அவள் ஒரு தொடர்கதை
அவள் ஒரு தொடர்கதை | |
---|---|
அவள் ஒரு தொடர்கதை | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ராம அரங்கண்ணல் (ஆண்டாள் பிலிம்ஸ்) |
கதை | எம். எஸ். பெருமாள் |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
வசனம் | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சுஜாதா ஜெய்கணேஷ் கமல்ஹாசன் ஸ்ரீபிரியா படாபட் ஜெயலட்சுமி |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
விநியோகம் | அருள் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 13, 1974 |
நீளம் | 4554 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் ஒரு தொடர்கதை (Aval Oru Thodar Kathai) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, ஜெய்கணேஷ், கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் வெற்றியை தொடர்ந்து மேலும் தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இத்திரைப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.
இத்திரைப்படமானது வானொலியில் பணியாற்றிய எழுத்தாளர் சுகி சுப்பிரமணியத்தின் மகனான எம்.எஸ்.பெருமாள் எழுதிய வாழ்க்கை அழைக்கிறது என்ற குறுநாவல்தான் அவள் ஒரு தொடர்கதை என்ற பெயரில் படமாகியது. பாலசந்தர் திரைக்கதை, வசனம் எழுதினார்.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.[2]
நடிகர்கள்
[தொகு]- சுஜாதா - கவிதா
- ஜெய்கணேஷ் - மூர்த்தி
- கமலஹாசன் - விகடகவி கோபால்
- விஜயகுமார் - திலக்[3]
- ஸ்ரீபிரியா - பாரதி
- படாபட் ஜெயலட்சுமி - சந்திரா
- எம் ஜி சோமன் - சந்திரசேகர்
- லீலாவதி - பார்வதி (கவிதாவின் தாயார்)
- ராஜேஷ் - சரவணா
- கோகுல்நாத் - அருண்
- திடீர் கண்ணையா - (பேருந்து நடத்துனர்)
- வினோதினி
- புஷ்பா
- தேவகி
- உமா
பாடல்கள்
[தொகு]அவள் ஒரு தொடர்கதை | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1974 |
மொழி | தமிழ் |
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன், அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ம. சு. விசுவநாதன்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அடி என்னடி உலகம்" | எல். ஆர். ஈசுவரி | ||
2. | "கடவுள் அமைத்து வைத்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
3. | "கண்ணில் என்ன" | எஸ். ஜானகி | ||
4. | "தெய்வம் தந்த வீடு" | கே. ஜே. யேசுதாஸ் | ||
5. | "ஆடுமடி தொட்டில்" | பி. சுசீலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பாலசந்தரின் மற்றொரு புதுமைப்படைப்பு - அவள் ஒரு தொடர்கதை". மாலை மலர். 27 சனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2021.
- ↑ "அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மாலைமலர் நாளிதழ் இணையதளம்". மாலை மலர். பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்