சுவாபி மாவட்டம்
சுவாபி மாவட்டம்
صوابی | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் சுவாபி மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | Pakistan |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
கோட்டம் | மார்தன் |
தலமையிடம் | சுவாபி |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• Total | 1,543 km2 (596 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• Total | 16,25,477 |
• அடர்த்தி | 1,100/km2 (2,700/sq mi) |
• நகர்ப்புறம் | 2,75,964 |
• நாட்டுப்புறம் | 13,49,513 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 4 |
இணையதளம் | swabi |
சுவாபி மாவட்டம் (Swabi District) (பஷ்தூ: سوابۍ ولسوالۍ, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சிந்து ஆறு மற்றும் காபுல் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. இம்மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது. இம்மாவட்டத்தின் 96.4% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுவாபி மாவட்ட மக்கள் தொகை 16,25,477 ஆகும். அதில் ஆண்கள் 8,15,828 மற்றும் பெண்கள் 8,09,550 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 83.02% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 59.06% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 96.97% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 1086 பேர் உள்ளனர்.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சுவாபி மாவட்டம் 4 தாலுகாக்கள் கொண்டது.[2]அவைகள்:
- சுவாபி தாலுகா
- தோபி தாலுகா
- லகோர் தாலுகா
- ரசார் தாலுகா
மாகாண சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மாவட்டத்திலிருந்து கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து அனுப்பிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "Pakistan Tehsil Wise Census 2017 [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-11-29.
உசாத்துணை
[தொகு]- 1998 District Census report of Swabi. Census publication. Vol. 83. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.