இடை
இடை (ⓘ) அல்லது இடுப்பு (Waist/Hip) எனப்படுவது மனித உடலில் விலா எலும்பிற்கும் புறப்பாலுறுப்புகள்ளுக்கும் நடுவில் உள்ள பகுதி ஆகும்.[1][2][3] [4] [5]
பால்சார்பு வேற்றுமை
[தொகு]மனித உடலின் இடை வடிவம் பாலினத்தை பொருத்து வேறுபடுகிறது.பெண்களின் இடையின் மேற்பகுதி சிறுத்தும் கீழ்பகுதி விரிந்தும் உள்ளது. இதன் காரணமாக பெண்களின் பின் பக்கம் ஆண்களை விட சற்று பெருத்து காணப்படுகிறது.[6] பெண்கள் பூப்படையும்போது நடைபெறும் உடல் மாற்றங்களில் இடுப்பு வளையம் விரிதல் ஒன்றாகும்.[7] அதன்படி பூப்படையும்போது பெண்களின் பாலியல் இயக்குநீர்கள் உடலின் கொழுப்புப் படிவுகளை(fat deposits) கால்களும் இடுப்புப்பகுதியும் இணையும் இடத்தில் தேக்குகிறது.இதன் காரணமாக கீழ் இடுப்புப்பகுதி விரிந்து உருண்டையான வடிவத்துடன் காணப்படுகிறது.[8]
இடை - தொடைச் சுற்றளவு விகிதம்
[தொகு]இவ்விகிதத்தை கண்டறிய தொப்புளின் மேல் உள்ள இடையின் சுற்றளவையும், தொப்புளின் கீழ் உள்ள தொடையின் சுற்றளவையும் அளந்து ,மேல்சுற்றளவை கீழ்சுற்றளவால் வகுத்தால் கிடைப்பதுதான் இடை-தொடைச் சுற்றளவு விகிதம் (Waist to Hip Ratio).[9][10] இவ்வாறு அளவு எடுக்கும்பொழுது நேராக நின்றுகொண்டு,பாதம் இரண்டும் சேர்த்துவைத்தவாறும்,கைகள் இரண்டும் பக்கவாடத்தில் இருந்தவாறும் எடுக்கும் அளவே சரியானது.[11]
- இடை-தொடைச் சுற்றளவு விகிதம் = தொப்புளின் மேல் உள்ள அளவு(WAIST) / தொப்புளின் கீழ் உள்ள அளவு(HIP)
இது பெண்களுக்கு 0.7 [12] எனவும் ஆண்களுக்கு 1.0 எனவும் இருந்தால் சரியான விகிதம் ஆகும்.இவ்வாறு சரியான விகிதத்தில் இருந்தால் நமது உடம்பின் கொழுப்பும் கிட்டத்தட்ட சரியான அளவில் இருக்கும்.[13] பிரபல ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா இவ்விகிதத்திற்கு பிரபலமானவர்.[14][15][16] அதிகபட்ச விகிதங்களை விட இடை-தொடைச் சுற்றளவு விகிதம் அதிகமாக இருந்தால் அது நோய் வருவதற்கு வழிவகுக்கும்.அதன் விவரம் கீழ்வருமாறு[17],
ஆண் | பெண் | நோய் வருவதற்கான வாய்ப்பு |
---|---|---|
0.95 க்கு கீழ் | 0.80 க்கு கீழ் | குறைவு |
0.96 முதல் 1.0 வரை | 0.81 முதல் 0.85 வரை | நடுநிலை |
1.0 க்கு மேல் | 0.85 க்கு மேல் | அதிகம் |
இதன்படி தங்கள் உடல் அமைப்பு ஒரே அளவாக ஒல்லியாக இருந்தால்தான் ஆண்களை கவர முடியும் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர்.ஆனால் அமெரிக்க மருத்துவ உளவியல் நிபுணர் லவினியா ராட்ரிகெஸ்(Lavinia Rodriguez) இது தொடர்பாக ஓர் ஆய்வை மேற்கொண்டார்.அந்த ஆய்வின்படி பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்தவரை வளைவாக இருக்க வேண்டும் என பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அதாவது, வயிறு பகுதியைவிட இடுப்பு பகுதி சற்று பருமனாக இருக்க வேண்டுமாம்.கண் பார்வை இல்லாத ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.[18][19][20] உதாரணமாக பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவிற்கு வயிற்று பகுதியை விட இடுப்பு பகுதி சற்று பருமனாக காணப்படுகிறது.இவரின் இடை-தொடைச் சுற்றளவு விகிதம் 0.63 ஆகும்.[21][22] இதுவே இவரை பிரபலமாக்கியது.[23][24]
இடை – உயரம் – விகிதம்
[தொகு]தொப்புள் வழியாக இடையின் சுற்றளவையும் உயரத்தையும் சென்டி மீட்டரில் அளந்து, இடையின் சுற்றளவை உயரத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் இடை-உயரம்-விகிதம். இடை-உயரம்-விகிதத்தின் சரியான அளவுகள் கீழ்வருமாறு,
வயது | அளவு |
---|---|
40 வயது வரை | 0.5 க்கு கீழ் |
40 முதல் 50 வயது வரை | 0.5 முதல் 0.6 வரை |
50 வயதுக்கு மேல் | 0.6 ஒட்டி |
பெண்களுக்கு 88 செ.மீ., ஆண்களுக்கு 103 செ.மீ. க்குக் கீழே இருக்க வேண்டும். இடை-உயரம்-விகிதம் மேலே கூறிய அளவிற்கு அதிகமாக இருந்தால் மார்படைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து இருக்கிறது. ஆரோக்கியமான உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கைத்தரம் சரியான இடை-உயரம்-விகிதத்தைக் கொடுக்கும்.[25]
சாமுத்ரிகா லட்சணம்
[தொகு]இடை
[தொகு]சாமுத்ரிகா லட்சணத்தின்படி ஒரு இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும், மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பார்கள்.[26][27]
வயிறு
[தொகு]ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.[28] பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும்.வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும்.ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர்.வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.[29] உருண்டையான வடிவமும்,செழுமையான முடிகள் இல்லாத இடுப்பையுடைய பெண்கள் மிகுந்த அழகிகளாக இருப்பார்களாம்.ஒரு பெண்னின் வயிறானது புள்ளிமானுடைய வயிறு போலிருந்தால் அவள் பூமியை ஆளும் சக்தி கொண்ட பிள்ளையைப் ஈன்றெடுப்பாளாம்.[30]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Webster's two new college dictionary - Houghton Mifflin Harcourt, 2005
- ↑ Waist - TheFreeDictionary.com
- ↑ Cura's supreme English-English-Tamil dictionary: Revised, enlarged and updated - D.Gnanasundaram
- ↑ Winslow's A comprehensive Tamil and English dictionary - M.Winslow
- ↑ Percival's Tamil-English dictionary - P.Percival
- ↑ "Big butts are back"article பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம் Cosmopolitan
- ↑ "Reproductive Anatomy and Physiology". The Harriet and Robert Heilbrunn Department of Population and Family Health. பார்க்கப்பட்ட நாள் June 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Waist to Hip Ratio and Attractiveness in Women
- ↑ Waist To Hip Calculator at University of Maryland Medical System. Retrieved Dec 2010
- ↑ "A Women's most attractive feature? Waist to Hip Ratio my friend". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
- ↑ Waist Circumference and Waist–Hip Ratio:Report of a WHO Expert Consultation,Geneva, 8–11 December 2008
- ↑ "0.7 Waist To Hip Ratio Is Ideal For Women". Archived from the original on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.
- ↑ இடுப்பு அளவு!!!
- ↑ "Jessica Alba, Kate Moss Have Perfect Waist-to-Hip Ratio for Attracting Men, Researcher Claims". Archived from the original on 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2011-11-21.
- ↑ 0.7 Waist To Hip Ratio Is Ideal For Women[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mathemeticians Figure Out What Makes Women Beautiful
- ↑ BMI Calculator » Waist to Hip Ratio Chart
- ↑ "இடுப்பு பருமனான பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்". Archived from the original on 2012-01-19. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
- ↑ Gentlemen prefer bodacious
- ↑ "What body shape in women most men prefer". Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Celebrity Waist to Hip Ratio". Archived from the original on 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
- ↑ WHR: waist to hip ratio
- ↑ Best Female Figure Not an Hourglass
- ↑ Why do ugly boys get gorgeous girls? The secrets of physical attraction are revealed
- ↑ இடை–உயரம்–விகிதம்; இது உடம்பு–பருமன்–குறியெண்ணை விடச் சிறந்ததா? - முனைவர்.க.பத்மநாபன் அவர்களின் அறிவுப் பெட்டகம்
- ↑ சாமுத்ரிகா லட்சணம் என்றால் அங்கங்களின் அமைப்பு.
- ↑ சாமுத்ரிகா லட்சணம் – பெண்களின் குணநலன்கள் – எந்த பெண் எப்படி?
- ↑ சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
- ↑ சாமுத்திரிகா லட்சணம
- ↑ சாமுத்ரிகா லக்ஷணம் - நிறைவுப் பகுதி