உள்ளடக்கத்துக்குச் செல்

பியூஃபர்ட் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீஃபோர்ட் கடல் (Beaufort Sea, பிரெஞ்சு மொழி : Mer de Beaufort ) என்பது ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு கரை ஓரக்கடல் ஆகும். இது கனடாவின், வடமேற்கு நிலப்பகுதிகள், யூக்கான் மற்றும் அலாஸ்காவின் வடக்கே கனடாவின் ஆர்க்டிக் தீவுகளுக்கு மேற்கே அமைந்துள்ளது. இந்த கடலுக்கு நீராய்வியலாளரான சர் பிரான்சிஸ் பியூஃபோர்ட்டின் பெயரிடப்பட்டது. கனடாவின் மிக நீளமான ஆறான மெக்கன்சி ஆறானது, துக்டோயாக்டுக்கு மேற்கே கனேடியப் பகுதிக்குள் பியூஃபோர்ட் கடலில் சென்றடைகிறது. இந்த பகுதியானது கனடிய கடல் கரையில் உள்ள சில நிரந்தர குடியிருப்புகளில் ஒன்றாகும்.

இந்த கடலானது கடுமையான காலநிலையால் வகைப்படுத்தப்படும் கடலாகும். இது ஆண்டின் பெரும்பகுதிகளில் உறைந்து கிடக்கக்கூடியது. வரலாற்று ரீதியாக, ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், 100 km (62 mi) வரை ஒரு குறுகிய பாதை மட்டுமே அதன் கரையோரப் பகுதியியில் திறக்கப்படும் நிலை இருந்தது, ஆனால் சமீபத்தில் ஆர்க்டிக்கில் காலநிலை மாற்றம் காரணமாக கோடையின் பிற்பகுதியில் பனி இல்லாத பகுதி பெரிதும் விரிவடைந்துள்ளது. சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலோர மக்கள் தொகை இருந்ததாகக் கூறப்படும் கூற்றுக்கள் பெரும்பாலும் மதிப்பிழந்தன (கீழே காண்க); தற்போதைய மக்கள் அடர்த்தி மிகக் குறைவு. இக்கடல் பகுதியியல் உள்ள அமுலிகக் புலம் போன்ற பகுதியில் கீழே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவளி ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க வளங்கள் உள்ளன. அவை 1950 களுக்கும் 1980 களுக்கும் இடையிலான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றின் ஆய்வு 1980 களில் இருந்து இப்பகுதியில் முக்கிய மனித நடவடிக்கையாக மாறியது. மீன்வளத்தில் திமிங்கலம் மற்றும் நீர் நாய் வேட்டை ஆகிய பாரம்பரிய தொழில்கள் உள்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளன, மேலும் அவை வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை இல்லை. இதன் விளைவாக, வெள்ளைத் திமிங்கலங்களின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாக இந்தக் கடல் உள்ளது. மேலும் இக்கடல் பகுதியில் அதிகப்படியான மீன் பிடிப்பதற்கான அறிகுறியும் இல்லை. அதன் நீர் பகுதியில் அதிக மீன் அளவில் மீன் பிடிப்பதைத் தடுக்கும் விதமாக, 20009 ஆகத்தில் முன்னெச்சரிக்கை வணிக மீன்வள மேலாண்மை திட்டத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது. [1] ஏப்ரல் 2011 இல், கனேடிய அரசாங்கம் ஒரு பெரிய கடல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக இன்வுவலூட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. [2] கனேடிய அரசாங்கம் அக்டோபர் 2014 இல் பியூஃபோர்ட் கடலில் புதிய வணிக மீன் பிடிப்புகள் எதுவும் பரிசீலிக்கப்படாது என்று அறிவித்தது. [3]

கனேடிய அரசாங்கம் அமுண்ட்சனில் உள்ள பாரி தீபகற்பத்தில் இருந்து பியூஃபோர்ட் கடலின் புதிய தொகுதியை கடல் பாதுகாக்கப்பட்ட பகுதி (எம்.பி.ஏ) ஆக அறிவித்துள்ளது. [4] இதனால் இப்பகுதியில் உள்ள இனங்கள் மற்றும் பழக்கங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்துள்ளன.

எல்லை தகராறு

[தொகு]
கிழக்கில் குறுக்கு வெட்டு ஆப்பு வடிவ பகுதி கனடா மற்றும் அமெரிக்கா இரண்டாலும் உரிமை கோரப்படுகிறது.

கனேடிய மாகாணமான யூகோனுக்கும் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவிற்கும் இடையில், பியூஃபோர்ட் கடலில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு ஆப்பு வடிவ துண்டு சம்பந்தப்பட்ட தீர்க்கப்படாத தகராறு உள்ளது. அலாஸ்கா-யூகோன் நிலப்பரப்பைத் தொடர்ந்து 141 வது மெரிடியன் மேற்கில் 200 என்எம் (370 கிமீ; 230 மைல்) தூரத்திற்கு கடல் எல்லை இருப்பதாக கனடா கூறுகிறது. [5] அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்றால், எல்லைக் கோடு கடற்கரைக்கு செங்குத்தாக 200 nmi (370 km; 230 mi) தூரத்திற்கு உள்ளது. [6] இந்த வேறுபாடு சுமார் 21,000 km2 (8,100 sq mi) பரப்பளவு கொண்ட ஒரு ஆப்பு வடிவ பரப்பாக உள்ளது. [7]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூஃபர்ட்_கடல்&oldid=3254373" இலிருந்து மீள்விக்கப்பட்டது