உள்ளடக்கத்துக்குச் செல்

டேமியன் மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேமியன் மார்ட்டின்
Damien Martyn
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேமியன் ரிச்சர்டு மார்ட்டின்
பிறப்பு21 அக்டோபர் 1971 (1971-10-21) (அகவை 53)
டார்வின் (ஆஸ்திரேலியா), Australia
பட்டப்பெயர்மார்ட்டோ
உயரம்1.81 m (5 அடி 11 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலக்கை மிதவேகப்பந்து வீச்சு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 353)27 நவம்பர் 1992 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு1 டிசம்பர் 2006 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 109)8 டிசம்பர் 1992 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப5 நவம்பர் 2006 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப சட்டை எண்30
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1991–2006மேற்கு ஆத்திரேலியா
1991லீசெசுடெர்சையர்
2003யார்க்சையர்
2010ராஜஸ்தான் ராயல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை Test ODI FC LA
ஆட்டங்கள் 67 208 204 299
ஓட்டங்கள் 4,406 5,346 14,630 8,644
மட்டையாட்ட சராசரி 46.37 40.80 49.25 42.79
100கள்/50கள் 13/23 5/37 44/73 10/61
அதியுயர் ஓட்டம் 165 144* 238 144*
வீசிய பந்துகள் 348 794 3,365 1,549
வீழ்த்தல்கள் 2 12 37 41
பந்துவீச்சு சராசரி 84.00 58.66 42.24 31.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/0 2/21 4/30 3/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
36/– 69/- 158/2 104/–
மூலம்: CricInfo, 12 மே 2019

டேமியன் ரிச்சர்ட் மார்ட்டின் (Damien Richard Martyn) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஒரு வர்ணனையாளர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் பிறந்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 1999-2000 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் முறையான ஒருநாள் துடுப்பாட்டப் போட்டின் அணியில் இடம்பெறுவதற்கு முன்புவரை 1992-1994 ஆம் ஆண்டில் அவ்வப்போது தேசிய அணியில் தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். 2001 ஆம் ஆண்டில் ஆண்டில் ஒரு வழக்கமான தேர்வுத் துடுப்பாட்ட வீரராக மாறினார். 2006 ஆம் ஆண்டில் விளையாட்டிலிருந்து மார்ட்டின் ஓய்வு பெறும்வரை தொடர்ந்து விளையாடினார். மரபார்ந்த நுட்பத்துடன் அடித்து விளையாடுவதில் மார்ட்டின் வல்லவர். வலது கை ஆட்டக்காரரான இவர் நடுவரிசை மட்டையாளராக களத்தில் இறங்கி விளையாடுவார். குறிப்பாக விக்கெட்டின் எதிர்திசையிலும் கவர் திசையிலும் நேர்த்தியாக அடித்து விளையாடுவதற்காகவும் நன்கு அறியப்பட்டார்.

மார்ட்டின் அவ்வப்போது நடுத்தர விரைவு வீச்சாளராகவும் பரவலாக அறியப்பட்ட கவர் திசை களத் தடுப்பாளராகாவும் இருந்தார். அத்திசையிலிருந்து ஓட்ட வெளியேற்றல் முறையில் வீர்ர்களை ஆட்டமிழக்கச் செய்வதில் வல்லவராக இருந்தார். எப்போதாவது விக்கெட் காப்பாளராகவும் முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாசுகர் கிண்ணத் தொடரின் நாயகனாக இவர் தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரில்தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்முறையாக துணைக் கண்டத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியினை ஆத்திரேலியா அணி தோற்கடித்தது. இவ்வெற்றிக்கு மார்ட்டின் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் 2005 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆத்திரேலிய நாட்டின் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆலன் பார்டர் பதக்கம் பெற்றார்.

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

மார்ட்டினுக்கு மூன்று வயதாக இருந்தபோது அவரது குடும்பம் மேற்கு ஆத்திரேலியாவின் பெர்த்திற்கு குடிபெயர்ந்தது. 1990 இல் அடிலெய்டில் உள்ள ஆத்திரேலிய துடுப்பாட்ட அகாதமிக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு இவர் கிர்ராவீன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அடுத்த ஆண்டில் மேற்கு ஆத்திரேலியாவுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தத் தொடரில் இவர் 51.37 என்ற மட்டையாட்ட சராசரியில் 822 ஓட்டங்கள் எடுத்தார்.

1994/95 ஆம் ஆண்டுகளில் 23 வயதில் மேற்கு ஆத்திரேலிய அணியின் தலைவராக மார்ட்டின் நியமிக்கப்பட்டார். தலைவராக நியமிக்கப்பட்ட மிக இளம் வயது துடுப்பாட்டக்காரர் எனும் பெருமை கிடைத்தது. அதே ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆத்திரேலியா அ அணியின் தலைவராகவும் இருந்தார். அடுத்த ஆண்டில் இவர் தனது மட்டையாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக, டாம் மூடிக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார்.[1].

செப்டம்பர் 1, 2007 அன்று, டெய்லி டெலிகிராப் பத்திரிகை மார்ட்டின் இந்திய கிரிக்கெட் லீக்கில் இணைந்ததாக அறிவித்தது.[2] இருப்பினும், அதன் பின்னர் அவர் தனது முதல் மகன் ரைடரின் பிறப்பு காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார். ஆனால் 2008 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் சேர்ந்தார்.

பன்னாட்டு போட்டிகள்

[தொகு]

தைரியமான அடித்து விளையாடும் வீரர் என்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1992 நவம்பரில் கபாவில் தேர்வு துடுப்பாட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். நடு வரிசையில் மட்டை பிடித்தார். 36 மற்றும் 15 ஓட்டங்கள் எடுத்தார் [3][4]. காயம் காரணமாக ஓவலில் நடைபெற்ற போட்டி தவிர அந்த பருவத்தில் அனைத்து தேர்வுப் போட்டிகளிலும் விளையாடினார்,

இருப்பினும் மார்ட்டினுடைய ஆட்டம் நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக இல்லை. இந்த தொடரில் மொத்தம் 168 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒருமுறை மட்டுமே 50 ஓட்டங்களை கடந்து 67 ஓட்டங்கள் எடுத்தார் [3][5]. அந்த பருவத்தில் மார்ட்டின் ஒருநாள் அணியிலும் உறுப்பினராக இருந்தார், பதினொரு போட்டிகளில் நான்கில் மட்டுமே தவறாமல் விளையாடினார்,

துடுப்பாட்ட சாதனைகள்

[தொகு]

67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4,406 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 165 ஒட்டங்கள் எடுத்துள்ளார். மார்ட்டினின் மட்டையாட்ட சராசரி 6.37 ஆகும். 208 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 5346 ஓட்டங்களை 40.80 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 56 ஓட்டங்கள் எடுத்தது ஆகும். மேலும் இவர் 204 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 14,630 ஓட்டங்களை 49.25 எனும் சராசரியில் எடுத்தார். இவர் 238 ஓட்டங்களை எடுத்தார். 299 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடி 8,644 ஓட்டங்களை 42.79 எனும் சராசரியில் எடுத்த இவர் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 144* ஓட்டங்களை எடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cashman, Richard (1997). The A-Z of Australian cricketers.
  2. Damien Martyn joins Indian Cricket League
  3. 3.0 3.1 Cashman, Richard (1997). The A-Z of Australian cricketers.
  4. "1st Test: Australia v West Indies at Brisbane, 27 Nov – 1 Dec 1992". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2006-12-09.
  5. "Statsguru – DR Martyn – Tests – Innings by innings list1992". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2006-12-09.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேமியன்_மார்ட்டின்&oldid=3986729" இலிருந்து மீள்விக்கப்பட்டது