உள்ளடக்கத்துக்குச் செல்

சோடா நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலி சோடா என அழைக்கப்படும் சோடாக் குப்பி
கார்பனேற்றப்பட்ட மென்பானம் ஒன்றில் கரியமில வளிமக் குமிழ்கள்

சோடா நீர் (soda water அல்லது carbonated water) என்பது நீருடன் கரியமில வாயு கலந்த வாயுக்குமிழ் உண்டாவதற்கேற்ப கார்பனேற்றிய சுவை மிகு நீராகும். 1768-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் மேதை ஜோசப் பிரீஸ்ட்லீ என்பவர் இம்முறையினைக் கண்டுபிடித்தார்.[1][2][3]

வரலாறு

[தொகு]

இங்கிலாந்தின் லீட்ஸ் நகருக்கு அருகில் ஜோசப் பிரீஸ்ட்லீ வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் பார்லியைக் கொண்டு பலவித உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு மதுவம் (ஈஸ்டு) மூலம் பார்லியைப் புளிக்கச் செய்து காய்ச்சிப் பதப்படுத்தி, அதனைப் பெரிய பெரிய பீப்பாய்களில் சேமித்து வைத்தனர். இந்த மதுவம் வளரும் போது அதிகமாகக் கரியமில வாயுவை வெளியிடும். இவை அந்தப் பீப்பாய்களில் புகை போலத் தங்கி விடும். இந்த வாயுவை ஜோசப் பிரீஸ்ட்லீ ஒரு காலிக் குவளைக்குள் பிடித்து அதில் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட அளவு கலந்தார். ஒரு விகிதத்தில் இந்த நீர் சுவையான நீராக மாறியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Twilley, Nicola; Graber, Cynthia (13 December 2016). "The Medical Origins of Seltzer". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. Jessica Krefting, MS, RD, LDN (September 1, 2018). "Seltzer or Sparkling Water: An Alternative to Flat Water". Journal of Renal Nutrition 28 (5): E33–E35. doi:10.1053/j.jrn.2018.07.001. https://www.jrnjournal.org/article/S1051-2276(18)30155-9/pdf. 
  3. Beckett, J. V. (1977). "Dr William Brownrigg, F.R.S.: Physician, Chemist and Country Gentleman". Notes and Records of the Royal Society of London 31 (2): 255–271. doi:10.1098/rsnr.1977.0016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9149. https://www.jstor.org/stable/531830. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடா_நீர்&oldid=4099153" இலிருந்து மீள்விக்கப்பட்டது