பேச்சு:யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
மயூரநாதன், நல்ல கட்டுரை. இன்னும் வளர வேண்டிய கட்டுரை (உணவு வகைகள் பற்றியும், அவை ஆக்கும் வகைகள் பற்றியும், அவைகளின் சிறப்புக் கூறுகள் பற்றியும் விரித்து எழுதவேண்டியவை). மூலப்பொருட்களாக தாங்கள் கூறியவற்றுள் உளுத்தம் பருப்பு (உழுத்தம் பருப்பு என்பதும் சரியே. கூந்தியாவுழுந்து என்பது கருப்பு வகை உழுந்து), பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு முதலியன பயன்படுத்துவதில்லையா, அல்லது பின்னர் சேர்க்க எண்ணியுள்ளீர்களா? நாங்கள் சிறுவர்களாக இருந்தபொழுது (1955-1965), கம்பஞ்சோறு (கம்பு + சோறு) உண்டிருக்கின்றோம். இரண்டு கைப்பிடி உண்டாலே நாளெல்லாம் பசிக்காது. மிகவும் ஊட்டமான உணவு. வயல் வெளிகளிலே உழைக்கும் மக்கள் அக்காலங்களில் உண்ணுவது தமிழகத்திலே திருச்சி-சேலம் போன்ற மாவட்டங்களிலே வழக்கம். இப்பொழுது கம்பஞ்சோறு இருந்தால் மிக கிக அரிதாகவே இருக்கும் என எண்ணுகிறேன். தினைமா, குச்சிக் கிழங்கு, மற்றும் பல வகையான கீரை வகைகள் பற்றியும் வழக்கில் உள்ள அல்லது இருந்தபடி தொகுப்பது பயன் கூட்டும் என்று எண்ணுகிறேன். மிகப்பழங்காலத்தில் தமிழர்கள் ஆமையையும் ஈசல்களையும் உண்ட பழக்க வழக்ககளை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. என் நண்பர் நா.கணேசன் அது பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியுள்ளார். --C.R.Selvakumar 12:48, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
செல்வா, உங்கள் குறிப்புக்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட உழுந்து, கடலை, பயறு போன்ற பருப்பு வகைகளும், யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பயறு பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். கறி செய்ய உதவும் பருப்புவகைகள் பற்றிச் சிந்தித்ததால், உழுந்தும், கடலையும் விடுபட்டுப் போய்விட்டது. அவற்றைச் சேர்த்துவிடுகிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல் இது விடயத்தில் எழுதுவதற்கு நிறைய உண்டு. தொடர்ந்தும் விரிவாக்க எண்ணியுள்ளேன். நீங்கள் இக் குறிப்பு எழுதிய பின்னரும் மேலதிகமாகச் சிலவற்றைச் சேர்த்துள்ளேன். இக்கட்டுரையைச் சிறப்பாக விரிவாக்குவதில், உங்களுடையதும், ஏனைய பயனர்களுடைய கருத்துக்களும் மிகவும் பயன்படும். நன்றி Mayooranathan 14:21, 29 செப்டெம்பர் 2006 (UTC)
கட்டுரை அருமை மற்றும் யாழ்மக்களின்வழ்வோடு பின்னிப்பினைந்த பனை தரும் உண்வுப்பொருட்களைப்பற்றியும் கவனத்தில் கொள்க.போர்ச்சுழலில் உண்வு முறையில் ஏற்பட்டமாற்றம் பற்றியும் குறிக்க கலாநிதி 17:11, 29 செப்டெம்பர் 2006 (UTC)கலாநிதி
- கலாநிதி, உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் ஆலோசனைகள் பயனுள்ளவை. நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் பற்றியும் எழுதுவேன். யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கம் பற்றி மட்டுமன்றி, ஏனைய இலங்கை மற்றும் இந்தியத் தமிழர் உணவுப்பழக்கங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களுடன் எனக்கு நேரடி அனுபவம் இருப்பதனால், அதுபற்றி எழுதக்கூடியதாக உள்ளது. பிற பகுதிகளின் வழக்கங்கள் பற்றிப் போதிய பரிச்சயம் உள்ளவர்கள் அப்பகுதிகள் பற்றியும் எழுத வேண்டும். Mayooranathan 18:13, 29 செப்டெம்பர் 2006 (UTC)