பிச்சுவா
பிச்சுவா | |
---|---|
வகை | குத்துவாள் |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியத் துணைக்கண்டம் |
பிச்சுவா (Bichuwa அல்லது bichawa ( இந்தி: बिछुवा , உருது: بچھوا ) என்பது இந்திய துணைகண்டத்தில் தோன்றிய ஒரு குத்துவாள் ஆகும். இது அலை போன்று வலைந்த குறுகிய கூர்மையான கத்தியாகும். தேள் கொடுக்கை ஒத்த இதன் தோற்றத்தால் இதற்கு இந்திப் பெயரான பிச்சுவா என்ற பெயர் உண்டானது. இந்தக் கத்தியானது தென்னிந்திய திராவிடர்கள் உருவாக்கிய ஆயுதமான மட்டுவு அல்லது ஹார்ன் டாகரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதமாகும். மேலும் பிச்சுவா கத்தியானது எருமைக் கொம்பின் வடிவத்தை தன்னகத்தே கொண்ட கத்தி ஆகும். பிசுவாவின் துவக்கக்கால எடுத்துக்காட்டுகளானது, இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய விஜயநகர பேரரசில் இருந்து கிடைக்கிறது. இதைத் தயாரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதால், 20 ஆம் நூற்றாண்டிலும் பிச்சுவா ஒரு அலங்காரக் குத்துவாளாகத் தொடர்கிறது.
அமைப்பும் பயன்பாடும்
[தொகு]பிச்சுவா கத்தியானது பொதுவாக லேசாக வளைந்த வெட்டுப் பகுதியைக் கொண்டு இருக்கும். இது பொதுவாக சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும். சில பிச்சுவாக்கள் கைப்பிடியில் கைவிரல்களை பாதுகாக்கும் கண்ணிகளைக் கொண்டிருக்கும். தென்னிந்தியாவில் மத்தியக் காலத்தில் காணப்பட்ட பிச்சுவாக்களின் கைப்பிடியில் யாளியின் உருவத்தைக் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். சில பிச்சுவாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தகடுகளைக் கொண்டதாக இருக்கும்.
இந்த ஆயுதத்தில் சிறியவற்றை இடுப்பில் எளிதாக மறைத்துவைத்துக் கொள்வர். பாக் நாகாவுடன் இணைந்தவாறு உள்ள பிச்சுவாக்கள் உண்டு. பிச்சுவாவின் கைப்பிடியில் பாக் நாகா நகங்கள் சேர்க்கப்பட்தாகவோ அல்லது பாக்நாதாகவில் பிச்சுவா கத்தி இணைக்கப்பட்டதாகவோ இருக்கும். இந்த இந்த கலவையான ஆயுதமானது, பிச்சுவா பாக் நாகா என அழைக்கப்படும். 17ஆம் நூற்றாண்டில் மராத்திய தலைவரான சிவாஜியால் அப்சல் கானை படுகொலை செய்ய இது பயன்படுத்தப்பட்டது. சிவாஜியின் ஆயுதமானது பவானி அல்லது "உயிர் கொடுப்பான்" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால் இது அவரது வாளின் பெயர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்புகள்
[தொகு]- George Cameron Stone: A Glossary of the Construction, Decoration, and Use of Arms and Armor in All Countries and In All Times (1934)
- Dr Tobias Capwell (2009). The World Encyclopedia Of Knives, Daggers And Bayonets. Anness Publishing.