அழகான பொண்ணுதான்
அழகான பொண்ணுதான் | |
---|---|
இயக்கம் | திரு |
தயாரிப்பு | கே. கேசவன் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | நமிதா கார்த்திஷ் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் |
வெளியீடு | மார்ச்சு 12, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகான பொண்ணுதான் (Azhagaana Ponnuthan) என்பது 2010ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். திரு எழுதி இயக்கிய இப்படத்தில் நமீதா, புதுமுகம் கார்திஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இரா. பார்த்திபன் கார்த்திக்கின் வயதான கால பாத்திரத்தை ஏற்று நடித்ததுள்ளார். இப்படம் இத்தாலிய திரைப்படமான மாலினாவின் அதிகாரப்பூர்வமற்ற மறு ஆக்கம் ஆகும் ஆகும். சுந்தர் சி. பாபு இசையமைத்த இப்படத்திபடத்தை, கே. கேசவன் தயாரித்தார். இப்படம் 12 மார்ச் 2010 அன்று வெளியானது.[1]
கார்த்திக் ( இரா. பார்த்திபன் ) தனது பதின்பருவத்தில் ஒரு பெண்ணுடன் தான் வளர்த்துக் கொண்ட உறவை நினைவுபடுத்துபவராக படத்தின் முதல் பகுதியில் தோன்றுகிறார். பின் நினைவுகள் வழியாக படம் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு இளம் வயது கார்த்திக் (கார்தீஷ்) ஜெனிபர் (நமிதா) என்ற அழகான பெண்மீது கண்டதும் காதல் கொள்கிறான். அவள் அவனை விட வயதில் மூத்தவள். அவள் மீது பல ஆண்கள் கண்வைத்துள்ளனர். கார்த்திக் ஜெனிஃபருடன் கற்பனையில் வாழ்கிறான். பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் பிறபகுதியாகும்.
நடிகர்கள்
[தொகு]- நமிதா ஜெனிபராக
- கார்த்தீஷ் இளம் வயது கார்த்திக்காக
- இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கார்த்திக்காக
- நிழல்கள் ரவி கார்த்திக்கின் தந்தையாக
- அபிசேக்
- மயில்சாமி (நடிகர்)
- வாசு விக்ரம்
- சியாம் கணேஷ்
- பாலு ஆனந்த்
- பாவா இலட்சுமணன்
- நெல்லை சிவா
- பயில்வான் ரங்கநாதன்
- விசித்திரா
- நிசா
- லட்சயா
தயாரிப்பு
[தொகு]இந்த படத்தின் பணிகள் 2006 இல் தொடங்கப்பட்டது. படப்பணிகளில் ஏறபட்ட தாமதம் காரணமாக 2009 இல் படம் முடிக்கப்பட்டது.[2] முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுகம் ராஜ்கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார், இரா. பார்த்திபன் நாயகனின் முதிர்ந்த வயது பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[3]
பட வெளியீட்டிற்குப் பிறகு, படத்தின் இயக்குனர் திரு, குறிப்பிடும்போது நமீதாவின் காரணத்தால் தனது படம் வெற்றுவேட்டாகிப் போனதாக கூறினார். படத்தில் பல காட்சிகள் எடுக்கபட்ட பிறகு படத்தில் நமிதா நடிக்க மறுத்துவிட்டார் என்று திரு கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் அளித்தபோது, நமீதா படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நமீதாவின் அலட்சியமான நடத்தையின் காரணமாக கதையையும், படத்தின் முடிவையும் மாற்றியமைக்க வேண்டியிருந்தது என்று திரு கூறினார். அழகான பொண்ணுதான் படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு நமீதா தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். திருவின் கூற்றுப்படி, படத்தின் இறுதிப் பகுதியானது அவர் எடுக்க எண்ணியிருந்ததை விட, 20 நிமிடங்கள் குறைவாகவே எடுக்கபட்டது.[4]
இசை
[தொகு]இப்படத்திற்கு சுந்தர் சி. பாபு இசையமைத்தார். இசை வெளியீட்டின் போது கலந்து கொண்ட பிரபலங்கள் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளாத நமீதாவை கடுமையாக சாடினார்கள்.[5][6]
- "வானத்து நிலவு" - கார்த்திக்
- "ஆடுபுலி ஆட்டம்" - அப்சல்
- "மிசியா" - நரேஷ் ஐயர்
- "சாமி கோடாங்கி" - கங்கா
குறிப்புகள்
[தொகு]- ↑ "Movie Review:Azhagana Ponnuthan". Sify.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-09-04/namitha-23-06-09.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-01/parthiban-namitha-azhagana-ponnuthan-03-03-10.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-03/namitha-azhagana-ponnuthan-17-03-10.html
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-09-05/namitha-29-08-09.html
- ↑ http://www.indiaglitz.com/namitha-comes-under-attack-tamil-news-49451