உள்ளடக்கத்துக்குச் செல்

சரிகம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிகம இந்தியா
வகைபொது
நிறுவுகை13 ஆகத்து 1946 (தி கிராமபோன் கம்பெனி), 3 நவம்பர் 2000 (சரிகம)
தலைமையகம்கொல்கத்தா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
தொழில்துறைசில்லறை
தாய் நிறுவனம்ஆர்பிஜி குழுமம்
இணையத்தளம்http://www.saregama.com/

சரிகம இந்தியா லிமிடெட். (சரிகம என்பது இந்திய இசை அளவின் முதல் நான்கு குறிப்புகளைக் குறிக்கிறது) என்பது ஆர்.பி.சஞ்சீவ் கோயங்கா குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தியாவின் பழமையான இசை சிட்டை ஆகும்.[1][2]

இந்நிறுவனம் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் பதியப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள பிற அலுவலகங்கள் அமைந்துள்ளது. பட்டியலிடப்பட்டுள்ளது. இசையைத் தவிர, யூடுல் பிலிம்ஸ் என்னும் பெயரின் கீழ் திரைப்படங்கள் மற்றும் பல மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கிறது.[3]

அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் திரைப்பட இசை, கர்நாடக, இந்துஸ்தானி மரபு, பக்தி போன்றவற்றில் இசைக் களஞ்சியத்தை சரிகம வைத்துள்ளது. 1902 ஆம் ஆண்டில் கௌஹர் ஜான் இந்தியாவில் பதிவு செய்த முதல் பாடல். 1931 ல் பாலிவுடில் தயாரான முதல் படமான 'ஆலம் அரா' போன்றவை இந்த இசை சிட்டையின் கீழ் இருந்தன. லாதா மங்கேஷ்கர், எம்.எஸ்.சுப்பலட்சுமி, ஷம்ஷாத் பேகம், ஆஷா போஸ்லே, முகமது ரபி, கிஷோர் குமார், முகேஷ், ஜக்ஜித் சிங், பண்டிட் பீம்சன் ஜோஷி, பண்டிட். ஜஸ்ராஜ், சாம்கிலா, குர்தாஸ் மான். ஆகியோர் சரேகாமாவுடன் தங்கள் இசையைத் தயாரித்த சில முக்கிய இந்திய கலைஞர்கள்.

இந்நிறுவனம் தனது பட்டியலை விரிவுபடுத்தி 14 வெவ்வேறு மொழிகளில் இந்திய இசையின் ஒலி பதிவு மற்றும் பதிப்புரிமை இரண்டின் மிகப்பெரிய உலகளாவிய உரிமையாளராக மாறியுள்ளது.[4]

வரலாறு

[தொகு]

இஎம்ஐ

[தொகு]

1901 ஆம் ஆண்டில், இ.எம்.ஐ லண்டனின் எலக்ட்ரிக் அண்ட் மியூசிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு கிளையாக இந்தியாவில் முதல் பாடலைப் பதிவுசெய்து நிறுவனம் செயல்படத் தொடங்கியது.[5] இது கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) தி கிராமபோன் மற்றும் டைப்ரைட்டர் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு, கிராமபோன் கண்டுபிடிப்பாளர் எமிலி பெர்லினரின் உதவியாளர் பிரெட் கின்ஸ்பெர்க் "[அதன்] இசையை கைப்பற்றும் நோக்கில்" இந்தியாவுக்கு வந்தார். கௌஹர் ஜான் 1902 ஜனவரி 5 ஆம் தேதி அங்கு பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய கலைஞரானார். 1907 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் உள்ள டம் டம் என்ற இடத்தில் ஒரு பதிவு தொழிற்சாலை தொடங்கப்பட்டது, இது இங்கிலாந்துக்கு வெளியே முதல் முறையாகும்.[6]

ஆகஸ்ட் 13, 1946 இல், இது 'தி கிராமபோன் கோ. (இந்தியா) லிமிடெட் ' என்ற பெயரில் ஒரு தனியார் வரையறுக்கப் பட்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இது அக்டோபர் 28, 1968 அன்று ஒரு பொது நிறுவனமாக மாற்றப்பட்டது. இதன் விளைவாக நிறுவனத்தின் பெயர் 'தி கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் ' என மாற்றப்பட்டது.[7] நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம் மோசமாக இருந்தபோது 1985 ஆம் ஆண்டில் ஈ.எம்.ஐ.யில் இருந்து ஆர்பிஜி குழுமம் நிறுவனத்தை எடுத்துக் கொண்டது. பின்னர் நிறுவனத்தின் பெயர் தி கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் என்பதிலிருந்து அதன் தற்போதைய பெயர் சரிகம இந்தியா லிமிடெட் என 3 நவம்பர் 2000 அன்று மாற்றப்பட்டது.

சரேகாமா கார்வான், ஒரு பல்நோக்கு பெயர்த்தகு இசை இயக்கி மே 2017 இல் வெளியிடப்பட்டது.

எச்எம்வி

[தொகு]

முதல் 100 ஆண்டுகளுக்கு, நிறுவனம் அதன் தயாரிப்புகளை (வினைல்கள், ஒலி நாடாக்கள், குறுவட்டுக்கள்) எச்.எம்.வி [8] என்ற பெயரில் விற்பனை செய்தது. 2000 முதல், சரிகம என்ற வணிகக்குறியில் தனது தயாரிப்புகளை சில்லறை விற்பனை செய்யத் தொடங்கியது.

டம் டம் பதிவு அரங்கம்

[தொகு]

டம் டம் ஸ்டுடியோ என்று அழைக்கப்படும் சரிகமவின் பதிவு அரங்கம் 1928 இல் கல்கத்தாவில் கட்டப்பட்டது.[9] இது தென்கிழக்கு ஆசியாவின் பழமையான ஸ்டுடியோக்களில் ஒன்றாகும். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் தனது பாடல்களையும் கவிதைகளையும் தனது சொந்த குரலில் இந்த பதிவு அரங்கத்தில் பதிவு செய்திருந்தார். கவிஞர் காஸி நஜ்ருல் இஸ்லாமின் குரல் இங்கு பதிவு செய்யப்பட்டது. டம் டம் பதிவு அரங்கம் கிராமபோன் தட்டுக்களின் உற்பத்திக்கான ஒரு வீடாகவும் பின்னர் ஒலி நாடாக்களை தயாரிக்கும் இடமாகவும் இருந்தது. எண்ணிம வடிவங்களின் வருகையுடன், வண் வடிவங்கள் படிப்படியாக நுகர்வோர் ஆதரவில் இருந்து வெளியேறின. இதன் விளைவாக, இந்த உற்பத்தி வசதிகள் மூடப்பட்டன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

[தொகு]

தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை அலைவரிசை
2022 -ஒளிபரப்பில் இலக்கியா நாடகத் தொடர் சன் தொலைக்காட்சி
2022 -ஒளிபரப்பில் இனியா
2020-ஒளிபரப்பில் அன்பே வா

முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள்

[தொகு]
ஆண்டு தலைப்பு வகை அலைவரிசை
2001-2002 சூலம் நாடகத் தொடர் சன் தொலைக்காட்சி
2002-2003 வேலன்
சிகரம்
2003-2007 மை டியர் பூதம்
2005-2007 ராஜராஜேஸ்வரி
முகங்கள்
2007-2008 வேப்பிலைக்காரி
2007-2012 அத்திப்பூக்கள்
2008-2010 புவனேஸ்வரி
2010-2012 பொண்டாட்டி தேவை
2012-2017 பைரவி
2012-2014 பிள்ளை நிலா
2012-2019 வள்ளி
2014-2022 சந்திரலேகா
2018-2022 ரோஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New IPL teams: Sanjiv Goenka's New Rising gets Pune, Intex gets Rajkot". The Economic Times. 2018-12-09. https://economictimes.indiatimes.com/news/sports/new-ipl-teams-sanjiv-goenkas-new-rising-gets-pune-intex-gets-rajkot/articleshow/50089432.cms. 
  2. "How data is helping India’s oldest music company Saregama revive its fortunes | FactorDaily". FactorDaily. 2017-06-14. https://factordaily.com/carvaan-saregama-data-music-radio/. 
  3. "SaReGaMa's production house Yoodlee Film's to release BrijMohan Amar Rahe on 1st December 2017". International Business Times. 2017-11-21. http://www.ibtimes.co.in/photos/saregamas-production-house-yoodlee-films-release-brijmohan-amar-rahe-1st-december-2017-14197-slide-77755. 
  4. "Saregama Carvaan: Nostalgia in a box". www.fortuneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  5. "Saregama India Ltd". Money Control. 2018-03-23. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.
  6. "RPG Music: House of Music". Archived from the original on 11 May 1997. பார்க்கப்பட்ட நாள் 15 November 2018.
  7. "Saregama India Ltd.". The Economic Times. 2018-03-23. https://economictimes.indiatimes.com/saregama-india-ltd/infocompanyhistory/companyid-13704.cms. 
  8. "Saregama plans to sell land in revival bid". The Hindu Business Line. 2004-05-08. https://www.thehindubusinessline.com/2004/05/08/stories/2004050802140200.htm. 
  9. "The house of vinyl". Livemint. 2010-09-23. http://www.livemint.com/Leisure/7CfWBoy2w5ezqPB5f4ndzM/The-house-of-vinyl.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிகம&oldid=3691112" இலிருந்து மீள்விக்கப்பட்டது