நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்
Appearance
வகை | பொதுத் துறை |
---|---|
முதன்மை நபர்கள் | இராதாகிருஷ்ணன் துரைராஜ் (CMD) ஏ. அருணாச்சலம்(இயக்குனர், தொழினுட்பம்& வியூகம்) [1] |
உரிமையாளர்கள் | விண்வெளித் துறை (DoS) [2] |
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited) என்பது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) வணிகப் பிரிவாகும். இது விண்வெளித் துறை (DoS) மற்றும் நிறுவனச் சட்டம் 2013 இன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் 6 மார்ச் 2019இல் நிறுவப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டங்களில் தொழில்துறை பங்களிப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். [3] [4] [5]
நோக்கங்கள்
[தொகு]இது பின்வரும் நோக்கங்களுடன் அமைக்கப்பட்டது: [6]
- சிறிய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை தொழில்துறைக்கு மாற்றுதல்: DoS/இஸ்ரோவிலிருந்து உரிமம் பெறுதல் , தொழில்துறைக்கும் இதனிடமிருந்து துணை உரிமம் பெறுதல்.
- தனியார் துறையுடன் இணைந்து சிறிய துணைக்கோள் ஏவுகலம் (SSLV) தயாரித்தல்
- இந்திய தொழில்துறை மூலம் துருவ துணைக்கோள் ஏவுகல (PSLV) உற்பத்தி
- ஏவுதல் உள்ளிட்ட விண்வெளி அடிப்படையிலான பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
- ISRO மையங்கள் மற்றும் DoS இன் தொகுதி அலகுகளால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் பரிமாற்றம்
- இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உபதயாரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகள்/சேவைகளை சந்தைப்படுத்தல்.
சான்றுகள்
[தொகு]- ↑ "NSIL functional directors". பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
- ↑ "NSIL About Us". பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "ISRO's new commercial arm NewSpace India officially inaugurated". smartinvestisor.business-standard.com. The Smart Investor. 2019-08-27. Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-27.
- ↑ "NewSpace India Limited (NSIL) - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2022-03-19. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
- ↑ Narasimhan, T. E. (2019-07-05). "Budget 2019: FM hikes Dept of Space outlay, pushes for commercialisation". Business Standard India இம் மூலத்தில் இருந்து 27 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190827143353/https://www.business-standard.com/budget/article/budget-2019-fm-hikes-dept-of-space-outlay-pushes-for-commercialisation-119070500973_1.html.
- ↑ "NewSpace India Limited". Press Information Bureau, Government of India. 24 Jul 2019. பார்க்கப்பட்ட நாள் 26 August 2019.