உள்ளடக்கத்துக்குச் செல்

பித்தப்பை புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பித்தப்பை புற்றுநோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-10C23.C24.
ஐ.சி.டி.-9156
நோய்களின் தரவுத்தளம்30714
ம.பா.தD005706

பித்தப்பைப் புற்றுநோய் என்பது பித்தப்பை உயிரணுக்களில் அரிதாகவே தோன்றும் புற்றுநோயாகும். பெண்களிடம் ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகிறது.ஆரம்ப அறிகுறிகளாக மஞ்சள் காமாலை, வயிற்றுவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, உப்புசம் முதலியனகாணப்படும். வயிற்றில் கட்டி காணப்படும்.

இந்நோயினை ஆரம்ப காலத்தில் கண்டு கொள்வது கடினமாகவே உள்ளது. பித்தப்பையினையும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் ஆய்ந்தே கண்டுகொள்ளப்படுகிறது. அவ்வாறே நோயின் நிலையினையும் தெரிந்து வரையறுக்கப்படுகிறது.சில காரணிகள் மருத்துவத்தின் போக்கையே சிக்கலாக்குகிறது.

பித்தப்பை ஈரலுக்குப் பின்னால் காணப்படும் பேரிக்காய் வடிவிலான வயிற்றுப் பகுதியில்அமைந்துள்ள ஓர் உறுப்பகும். இப்பையில் பித்தநீர் சேமிக்கப்படுகிறது.

ஈரலில் சுரக்கும் பித்தநீர் , கொழுப்பினைச் செரிக்க உதவுகிறது. ஈரலிலிருந்து வரும் பித்தக்குழாயும் பித்தப்பையிலிருந்து வரும் குழாயும் இணைந்து பொது பித்தக்குழாயாக முன் சிறு சிறுகுடல் பகுதியில் இணைகின்றன.நாம் உண்ணும் உணவு இரைப்பையிலும் குடலிலும் உடைக்கப்படும் போது, பித்தநீர் செயல்படுகிறது.

பித்தப்பை மூன்று சுவர்களையுடையது.உள் சுவர் சளிப்படலத்தால் ஆனது. அடுத்தது தசைப்படலம். அடுத்துவெளிப்படலம்.பித்தப்பையில் கல் இருப்பது அதில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாகாது. அறுவைமருத்துவத்தின் போதுதான் சில சமயங்களில் நோய் தெரியவருகிறது.

மீயொலி ஆய்வு,நோயினைத் தெரிந்து கொள்ள உதவக்கூடும். ஈரல் செயல்படும் முறை பற்றிய ஆய்வும் குருதியிலுள்ள சில வேதிப்பொருட்களும் ஈரலின் நிலையினைக் காட்ட உதவும். இந்த மாற்றங்கள் புற்றாலும் ஏற்படலாம். எக்சு கதிர் ஆய்வு , சி.டி,எம்.ஆர் .ஐ.ஆய்வுகளும் துணைபுரிகின்றன. அறுவை மருத்துவம், கதிர் மருத்துவம், வேதி மருந்துகள் நல்ல பலனைக் கொடுக்கின்றன.ஆரம்ப நிலையில் கண்டு கொண்டால், நல்ல குணமாக்கலாம்.

வேறுபாடு

[தொகு]

சேந்தோகிரானுலோமடோசு(Xanthogranulomatous cholecystitis =XGC) என்பது பித்தப்பையின் நோய்களில் அரிதானது ஆகும். இது பித்தப்பைப் புற்றுநோய் அறிகுறிகளைக் காட்டினாலும், இந்நோய் புற்றுநோய் அல்ல.[1][2] 1976 ஆம ஆண்டு இது பற்றிய மருத்துவ அறிக்கை மெடிகல் லிடிரேசர்( the medical literature) இதழில் ஜே. ஜே. மெக்காய் ( (J.J. McCoy, Jr.)என்பவரும், அவரது துணை ஆய்வாளர்களும் வெளியிட்டனர்..[1][3]


உசாத்துணை

[தொகு]
  • பாபா அணு ஆராய்ச்சி மையக் குறிப்புகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Makino I, Yamaguchi T, Sato N, Yasui T, Kita I (August 2009). "Xanthogranulomatous cholecystitis mimicking gallbladder carcinoma with a false-positive result on fluorodeoxyglucose PET". World J. Gastroenterol. 15 (29): 3691–3. doi:10.3748/wjg.15.3691. பப்மெட்:19653352. பப்மெட் சென்ட்ரல்:2721248. http://www.wjgnet.com/1007-9327/full/v15/i29/3691.htm. 
  2. Rao RV, Kumar A, Sikora SS, Saxena R, Kapoor VK (2005). "Xanthogranulomatous cholecystitis: differentiation from associated gall bladder carcinoma". Trop Gastroenterol 26 (1): 31–3. பப்மெட்:15974235. 
  3. McCoy JJ, Vila R, Petrossian G, McCall RA, Reddy KS (March 1976). "Xanthogranulomatous cholecystitis. Report of two cases". J S C Med Assoc 72 (3): 78–9. பப்மெட்:1063276. https://archive.org/details/sim_journal-of-the-south-carolina-medical-association_1976-03_72_3/page/78. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தப்பை_புற்றுநோய்&oldid=3520643" இலிருந்து மீள்விக்கப்பட்டது