தெலுத்தா
Appearance
கிரேக்க நெடுங்கணக்கு | |||
---|---|---|---|
Αα | அல்ஃபா | Νν | நியூ |
Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
Δδ | தெலுத்தா | Ππ | பை |
Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
Ιι | அயோற்றா | Φφ | வை |
Κκ | காப்பா | Χχ | கை |
Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
Μμ | மியூ | Ωω | ஒமேகா |
அநாதையாய் | |||
Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
Ϻϻ | சான் |
தெலுத்தா (Delta, கிரேக்கம்: δέλτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் நான்காவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது நான்கு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான தலேட்டிலிருந்தே () தெலுத்தா பெறப்பட்டது. தெலுத்தாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து D, சிரில்லிய எழுத்து Д என்பனவாகும்.
தெலுத்தாவின் வடிவத்தில் (முக்கோண வடிவம்) கழிமுகம் இருப்பதனாலேயே (முக்கோண வடிவம்), அது ஆங்கிலத்தில் தெலுத்தா எனப் பெயர் பெற்றது.[3]
பயன்பாடுகள்
[தொகு]கணிதம்
[தொகு]பேரெழுத்துத் தெலுத்தா கணிதத்தில் தன்மைகாட்டியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
[தொகு]தெலுத்தாப் புயல் எனும் பெயர் 1972 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் 2005அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போதும் பயன்படுத்தப்பட்டது.[4]