உள்ளடக்கத்துக்குச் செல்

பான்சுலோய் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்சுலோய் ஆறு
பான்சுலோய் ஆறு அம்ரபாராவில்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
மூலம்பான்சு மலை
 ⁃ அமைவுசாகிப்கஞ்சு மாவட்டம், சாந்தல் பார்கனாசு
முகத்துவாரம்பாகீரதி

பான்சுலோய் ஆறு (Bansloi River) பாகீரதி .ஆற்றின் கிளை ஆறு ஆகும்.

நிலவியல்

[தொகு]

இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் சாகிப்கஞ்சு மாவட்டத்தில் பான்சு மலையில் பான்சுலோய் ஆறு உருவாகிறது.[1] இது சார்க்கண்டின் பாகுட் மாவட்டம்[2] மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து வடக்கு ஜாங்கிபூரில் பாகீரதி ஆற்றுடன் இணைகிறது.[3][4]

முர்சிதாபாத் மாவட்டத்தின் மேற்குப் பகுதி கிழக்கு நோக்கி பாகீரதியை நோக்கிச் செல்கிறது; பல மலை ஓடைகள் இந்த நதியுடன் நேரடியாகச் செல்வதைக் காணவில்லை; இவை எதிராக ஓடும் ஓடைகள் அல்லது சதுப்பு நிலங்களால் தடுக்கப்படுகின்றன. இந்த நீரோடைகள் வெள்ள காலங்களின் போது பெரிய நீர்த்தேக்கங்களாகச் செயல்படுகின்றன. மேலும் அதிகப்படியான நீரை நீரோடைகள் வழியாக வெளியேறுகின்றன. பான்சுலோய் ஆறு மாவட்டத்தின் வடக்கு பகுதிக்குள் நுழைகிறது.[4]

பான்சுலோய் ஆற்றின் ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,200 சதுர கிலோமீட்டர்கள் (850 sq mi) ஆகும்.[5]

வெள்ளம்

[தொகு]

சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் அல்லது ஜான்கண்டில், பான்சுலோய் உட்படப் பல ஆறுகள் பிர்பம் மாவட்டத்தில் பாய்கின்றன. இந்த ஆறுகள் பாகிராதியில் சேருவதற்கு முன்பு முர்சிதாபாத் மற்றும் பர்தாமன் மாவட்டங்களுக்குள் நுழைகின்றன. ஜாங்கிபூர் மற்றும் கல்னா நகரங்களுக்கு இடையில் பாகீரதி நதியின் மட்டுப்படுத்தப்பட்ட திறன் மற்றும் அவற்றின் படுகைகளில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் இவை வெள்ளத்தை உருவாக்குகின்றன. இந்த வரம்பில் பாகீரதி நிமிடத்திற்கு 1,10,000 கன அடிவரை வெளியேற்றும் திறனுடையது. அனைத்து ஆறுகளும் தங்களது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒரே நேரத்தில் மழையைப் பெற்றால், நிமிடத்திற்கு 6,00,000 கன அடி நீர் நிமிடத்திற்கு வெளியேறுகிறது. இதனால் வெள்ளம் ஏற்படுகிறது.[6]

மேலும் காண்க

[தொகு]

இந்தியாவின் ஆறுகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jharkhand Rivers". mapsofindia. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
  2. "Pakur – a Land of Vibrant People and Black Stone". District administration. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
  3. "Bansloi River". India9. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
  4. 4.0 4.1 "Murshidabad district". Archived from the original on 5 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
  5. Roy, Jitendra. "The Deluge 2000" (PDF). Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.
  6. "Flood management". Irrigation & Waterways Department, Govt of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-04-11.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்சுலோய்_ஆறு&oldid=3183690" இலிருந்து மீள்விக்கப்பட்டது