குழலிணைவு
குழலிணைவு என்பது நிலைகருவற்ற உயிர்களில் நடைபெறும் மரபணு கடத்தல் நிகழ்வு ஆகும். இணையும் இரு உயிரணுக்கள் சிறு குழல் அல்லது குழாய் போன்ற நீட்சிகள் மூலம் இணைக்கப்படுகின்றன. இச்சிறு குழலுக்கு பைலசு (Pilus) எனப்பெயர். இவைகளுக்கு வளமையான அல்லது செழிப்பு செயலிகள் (Fertility factors) இன்றியமையாத பங்காற்றுகின்றன. இவ் செயலிகள் வளமை அல்லது செழிப்பு கணிமிகளிடம் (F-plasmid) இருந்து பெறப்படுகின்றன. பைலசுகள், இணையும் இரு உயிரணுக்களை பிணைந்து அதனின் வழியாக கணிமிகள் ஒரு செல்லில் இருந்து மற்ற உயிரணுக்கு கடத்தும். இவ்வாறு இனச்செல்கள் இல்லமால் மரபணு கடத்தப்படுவதை பாலுறவு சாரா மரபணு கடத்தல் எனப்படும். கணிமிகள் ஒரு செல்லில் இருந்து மற்ற செல்லுக்கு கடத்தபடுவதற்கு டி. என். ஏ பாலிமரேசு முக்கியாமாகும். இவ்வாறு ஒரு செல்லில் இருந்து மற்ற செல்லுக்கு குழலிணைவு மூலம் கணிமிகள் மாற்றப்படுவதை உருமாற்றம் (transformation) எனவும் அழைக்கப்படும். எ.கா. Staphylococcus aurius என்னும் நிலைகருவற்ற உயிரில் இரு வகைகள் உள்ளன.
௧. வீரியம் உள்ளவை (virulence)- இவைகள் மாந்தருக்கு நோயெய் தூண்டுபவை.
௨. வீரியம் அற்றவை (Non- virulence) - இவைகளால் மாந்தருக்கு நோயெய் உண்டாக்க முடியாது.
இவைகளுக்கு ஏற்படும் குழலிணைவு நிகழ்வால் வீரியம் உள்ள செல்லில் இருந்து மாற்றப்படும் கணிமிகளால் வீரியம் அற்ற செல்களும் நோயெய் தூண்டும் தன்மையெய் அடைகின்றன.