உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Hareesh Sivasubramanian

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரீஷ்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்த பயனர் சென்னையில் வசிப்பவர் ஆவார்.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 5 மாதங்கள்,  3 நாட்கள் ஆகின்றன.
33 இந்த விக்கிப்பீடியரின் வயது 33 ஆண்டுகள், 0 மாதங்கள் மற்றும் 12 நாட்கள்.
அக்டோபர் 31, 2024 அன்று
இந்தப் பயனர் தொழில்முறை வலை வடிவமைப்பாளர் ஆவார்
இந்தப் பயனர் மின்னணுவியலில் பயிற்சி பெற்றவர்
இந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
இந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர்


இவரை பற்றி

[தொகு]

பெயர் : ஹரீஷ்

பெற்றோர் : த.சிவசுப்பிரமணியன், ந.உமா

படிப்பு : இளநிலை பொறியியல் (மின்னணுவியல்)

பணி : வலை வடிவமைப்பு துறையில். (தற்போது மாணவர்)

சோழ நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இல் பிறந்து வளர்ந்தவர். பள்ளி படிப்பை முடித்து விட்டு இளநிலை படிப்பிற்காக சென்னை வந்தவர், அங்கேயே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். பின்னர் திருச்சி சென்று சுமார் மூன்று ஆண்டுகள் நண்பருடன் இணைந்து வலைத்தள உருவாக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்தில் (IIM, Ahmedabad) முதுநிலை மேலாண்மை படிப்பை பயின்றார்.

விக்கிப்பீடியாவில் இணைந்தது

[தொகு]

இவரது தந்தை சிவசுப்பிரமணியன் தமிழ் வேதத்தின் மீது ஆர்வம் கொண்டவர். இவரது தாய் வழி பாட்டனார் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. கு.நடராசன் (சுருக்கமாக கு. ந. அய்யா) அவர்கள். அப்பகுதியில் தமிழ் பயிற்சிக்கு மிகவும் பெயர் பெற்றவர். ஹரீஷ் பள்ளி படிப்பு முழுவதும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் பெற்றார் என்றாலும், பெற்றோரின் ஊக்கத்தினால் தமிழை கற்றார். தமிழ் மீது ஆர்வம் ஏற்பட இவரது தாத்தாவும் ஓர் முக்கிய காரணம்.

ஒரு முறை வன விலங்கு கணக்கெடுப்பிற்காக அஞ்செட்டி பகுதிக்கு சென்றவர், அங்கு தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பரான சுந்தர் அவர்களை சந்தித்தார். அவரால் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் செய்யபட, தமிழ் மீதுள்ள ஆர்வமும் ஈர்க்க, தானும் பங்களிக்க தொடங்கினார்.

தமிழில் தொடங்கிய கட்டுரைகள்

[தொகு]

பொழுது போக்குகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Hareesh_Sivasubramanian&oldid=2583231" இலிருந்து மீள்விக்கப்பட்டது