கிரா பூசந்தி
கிரா பூசந்தி அல்லது கிரா குறுக்குநிலம்; (மலாய்: Segenting Kra; ஆங்கிலம்: Kra Isthmus; தாய்லாந்து மொழி: คอคอดกระ) என்பது மலாயா தீபகற்பத்தையும்; தாய்லாந்து நாட்டையும் பிரிக்கும் ஒரு குறுக்கு நிலமாகும்.
இந்தப் பூசந்தி தாய்லாந்து நாட்டின் தென்பகுதியில் அமைந்து உள்ளது. மேற்குப் பகுதியில் அந்தமான் கடல்; கிழக்கில் தாய்லாந்து வளைகுடா எல்லைகளாக உள்ளன.
அமைப்பு
[தொகு]கிரா பூசந்தியின் மேற்குப் பகுதி தாய்லாந்தின்ரானோங் மாநிலத்திற்குச் சொந்தமானது (Ranong Province). கிழக்குப் பகுதி சும்போன் மாநிலத்திற்குச் சொந்தமானது (Chumphon Province). இவை இரண்டும் தெற்கு தாய்லாந்தில் உள்ளன.[1]
திபெத்தில் இருந்து தீபகற்ப மலேசியா வழியாகச் செல்லும் தெனாசிரிம் மலைத்தொடருக்கு (Tenasserim Hills) இடையில் இந்தக் கிரா பூசந்தி அமைந்து உள்ளது. இதன் நீளம் 400 கிமீ (250 மைல்).[2]
தெனாசிரிம் மலைக்காட்டுச் சுற்றுச் சூழல்
[தொகு]கிரா பூசந்தி, தென் தாய்லாந்தின் அழகிய தெனாசிரிம் பசுமை மலைக்காட்டுச் சுற்றுச் சூழலில் அமைந்து உள்ளது.[3]
தாய்லாந்து கால்வாய்
[தொகு]2015-ஆம் ஆண்டில் கிரா பூசந்தியில் தாய்லாந்து கால்வாய் (Thai Canal) அமைப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பட்டது. இந்தக் கால்வாய், தாய்லாந்து வளைகுடாவை அந்தமான் கடலுடன் இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு உள்ளது.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Loftus, Alfred John (1883). Notes of a journey across the Isthmus of Krà.
- ↑ Gupta, A. The Physical Geography of Southeast Asia
- ↑ Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Washington, DC: Island Press.
- ↑ Griffith University (23 March 2010). "Thai Canal Project: Over 300 years of conceptualising and still counting". Asian Correspondent. Hybrid News. Archived from the original on 26 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.