இரண்டாவது மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரண்டாவது மொழி (second language) என்பது, பேசுபவரின் தாய்மொழியாக இல்லாத ஆனால், அவருடைய பகுதியில் பயன்படுத்தப்படும் மொழியொன்றைக் குறிக்கும். இதற்கு முரணாக அந்நிய மொழி என்பது குறித்த பகுதியில் பொதுவாகப் பேசப்படாத ஆனால், கற்கப்படுகின்ற ஒரு மொழியாகும். துணை மொழிகள் என அழைக்கப்படும் ஆங்கிலத்தைப் போன்ற சில மொழிகள் பெரும்பாலும் இரண்டாம் மொழியாக அல்லது பொது மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், ஒருவருடைய தாய் மொழிக்கு அல்லது முதல் மொழிக்கு மேலதிகமாகக் கற்கப்படும் ஏதாவதொரு மொழியை இரண்டாம் மொழி எனப் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது அந்நிய மொழி ஒன்றைக் கற்பதாகவும் இருக்கலாம்.
சில வரைவிலக்கணங்களின்படி ஒருவர் கூடுதலாகப் பயன்படுத்துகின்ற அல்லது அவருக்கு நன்றாகப் பேசவரக்கூடிய மொழியே முதல் மொழியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எடுத்துக்காட்டாக, கனடாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதல்மொழி என்பது "சிறுபராயத்தில் முதலில் கற்றுக்கொண்டதும், இன்னும் பேசப்படுவதுமான மொழி" என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.