சித்தன்னவாசல்
Appearance
Sithanavasalத
சித்தன்னவாசல் | |
---|---|
village | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,629 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
சித்தன்னவாசல் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்த தொல்லியல் சிறப்பு மிக்க பகுதி ஆகும்.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்தன்னவாசலின் மொத்த மக்கள் தொகை 1629. இதில் 805 ஆண்களும், 824 பெண்களும் இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 650 பேர் கல்வியறிவு பெற்றுள்ளார்.
சமணர்களின் புகழ்பெற்ற வரலாற்று சுவர் ஓவியங்கள் (இது அஜந்தா ஓவியங்களைப் போல் உள்ளவையாகும்) இங்குள்ள குகைகளில் காணப்படுகின்றன. இங்கு பாறைகளால் ஆன சமணர் படுகைகள் உள்ளன.[1][2] பாறைகளால் வடிவமைக்கப்பட்ட சமணப்படுகைகள் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் பராமரிக்கப்படுகிறது.