சுடூயட்சைட்டு
சுடூட்சைட்டு Stützite | |
---|---|
மெக்சிகோ நாட்டில் கிடைத்த சுடூயட்சைட்டு கனிமம். அளவு:3.7 x 3.3 x 1.7 செ.மீ) | |
பொதுவானாவை | |
வகை | தெலூரைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Ag5−xTe3 (with x = 0.24 to 0.36) |
இனங்காணல் | |
நிறம் | அடர் ஈயம்-சாம்பல் |
படிக இயல்பு | பாரிய, கச்சிதமான, சிறுமணிகள் |
படிக அமைப்பு | அறுகோணம் |
பிளப்பு | அறியப்படவில்லை |
முறிவு | துணை சங்குரு |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 8.0 |
Alters to | விரைவாக மங்கும் அடர் வெண்கலம் |
பிற சிறப்பியல்புகள் | திசை மாறுபாட்டுப்பண்பு: மிதமான, சாம்பல் சிவப்பு பழுப்பு-நீலம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
சுடூயட்சைட்டு (stuetzite) என்பது Ag5−xTe3 (x = 0.24 முதல் 0.36) அல்லது Ag7Te4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சுடூட்சைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது. இது வெள்ளி தெலூரைடு கனிமம் ஆகும்.
முதன்முதலில் 1951 ஆம் ஆண்டில் ருமேனியாவின் சகாரிம்பு சுரங்கத்திலிருந்து கிடைத்த ஒர் அருங்காட்சியக மாதிரியிலிருந்து இக்கனிமம் கண்டறியப்பட்டது. ஆசுத்திரிய கனிமவியலாளர் ஆண்ட்ரியாசு சேவேரியசு சுடூட்சு (1747-1806) என்பவர் நினைவாக கனிமத்திற்கு சுடூட்சைட்டு என்று பெயரிடப்பட்டது.
மற்ற சல்பைடு மற்றும் தெலூரைடு கனிமங்களுடன் நீர் வெப்பத் தாது மாற்றத்தால் சுடூயட்சைட்டு கனிமம் தோன்றுகிறது. சில்வாணைட்டு, எசைட்டு, அல்டைட்டு, பெட்சைட்டு, எம்பிரசைட்டு, தாயக தெலூரியம், தாயக தங்கம், கலீனா, சுபேலரைட்டு, கொலுசைட்டு, தெனன்டைட்டு மற்றும் பைரைட்டு ஆகிய கனிமங்கள் இக்கனிமத்துடன் சேர்ந்து காணப்படுகின்றன.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுடூயட்சைட்டு கனிமத்தை Stz[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.