பொத்துவில் அஸ்மின்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
பொத்துவில் அஸ்மின் (Pottuvil Asmin) | |
---|---|
பிறப்பு | யு. எல். எம். அஸ்மின் மே 2, 1983 அம்பாறை மாவட்டம் பொத்துவில், இலங்கை |
இருப்பிடம் | சென்னை |
பணி | ஊடகவியலாளர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். |
விருதுகள் | ஜனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011), கவிவித்தகன்(2015)
எடிசன் விருது(2015), சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (இரண்டு தடவைகள்-2010, 2011), கவிப்பிறை விருது (2018), பத்மசிரி DR.டீ.எம்.செளந்தராஜன் விருது(2018), கலைஞர் சுவதம் விருது (2019), கவியரசு கண்ணதாசன் விருது(2019), கலைச்சுடர் விருது(2019) |
யு. எல். எம். அஸ்மின் என்ற இயற்பெயரைக் கொண்ட பொத்துவில் அஸ்மின் (பிறப்பு: மே 2, 1983) ஓர் ஈழத்துக் கவிஞர்.[1] இவர் மரபுக் கவிதை எழுதிவரும் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். 2012 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் நடிப்பிலும் இசையிலும் வெளிவந்த நான் திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலை எழுதியதன் ஊடாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அதன் பின்னர் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இவர் எழுதிய முதல் இரங்கல் பாடல் "வானே இடிந்ததம்மா" இவருக்கு உலகத் தமிழரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் எழுதிய ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் இலங்கை தமிழ் இசை வரலாற்றில் 22 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் தமிழ் பாடலாகும் [2] கவிதைத் துறையில் சனாதிபதி விருது (2001) உட்படப் பல விருதுகளை பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் (2010, 2011) பெற்றுள்ளார்.[3]
கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த "கலைஞர்100 கவிதைகள் 100" கலைஞர் நூற்றாண்டு கவிதை நூலில் இவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மின், உதுமாலெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.[2] இவரது பூர்வீகம் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம். இவரது தாத்தா காலத்தில் இலங்கைக்கு குடிபுகுந்தனர். இவர் பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.
இலக்கிய ஆர்வம்
[தொகு]சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். 2007 ஆண்டில் தரம் 9ஆம் ஆண்டு படிக்கும்போது கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.[4] இவருடைய முதலாவது கவிதை 2000 ஆம் ஆன்டில் தினக்குரல் பத்திரிகையில் என்ன தவம் செய்தாயோ எனும் தலைப்பில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவரது கவிதைகள், சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள், பாடல்கள் இலங்கையின் தேசியச் செய்தித் தாள்கள், சிற்றிதழ்கள், அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள், இணையச் சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் மின்னணுவியல் ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன..[2]
வானொலி, தொலைக்காட்சிகளில்
[தொகு]இவரது படைப்புக்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இலங்கை ஊடகங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி, மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களிலும் இவரது படைப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.[2]
இதழாசிரியராக
[தொகு]2000களில் பொத்துவில் பிரதேசத்தை மையமாக கொண்டு வெளிவந்த தேடல் எனும் கலை, இலக்கியச் சிற்றிதழின் முதன்மை ஆசிரியராகவும் சுடர் ஒளி வார வெளியீட்டின் கவிதைப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்த இவர் உணர்வுகள் என்ற பகுதியில் ஈழநிலா என்ற புனைபெயரில் ஈழத்தின் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்கள் குறித்துத் தனது மனப்பதிவுகளை எழுதி வந்துள்ளார்..[2] 55 கிழமைகளாக இவரது பத்திகள் வெளிவந்துள்ளன.
ஊடகத்துறையில்
[தொகு]டான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் டான் தமிழ் ஒலி வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த இவர் இப்பொழுது வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றார். வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் தூவானம் கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான அரச விருதினைப் பெற்றுள்ளது.[5] இவர் வசந்தம் தொலைக்காட்சியில் தேன் சிந்தும் ராகங்கள் என்ற நிகழ்ச்சியினை தயாரித்து தொகுத்து வழங்குகின்றார்.
திரைப்படத்துறையில்
[தொகு]விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்திற்காகத் தப்பெல்லாம் தப்பே இல்லை... என்ற பாடலையும் எழுதியுள்ளார்.[6] பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்பப் பாடல் எழுதி அதில் 20000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று நான் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை இவர் பெற்றார்.[7]
செவ்வேளின் தயாரிப்பிலும் கேசவராஜனின் இயக்கத்திலும் வெளிவந்த பனைமரக்காடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் விமல் ராஜாவின் இசையில் உயிரிலே உன் பார்வையால் பூ பூத்ததே என்ற பாடலை எழுதியிருக்கின்றார்.[8]
இயக்குநர் சு.வரதகுமார் இயக்கிய வல்லைவெளி திரைப்படத்திலும் இசையமைப்பாளர் க. ஜெயந்தனின் இசையில் எங்கோ பிறந்தவளே என்ற பாடலை எழுதியிருக்கின்றார்.[9]
நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் ஜீவாசங்கரின் இயக்கத்தில் வெளிவந்த அமரகாவியம் திரைப்படத்தில் ஜிப்ரானின் இசையில் 'தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே..' என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப்பாடல் 2014 வெளிவந்த 100 பாடல்களில் 4 ஆவது இடத்தை பிடித்தது.
வெளியிட்ட நூல்கள்
[தொகு]- விடைதேடும் வினாக்கள் (2002)
- விடியலின் ராகங்கள் (2003)
- பாம்புகள் குளிக்கும் நதி (2013)
இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்
[தொகு]- முகவரி தொலைந்த முகங்கள் - 2000 (கவிதை நூல்)
- அடையாளம் - 2010 (கவிதை நூல் - தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு)
- இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு பாகம் மூன்று .- 2003
- ஜீவநதி நேர்காணல்கள் - 2010(15 ஈழத்து எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
- வியர்வையின் ஓவியம் 2010 (தொகுப்பு நூல்)
- பட்சிகளின் உரையாடல்-2011 (கவிதை நூல்)
கௌரவங்கள்
[தொகு]- மலேசியாவில் 2011 இல் நடைபெற்ற 6வது உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினார். மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
- இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று பொன்னாடை போர்த்தப்பட்டு அகஸ்தியர் விருதும் கலைத்தீபம் பட்டமும் வழங்கப்பட்டன.
- லக்ஸ்டோ ஊடக அமைப்பினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டு கலைமுத்து பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார்.
விருதுகள்
[தொகு]விருது | ஆண்டு |
சனாதிபதி விருது | 2001[10] |
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | 2010[11] |
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது | 2011[12] |
இசை இளவரசர்கள் விருது | 2008[13] |
அகஸ்தியர் விருது | 2011[14] |
கலைமுத்து விருது | 2011 |
கலைத்தீபம் விருது | 2011[3] |
சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருது | 2014 |
எடிசன் விருது | 2015 |
சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருது | 2016 |
கவி வித்தகன் விருது | 2015 |
கவிப்பிறை விருது | 2018 |
கலைச்சுடர் விருது | 2019 |
கவியரசு கண்ணதாசன் விருது | 2019 |
- 6வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவ விருது (2011)
- அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் கௌரவ விருது (2011)
- ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய பேரவையின் கௌரவவிருது (2011)
- பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் (2003)
- லக்ஸ்டோ ஊடக அமைப்பின் 'தங்கப்பதக்கம்' (2011)
- தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் காவிய சுவர்ண விருது (2012)
- பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூலுக்காக கவிஞர் எஸ்.பீ.பாலமுருகன் பேனா கலை இலக்கிய விருது சிறப்பு சான்றிதழ்.2014
- வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் 'தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சிக்காக முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் (2015)
பரிசில்கள் மற்றும் விருதுகள்
[தொகு]தேசிய ரீதியிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று பல தடவைகள் பரிசில்கள், விருதுகள் வென்றுள்ளார்.
- மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு -(ஜனாதிபதி விருது). இந்த விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001.09.16 அன்று வழங்கப்பட்டது.
- பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2002
- பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு (தங்கப்பதக்கம்)-2003
- அகில இலங்கை இந்து மாமன்றம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சொல்லோவிய போட்டியில் சிறப்புப் பரிசு.2003
- விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2003
- பிரான்ஸ் மகாகவி பாரதியார் மன்றம் சர்வதேச ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2007
- சக்தி தொலைக்காட்சியினால் அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட 'இசைஇளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியருக்கான அங்கீகாரம்.-2008
- இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு.-(சிறந்த பாடலாசிரியர் விருது)-2010
- இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் இரண்டாம் பரிசு.- 2010
- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2010
- 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தின் புதிய சிறகுகள்-2011 கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு-2011
- கண்டி கலை இலக்கிய இரசிகர் மன்றமும் அகிலம் அறிவியல் சஞ்சிகையும் இணைந்து நடத்திய அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு-2011
- இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு - சிறந்த பாடலாசிரியர் விருது -2011
- இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் மூன்றாம் பரிசு.- 2012
- இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் முதலாம் பரிசு.- 2013
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கவிஞர் ஸி. எஸ். காந்தி. "கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்". வார்ப்பு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "அஸ்மின்:". தமிழாதர்சு. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ 3.0 3.1 க. கோகிலவாணி (நவம்பர் 18, 2011). "'அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது' : கவிஞர் அஸ்மின்". தமிழ்மிரர். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ க. பரணீதரன். ஜீவநதி நேர்காணல்கள். ஜீவநதி.
- ↑ "கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்". லங்காமுஸ்லிம். அக்டோபர் 31, 2011. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ "அஸ்மின்". இராகா. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ "விடுதலைபுலிகளுக்கு எதிரான கவிஞரா? - விஜய் ஆண்டனி பதில்". நக்கீரன் சினிமா. Archived from the original on 2012-09-28. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 14, 2012.
- ↑ "பொத்துவிலுக்கு பெருமை சேர்க்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்". நியூப்பொத்துவில். சூலை 31, 2012. Archived from the original on 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 15, 2012.
- ↑ "யாழ்ப்பாணக் கலைஞர்களின் 'எங்கோ பிறந்தவளே' பாடல்". துருவம். ஏப்ரல் 24, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 15, 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". திண்ணை. அக்டோபர் 30, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2012.
- ↑ "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". சாளரம். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". தமிழ்மிரர். அக்டோபர் 29, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2012.
- ↑ "தென்னிந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்". யாழ் மண். நவம்பர் 29, 2011. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2012.
- ↑ "தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது". நேசம் நெற். சூலை 2, 2011. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பொத்துவில் அஸ்மின்
- கவிஞர் அஸ்மின் படைப்புக்கள்
- பொத்துவில் அஸ்மினுடன் நேர்காணல் (தமிழ் ஆதர்ஸ்)
- பொத்துவில் அஸ்மினின் நேர்காணல் (தினகரன் வாரமஞ்சரி) பரணிடப்பட்டது 2012-01-29 at the வந்தவழி இயந்திரம்
- பொத்துவில் அஸ்மின் பற்றிய குறிப்பு (தமிழ் ஆதர்ஸ்)
- கவிஞர் பொத்துவில் அஸ்மின் மலேசியா பயணம். (ஊடகம்) பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம்
- பொத்துவில் அஸ்மின் மலேசியா பயணம் (இனியொரு)
- கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு முஸ்லிம் லீக் கௌரவம் பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்
- கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது (தமிழ் ஸ்டார் இணையத்தளம்) பரணிடப்பட்டது 2011-10-31 at the வந்தவழி இயந்திரம்
- தென்னிந்திய இசைக்கு நிகராக இலங்கைக் கலைஞர்களின் புதிய பாடல். பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்