கவலை போக்கி பொம்மை
கவலை போக்கி பொம்மை அல்லது குழப்பம் நீக்கும் பொம்மைகள் (Worry dolls அல்லது trouble dolls; எசுப்பானியம்: Muñeca quitapena) என்பவை கையால் செய்யப்படும் சிறிய பொம்மைகளாகும். இவை குவாத்தமாலாவில் தோன்றியவை இவை மெக்சிகோவிலும் காணப்படுகின்றன. மெக்சிகோவுக்கும் குவாதமாலாவுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் நினைவுப் பொருளாகவும் குழந்தைகளுக்குத் துணையாகவும் வாங்கிச் செல்லும் மிகப் பிரபலமான பரிசுப்பொருட்களாக இந்தப் பொம்மைகள் உள்ளன.
விளக்கம்
[தொகு]கவலை போக்கும் பொம்மைகள் பெரும்பாலும் கைகளால் செய்யப்படுகின்றன. குவாதமாலா நாட்டில் இவை சிறிய கம்பி, கம்பளி மற்றும் வண்ணத் துணித் துண்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மாயன் ஆதிவாசிகள் அணியும் உடைகளைப் போன்று இந்தப் பொம்மைகளின் ஆடையமைப்புகள் உள்ளன. பொம்மைகளின் அளவு ½ அங்குலம் மற்றும் 2.0 அங்குலம் இடையே வேறுபடலாம்.[1] மேற்கத்திய நாடுகளில், இந்த பொம்மைகள் பெரும்பாலும் அழுத்தப்பட்ட காகிதம், பிசின் பட்டை, காகிதம் மற்றும் வண்ணக் கம்பளி போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இங்கே பொம்மைகளின் அளவு ஓரளவு பெரியதாக இருக்கின்றன.[2]
நம்பிக்கைகள்
[தொகு]மாயன் இளவரசி எக்ஸ்ம்யூகேன் சூரியக் கடவுளிடமிருந்து சிறப்பு வாய்ந்த ஒரு பொம்மையைப் பெற்றார். அந்தப் பொம்மையை இரவில் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் போதும்; அவரது கவலைகள் எல்லாம் காலையில் எழும்போது நீங்கிவிடும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதைப்போல சோகமாகவும் வருத்தமாகவும் காணப்படும் குழந்தைகளுக்கு இந்தக் கவலை போக்கும் பொம்மைகள் தரப்படுகின்றன. அந்தக் குழந்தைகள் தங்கள் வருத்தங்கள், அச்சங்களை அந்த பொம்மைகளிடம் சொல்லிவிட்டு, பின்னர் அதனைத் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை தூங்கி எழும்போது அத்தனை துயரங்களும் அந்தப் பொம்மையால் அகற்றப்பட்டிருக்கும் என்று நம்புகிறார்கள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Charles E. Schaefer, Donna Cangelos: Essential Play Therapy Techniques: Time-Tested Approaches. Guilford Publications, New York 2016, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1462524516, page 102.
- ↑ Nicole Joiner, Dagmar Rücker: Knüllen, falten, schneiden, färben: Kunterbunte Ideenkiste für Kinder von 3–8 Jahren. Ökotopia Verlag, Münster 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3867021163, page 41.
- ↑ ஷங்கர் (14 பெப்ரவரி 2018). "கவலை போக்கும் முனேகா டபினாஸ்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)