பௌஜ்தார்
Appearance
பௌஜ்தார் அல்லது பௌஜ்தாரி[1](Faujdar) தெற்காசியாவில் இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாயப் பேரரசின் காலத்திலும், பிற இசுலாமிய ஆட்சியாளர்களின் காலத்திலும் படைத்தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பதவிப் பெயராகும். பௌஜ்தார் எனும் சொல் பாரசீக மொழிச் சொல்லாகும்.
அக்பர் காலத்தில் பேரரசின் நிர்வாக வசதிக்காக, முகலாயப் பேரரசின் பகுதிகளை, சுபாக்களாகவும், சுபாக்கள் சர்க்கார்களாகவும், சர்க்கார்களை பர்கானக்களாகவும் பிரிக்கப்பட்டது.
இந்நிர்வாகப் பகுதிகளில் ஒன்றான சர்க்கார் பகுதியின் நிர்வாகி மற்றும் படைத்தலைவரை பௌஜ்தார் என அழைக்கப்பட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் ஜாட் இன மக்கள், தங்கள் பெயருக்குப் பின் பௌஜ்தார் எனும் பெயரை தங்களின் குடும்பப் பெயர்களாக இட்டுக் கொள்கின்றனர்.