உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடு புலி ஆட்டம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
(சொர்ணாம்பிகா புரொடக்சன்)
கதைமகேந்திரன்
திரைக்கதைஎஸ். பி. முத்துராமன்
வசனம்மகேந்திரன்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ரசினிகாந்த்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
வெளியீடுசெப்டம்பர் 30, 1977
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Attam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரசினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 'எத்துக்கு பை எத்து' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அல்லு ராமலிங்கம் மற்றும் கைகால சத்யநாராயணா நடிப்பில் சில காட்சிகள் இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டு பின் தெலுங்கில் வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இப்படத்திற்கு கதை மற்றும் வசனம் இயக்குநர் மகேந்திரன் எழுதியுள்ளார்.[3] 'உறவே புதுமை நினைவே இளமை' என்ற பாடல் குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. சாந்தி நாராயணன் தயாரித்த இத்திரைப்படம் வெற்றியடைந்தது.[4]

பாடல்கள்

[தொகு]

இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் படத்திற்கு இசையமைத்தார். [5][6] கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், மற்றும் பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர். [7][8]


எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "உறவோ புதுமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:13
2 "வானுக்கு தந்தை எவனோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். அஞ்சலி 4:22
3 "மணமே சோலையா" வாணி ஜெயராம் 4:21
4 "பூங்குயில் பாடுது" வாணி ஜெயராம் 2:58

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramachandran 2014, ப. 69.
  2. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2021.
  3. "மகேந்திர மகத்துவம்! - இயக்குநர் மகேந்திரன் நினைவு நாள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/blogs/547494-director-mahendiran.html. பார்த்த நாள்: 11 July 2024. 
  4. "சினிமா எடுத்துப் பார் 42: ஆடு புலி ஆட்டம்". இந்து தமிழ் திசை. https://web.archive.org/web/20191202070824/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/183923-42.html. பார்த்த நாள்: 11 July 2024. 
  5. "Aadu Puliyattam Tamil Film Ep Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  6. "Aadupuli Aattam (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 October 1977. Archived from the original on 2024-04-09. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
  7. "Aadu Puliyattam Tamil Film Ep Vinyl Record by Vijayabhaskar". Mossymart. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  8. "Aadupuli Aattam (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 October 1977. Archived from the original on 2024-04-09. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.

வெளி இணைப்புகள்

[தொகு]