சிவெத்லானா சவீத்சுக்கயா
சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா Svetlana Yevgenyevna Savitskaya | |
---|---|
விண்வெளி வீரர் | |
தேசியம் | சோவியத் / ரஷ்யர் |
பிறப்பு | ஆகத்து 8, 1948 மாஸ்கோ, உருசியா |
வேறு தொழில் | வானோடி பொறியாளர் |
விண்பயண நேரம் | 19நாள் 17மணி 06நிமி |
தெரிவு | 1980 |
பயணங்கள் | சோயுஸ் டி-7, சல்யூட் 7, சோயுஸ் டி-5, சோயுஸ் டி-12 |
சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா (Svetlana Yevgenyevna Savitskaya, உருசியம்: Светла́на Евге́ньевна Сави́цкая; பிறப்பு: ஆகத்து 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்).
சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.[1][2]
இரண்டு தடவைகள் "சோவியத் வீரர்" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.[3]
சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographies of USSR / Russian Cosmonauts". Space Facts. 9 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
- ↑ "Space welding anniversary!". Orbiter-Forum. Jelsoft Enterprises Ltd. 16 July 2009. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
- ↑ Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names, Volume 1. New York: Springer. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.
- ↑ "Role in Russian State Duma". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-06-23.