உள்ளடக்கத்துக்குச் செல்

களிச்செதில் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களிச்செதில் கல்
Diaspore
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுα-AlO(OH)
இனங்காணல்
நிறம்வெள்ளை, வெளிர்சாம்பல், நிறமற்றது, பசுஞ்சாம்பல், பழுப்பு, வெளிர்மஞ்சள், வெளிர்சிவப்பு, ஊதா; நிறமாற்றம் உறலாம்
படிக இயல்புPlatey, elongated to acicular crystals; also stalactitic, foliated, scaly, disseminated and massive
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்{021} தளத்தில் ஈரிதய வடிவ இரட்டுறலோ போலி அறுகோண வடிவமோ அமையலாம்
பிளப்பு{010} செவ்வையான, {110} தெளிவான, {100} சுவடுமட்டும்
முறிவுசங்குரு முறிவு
விகுவுத் தன்மைமிக நொறுங்குமை உள்ளது
மோவின் அளவுகோல் வலிமை6.5–7.0
மிளிர்வுவிரிசல் முகப்பில் கடல்நீலம், கண்ணாடி, முத்துப்பரல் மிளிர்வு,
ஒளிஊடுருவும் தன்மைமுழு ஒளிபுகு நிலையில் இருந்து ஒளிகசிநிலை வரை
ஒப்படர்த்தி3.1–3.4
ஒளியியல் பண்புகள்ஈரச்சியல்பு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.682–1.706
nβ = 1.705–1.725
nγ = 1.730–1.752
இரட்டை ஒளிவிலகல்δ = 0.048
பலதிசை வண்ணப்படிகமைவன்மை மிக்கது
2V கோணம்அளந்த கோணம்: 84° to 86°
கணித்த கோணம்: 80° to 84°
நிறப்பிரிகைr < v, மெலிவானது
உருகுதன்மைஉருகாதது
கரைதிறன்கரையாதது
பிற சிறப்பியல்புகள்மூடிய குழலில் சூடாக்கும்போது, நீரிழந்து தூளாக்கம்(செதிலாக்கம்)
மேற்கோள்கள்[1][2]
டயாசுப்பாோ்

களிச்செதில் கல் (Diaspore) /ˈdəspɔːr/, அல்லது டயாசுப்போரைட், எம்போலைட், கய்செரைட் அல்லது டான்ட்டாரைட் எனவெல்லாம அழைக்கப்படும் கனிமம் ஓர் அலுமினியம் ஆக்சைடு ஐதராக்சடு கனிமம் ஆகும். இதன் வேதியியல் வாய்பாடு α-AlO(OH) ஆகும் இது செஞ்சாய்சதுரப் படிகமாக அமைகிறது. இது ஜியோத்தைட் கனிமத்தைப் போல சம உருவாக்கதில் படிகமாகிறது.

இயல்புகள்

[தொகு]

இக்கனிமத்தின் படிகங்கள் அரிதாக, மென்தகடு அல்லது (010) தளத்தில் பலகை அமைப்பிலும், C கனிம நகர் திசைக்கு இணையாக ஊசிவடிவப் படிகமாக நீண்டும், மெல்லிய செதில்களாகவும் காணப்படுகிறது. (010) தளத்தில் தெளிவான பிளவுடனும் (110) தளத்தில் சீரற்ற பிளவினையும் சங்கு முறிவினையும் உடையதாகும். இதன் கடினத்தன்மை மோவின் அளவுகோலில் 6(1/2)- 7 ஆகும். மிக எளிதில் நொறுங்கக்கூடிய இதன் ஒப்படர்த்தி 3.3 முதல் 3.5 வரை அமையும்மிது வெண்மை, சாம்பல் கலந்த வெண்மை, நிறமற்றும், வெளிர்மஞ்சள், வெளிர்சிவப்பு, பச்சை கலந்த பழுப்பு, ஊதா நிறங்களிலும் காணப்படும். இதன் மிளிர்வு, பொலிவான பளிங்கு நிறத்தினையும் பிளவுற்ற தளங்களில் முத்து மிளிர்வினையும் உடையதாய்க் காணப்படும். இது ஒளிப்புகும் தன்மை முதல் ஓரளவிற்கு ஒளிக்கசியும் தன்மை வரையிலானது. ]].[3] இது ஈரச்சினை உடையதாகும். இதன் ஒளிவிலகல் எண் α=1.682-1.706, β=1.705-1.725, γ=1.730-1.752 ஆகும். இதன் ஒப்படர்த்தி அல்லது தன் ஈர்ப்புதிறம் 3.4 ஆகும். இது மூடிய ஊதுகுழலில் வெப்பம் ஊட்டினால் நீரிழந்து கடுமையான வெண்சிதல்களாகப் பிரிந்து தூளாகிறது.[4]

இதன் கடினத்தன்மை எண்ணில் இருந்து இதைப் பிற நிறமற்ற ஒளியூடுருவும் செவ்வையான பிளவும் முத்துப் பொலிவும் உள்ள அபிரகம், மாக்கல், புரூசைட், ஜிப்சம் ஆகிய கனிமங்களில் இருந்து தெளிவாகப் பிரித்தறியலாம். டயாசுப்போர், கிப்சைட்டுடன் திண்ணிய மெல்லிய கோளவடிவப் பொருளாகப் போகிமைட்டுடன் பாக்சைட்டில் மிகப் பரவலாகக் கிடைக்கிறது.[2][5]

இக்கனிமம் குருந்தம் அல்லது குருந்தைட் எனும் சாணைக்கல் க்னிமம் ஆகிய மாற்று வடிவத்தில் குறுணைகளாக சுண்ணக்கல், பிற படிகப் பாறைகளில் உள்ளது.

மேற்காேள்கள்

[தொகு]
  1. Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Klein, Cornelis; Hurlbut, Cornelius S. (1985). Manual of Mineralogy (20th ed.). Wiley. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7.
  3. "The mineral diaspore". minerals.net. பார்க்கப்பட்ட நாள் June 10, 2014.
  4.  ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Spencer, Leonard James (1911). "Diaspore". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. Cambridge University Press. 168-169. 
  5. "டயாஸ்பாோ்". அறிவியல் களஞ்சியம் தொகுதி 11. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 7 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிச்செதில்_கல்&oldid=3850833" இலிருந்து மீள்விக்கப்பட்டது