழந்தார்.
ஜனநாயக மாற்றத்திற்கான எதிர்க்கட்சியின் நீண்டகால உறுப்பினரான அனிதா அமாங், 2016 இல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்று தொகுதி உறுப்பினரானார்.
2020 ஆம் ஆண்டில், இவர் ஜனநாயக மாற்றத்திற்கான கட்சியிலிருந்து வெளியேறி தேசிய எதிர்ப்பு இயக்கம் கட்சியில் சேர்ந்தார்.[7] [8] பின்னர், கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரானார். 2021 பொதுத் தேர்தலில், 11வது பாராளுமன்றத்தில் சேர போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில உறுப்பினர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவரது வெற்றி சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் தேர்தல் ஆணையம் இவரது போட்டியாளர்களில் சிலரை நியமனம் செய்வதிலிருந்து தடுத்தது. [9] [10] [11] [12] [13] [14] [15]
உகாண்டாவின் 11வது பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாக இவர் அறிவித்தார்.[16] [17] [18] [19]
உகாண்டா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜேக்கப் ஓலன்யா, வாஷிங்டனின் சியாட்டிலில் இறந்த காரணத்தால்[20] [21] [22] நடைபெற்ற தேர்தலில் அனிதா உகாண்டா பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மார்ச் 25, 2022 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டில், உகாண்டா தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு புதிய சட்ட வடிவை ஆதரிக்குமாறு இவர் வலியுறுத்தினார். ஒருவர் தன்னை இருபாலீர்ப்பாளர் என அடையாளப்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. மேலும் இது பத்து ஆண்டுகள் வரை சிறைவைக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தும் என அச்சட்ட முன்வரைவு கூறியது. [23]
10வது பாராளுமன்றத்தில், ஆணைக்குழு, சட்டப்பூர்வ அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஒரு பாரம்பரிய திருமண விழாவில் மோசஸ் மாகோகோ ஹாசிம் என்பவரை சந்த்தித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NRM's Anita Among beats Opposition's Basalirwa to become Speaker,after gathering a total number of 401 valid votes against 66 votes scored by her opponent Asuman Basalirwa in a speaker election held on 25th March 2022 at Kololo independence grounds Kampala". Monitor (in ஆங்கிலம்). 2022-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ "Speaker of Parliament | Parliament of Uganda". www.parliament.go.ug. பார்க்கப்பட்ட நாள் 2023-03-22.
- ↑ Kiggundu, Edris (21 September 2016). "MP Among's rise, connections leave key questions unanswered". Kampala. Archived from the original on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Speaker Among named in fresh ICC torture petition". Monitor (in ஆங்கிலம்). 2023-07-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-29.
- ↑ Parliament of Uganda (2022). "Parliament of Uganda: office of the speaker [Anita Among]". Kampala: Parliament of Uganda. Archived from the original on 7 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2022-08-16."Parliament of Uganda Members of the 10th Parliament: Among Anita Annet: Bukedea District Woman Representative". Parliament of Uganda. 2019. Archived from the original on 2019-01-07.
- ↑ Mujuni, David (23 June 2018). "MP Anita Among Graduates From KIU". Kampala: Campusbee Uganda. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
- ↑ FDC plots to throw MP Anita Among off statutory authorities committee over 'relationship' with NRM (in ஆங்கிலம்), NTV Uganda, 2018-01-31, பார்க்கப்பட்ட நாள் 2022-08-16
- ↑ FDC Reshuffle; MP Anita Among says she won't leave COSASE post (in ஆங்கிலம்), NTV Uganda, 2022-08-16, பார்க்கப்பட்ட நாள் 2021-04-03
- ↑ "Voters petition EC over Bukedea MP's academic papers". Daily Monitor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Correspondent, GEORGE OKELLO | PML Daily Senior (2020-11-01). "Bukedea Woman MP Anita Among unopposed as EC cancels nomination of her six rivals". PML Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "Two Women Aspirants Blocked from Nomination in Bukedea". Uganda Radionetwork (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "Anita Among's Unopposed Victory Hanging On Thin Thread As Court Of Appeal Decides". East News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-17. Archived from the original on 2021-04-13. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Independent, The (2021-03-24). "Court declines to order EC to degazette MP Anita Among". The Independent Uganda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "MP Anita Among's opponent cries foul after she is declared unopposed in Bukedea". Nile Post (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Daily, OUR REPORTER | PML (2021-03-23). "BREAKING! Court upholds EC's decision to Gazette MP Anita Among as "unopposed"". PML Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "MP Anita Among Declares Bid for Deputy Speaker Slot | The Kampala Post". kampalapost.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "Battle for Deputy Speaker job heats up as minister joins race". Daily Monitor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Independent, The (2021-03-18). "Deputy speaker's race: Bukedi MPs ask Oboth Oboth to do more consultions". The Independent Uganda (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "Seven Eyeing Deputy Speakers Job in Parliament". Uganda Radionetwork (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Wamala, Maria (2022-08-16). "Oulanyah died before accessing treatment – Aceng". New Vision. Archived from the original on 2022-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ "Museveni explains why he delayed Oulanyah death announcement". New Vision (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ "Speaker Oulanyah dead". New Vision (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
- ↑ https://lematinal.media/louganda-debat-dun-projet-de-loi-rendant-illegale-lidentification-lgbtq/