சார்லஸ் மார்ட்டின் ஹால்
சார்லஸ் மார்ட்டின் ஹால் | |
---|---|
சார்லஸ் மார்ட்டின் ஹால் | |
பிறப்பு | தாம்ப்சன், ஒகையோ | திசம்பர் 6, 1863
இறப்பு | திசம்பர் 27, 1914 டேடொனா, புளோரிடா | (அகவை 51)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
Significant advance | ஹால்-ஹெரௌல்ட் முறை (Hall-Héroult process) |
சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall, டிசம்பர் 6, 1863 – டிசம்பர் 27, 1914) அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் இசை ஆர்வலர். மக்கள் ஆதியில் இருந்தே பயன்படுத்தி வரும் இரும்புக்கு மாற்றாக தற்போது பரவலாகப் பயன்பட்டுவரும் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது பற்றிய மார்ட்டின் ஹாலின் கண்டுபிடிப்பு உலோகங்களின் வரலாற்றை மாற்றியமைத்தது.[1]
இளமை
[தொகு]அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தாம்ப்சன் எனும் ஊரில் சார்லஸ் மார்ட்டின் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமேன் பேசட் ஹால். தாயார் சோப்ரொனியா ஹெச். புரூக் ஹால் ஆவர். 1873-ல் இவருடைய குடும்பம் ஓபெர்லின் பகுதிக்குக் குடியேறியது. அங்கு மார்ட்டின் ஹால் தனது உயர் கல்வியைத் தொடங்கினார். இசையில் ஆர்வமிருந்ததால், இசையை ஒரு துணைப்பாடமாக எடுத்துப் படித்தார். 1880-ல் ஓபெர்லின் கல்லூரியில் சேர்ந்து 1885-ல் கலைப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] கலைப்பாடத்தில் பட்டம் பெற்ற போதும் அறிவியல் சோதனைகளிலும் ஆய்வுகளிலும் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒரு முறை தனது பேராசிரியர் பிராங்க் பன்னிங் ஜூவெட்ட் (Frank Fanning Jewett) ஒரு சிறிய அலுமினியத் துண்டினைக்காட்டி இதனை யார் எளிதான முறையில் தயாரிக்கிறார்களோ, அவர்கள் மிகப் பெரும் செல்வந்தராவார்கள் என விளக்கினார். இதனால் உந்தப்பட்ட மார்ட்டின் அதனை ஆராயும் சோதனையில் ஈடுபட்டார்.
ஆய்வுகள்
[தொகு]தனது ஆய்வுக்கு ஓபெர்லின் கல்லூரியின் ஆய்வகத்தை மார்ட்டின் பயன்படுத்தி வந்தார். பின்னர் அவரது வீட்டின் பின்புறம் மரத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறையே அவருடைய ஆய்வகம். அவருடைய சகோதரி மற்றும் பேராசிரியர் ஜூவெல்ட் ஆகியோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்ததால் தனது அறிவியல் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். எட்டு ஆண்டுகள் ஓயாது செய்த ஆய்வின் பயனாக 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.[3] அலுமினாவை, கிரியோலைட்டில் கரைத்து அதன் வழியே மின்சாரத்தைச் செலுத்தி அலுமினிய உலோகத்தைப் பிரித்தெடுத்தார். தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமைக்காக 1886-ல் விண்னப்பித்தார்.[4] (காப்புரிமை எண் Patent Number(s) 400,665)[5] இதே ஆண்டில் பிரான்சு நாட்டின் பால் ஹெரௌல்ட் என்பவர் இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார்.[6]
நிறுவனர்
[தொகு]பிட்ஸ்பெர்க் சென்ற மார்ட்டின் ஹால் அங்கு சில முதலீட்டாளர்களின் துணையால் 1888-ல் 'பிட்ஸ்பர்க் ரிடக்சன் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் வணிகமுறையில் அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டது. மார்ட்டின் ஹாலின் உற்பத்தி நடவடிக்கை காரணமாக அலுமினியம் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. எளிதாகப் பெறப்பட்டதால் அலுமினிய விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிறுவனம் 1907 முதல் 'அமெரிக்க அலுமினிய நிறுவனம்' (Aluminum Company of America (Alcoa)என்ற பெயரில் இயங்கி வருகிறது [7]
சிறப்பு
[தொகு]மார்ட்டின் தனது 25 ஆண்டுகால கடின உழைப்பால் அலுமினியத் தொழில்துறையில் ஒரு மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினார். இவருடைய பணிகளைப் பாராட்டி இவருக்கு பெர்கின் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பட்டம் பயின்ற ஓபெர்லின் கல்லூரியில் இவருக்கு அலுமினியத்தாலான சிலையை நிறுவி கிரானைட் கல்லில் பதித்து கல்லூரி நிர்வாகம் சிறப்பு செய்துள்ளது.
மறைவு
[தொகு]கிடைத்தற்கரிய உலோகமாக இருந்த அலுமினியத்தைத் தனது கண்டுபிடிப்பின் மூலம் விலை மலிவாக மாற்றிய மார்ட்டின் ஹால், 1914-ல் டிசம்பர் 27-ஆம் நாள் டைட்டோனா கடற்கரையில் காலமானார்.[8]
உதவி நூல்
[தொகு]ஆர். வேங்கடராமன், 'முழுமை அறிவியல் உலகம்', பக். 3612
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆர். வேங்கடராமன், 'முழுமை அறிவியல் உலகம்', பக். 3612
- ↑ http://www.corrosion-doctors.org/Biographies/HallBio.htm
- ↑ பிரிட்டானிகா இணைய தகவல் களஞ்சியம்
- ↑ "Charles Martin Hall: aluminum's 'boy wonder'". Archived from the original on 2009-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ [1]
- ↑ http://www.oberlin.edu/external/EOG/OYTT-images/CMHall.html
- ↑ The Encyclopedia Americana -- International Edition Vol. 13. Danbury, Connecticut: Grolier Incorporated, 1995. 717
வெளியிணைப்புகள்
[தொகு]- Oberlin College archieves பரணிடப்பட்டது 2007-10-16 at the வந்தவழி இயந்திரம்
- http://inventors.about.com/library/inventors/blaluminum.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- http://acswebcontent.acs.org/landmarks/landmarks/al/hall_bio.html பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
- http://ibchem.com/IB/ibnotes/full/ope_htm/hall_cell.htm
- அல்கோ.காம்
- http://www.invent.org/hall_of_fame/72.html பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்