இரியோ டி செனீரோ (மாநிலம்)
இரியோ டி செனீரோ | |
---|---|
Estado do Rio de Janeiro இரியோ டி செனீரோ மாநிலம் | |
குறிக்கோளுரை: Recte Rem Publicam Gerere (இலத்தீனம்) "பொதுச் சேவைகளை நேர்மையுடன் நடத்துக" | |
பண்: 15ஆம் நவம்பர் | |
பிரேசிலில் இரியோ டி செனீரோ மாநிலத்தின் அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
தலைநகரும் மிகப்பெரும் நகரமும் | இரியோ டெ செனீரோ |
அரசு | |
• ஆளுநர் | செர்ஜியோ காப்ரல் ஃபிஃகோ |
• துணை ஆளுநர் | லூயி பெர்னான்டோ டி சௌசா |
பரப்பளவு | |
• மொத்தம் | 43,696.1 km2 (16,871.2 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 24வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 1,62,31,365 |
• தரவரிசை | மூன்றாவது |
• அடர்த்தி | 370/km2 (960/sq mi) |
அடர்த்தி தரவரிசை | இரண்டாவது |
இனம் | Fluminense |
GDP | |
• Year | 2008 estimate |
• Total | R$ 343,182,000,000 (2nd) |
• Per capita | R$ 21,621 (3rd) |
HDI | |
• Year | 2005 |
• Category | 0.832 – high (5th) |
நேர வலயம் | ஒசநே-3 (BRT) |
• கோடை (பசேநே) | ஒசநே-2 (BRST) |
அஞ்சல் குறியீடு | 20000-000 to 28990-000 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BR-RJ |
இணையதளம் | governo.rj.gov.br |
இரியோ டி செனீரோ (Rio de Janeiro) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரியோ டி செனீரோ ஆகும்.
இரியோ டி செனீரோ மாநிலம் பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.இதன் எல்லைகளாக மினாசு செராய்சு, எசுபிரிட்தோ சான்தோ மற்றும் சாவோ பாவுலோ போன்ற மாநிலங்களும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இந்த மாநிலத்தின் பரப்பளவு 43,653 சதுர கிலோமீட்டர்கள் (16,855 sq mi) ஆகும்.
இந்த மாநிலத்தின் மிகப்பெரும் நகரங்களாக இரியோ டி செனீரோ, சாவோ கோன்சலோ, டுக்கெ டி காக்சியசு, நோவா இக்வாசோ, பெல்போர்டு ரோக்சோ, நித்தேராய், சாவோ ஜோவோ டி மெரிட்டி, கேம்போசு டோசு கோய்டகசெசு, பெட்ரோபோலிசு, வோல்ட்டா ரெடொன்டா, மாஜ்ஜெ, இட்டாபோராய், மெக்காய், மெசுகுயிட்டா, காபோ பிரியோ, நோவா பிரிபுர்கொ, அங்க்ரா தோசு ரெயிசு மற்றும் பர்ரா மன்சா ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த மாநிலம் பிரேசிலின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும் தென்கிழக்கு மண்டலத்தில் மிகச்சிறிய மாநிலமாகவும் உள்ளது. இருப்பினும் பிரேசிலின் மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் மூன்றாவதாக உள்ளது. 2011 கணக்கெடுப்பின்படி 16 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். நாட்டில் மிகவும் நீளமான கடற்கரை உள்ள மூன்றாவது மாநிலமாக அமைந்துள்ளது.
மேற்சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அலுவல்முறை வலைத்தளம் பரணிடப்பட்டது 2007-03-22 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
- மாநில நீதித்துறை பரணிடப்பட்டது 2010-03-01 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
- மாநில சட்டமன்றம் (போர்த்துக்கேயம்)
- மாநிலப் பல்கலைக்கழகம் (போர்த்துக்கேயம்)/(ஆங்கிலம்)
- வடக்கு மாநில பல்கலைக்கழகம் (போர்த்துக்கேயம்)
- மாநில வழக்குரைஞர் அலுவலகம் (போர்த்துக்கேயம்)
- மாநில உள்துறை பாதுகாப்பு பரணிடப்பட்டது 2014-01-22 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
- மாநில இராணுவக் காவல்துறை பரணிடப்பட்டது 2007-12-27 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)
- மாநில காவல்துறை பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம் (போர்த்துக்கேயம்)