தோல் சிவத்தல்
Appearance
ஐ.சி.டி.-10 | R23.2 |
---|---|
ஐ.சி.டி.-9 | 782.62 |
DiseasesDB | 19110 |
MeSH | D005483 |
தோல் சிவத்தல் (Rubor, flushing) என்பது ஒருவர் பல்வேறு உடலியக்கக் காரணங்களால் குறிப்பிட்ட அளவு முகம் மற்றும் பிற சருமப் பகுதிகளில் சிவந்திருத்தலைக் குறிக்கிறது. நெருங்கியத் தொடர்புடையதாக இருந்தாலும், தோல் சிவத்தல் முகம், காது மடல்கள், கன்னம் ஆகியவற்றில் மேலோட்டமாக ஏற்படும் முகம் சிவத்தலிலிருந்து (blushing) வேறுபடுகிறது. முகம் சிவத்தல் பொதுவாக மனவுளைவு, கோபம் அல்லது காதல்வயப்பட்டத் தூண்டுதல்கள் ஆகிய உணர்ச்சிகளின் அழுத்தங்களைப் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. தோல் சிவத்தல், குருதிச் சுற்றோட்டத்தில் புற்றனைய நோய்க்கூட்டறிகுறியினால் (குடல் மஞ்சள் கட்டி; carcinoid syndrome) ஏற்படும் இயக்குநீர் (செரடோனின், திசுநீர்த்தேக்கி) சுரப்புகளினாலும் ஏற்படலாம்.
காரணிகள்
[தொகு]தோல் சிவத்தலுக்கான சில காரணிகள் கீழேப் பட்டியலிடப்பட்டுள்ளன:
- அதிகளவு உயிர்ச்சத்து பி3 (நியாசின்) எடுத்துக்கொள்வது
- இழையவாதம் (fibromyalgia)
- உணர்ச்சிகள்: கோபம், மனவுளைவு (embarrassment)
- கடும் வெயில்
- கடுமையான இருமல்
- கடுமையான வலி
- காரமான உணவுவகைகள்
- குடல் மஞ்சள் கட்டி
- குரோமபின் திசுக்கட்டி (pheochromocytoma)
- குஷிங் கூட்டறிகுறி (Cushing's Syndrome)
- சூடான குளியல்
- திடீரென உடற் பயிற்சியை நிறுத்துதல்
- மதுசாரத்தினால் ஏற்படும் முகம்சிவத்தல்
- மதுசாரத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கலந்து உட்கொள்ளல்
- அதிதைராய்டியம்
- இதயத் துடிப்பு மிகைப்பு
- இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு
- இரத்தநாள விரிவூக்கிகள்
- ஒவ்வாமை அல்லது நோய்த்தொற்று)ஆகியவற்றால் ஏற்படும் அழற்சி[1]
- காஃவீன் நுகர்வு
- காய்ச்சல்
- கார்பனோராக்சைடு நச்சூட்டம்
- கேடயச்சுரப்பிப் புற்று
- தலைவலி
- திசுநீர்த்தேக்கி
- தும்மல்
- நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
- நீர்ப்போக்கு
- பாலுறவு
- புணர்ச்சிப் பரவசநிலை
- மதுசாரம், எரோயின், கோக்கைன் போன்ற கேளிக்கை மருந்துகள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Caughey GH (2011). "Mast Cell Proteases as Protective and Inflammatory Mediators". Adv Exp Med Biol 716: 212-234. doi:10.1007/978-1-4419-9533-9_12. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3954859/.