உள்ளடக்கத்துக்குச் செல்

மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1991 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் மனிதாபிமானப் பணிகளை ஒருங்கமைக்கும் அலுவலகமானது ஆரம்பிக்கப் பட்டது. ஐக்கிய நாடுகளின் உதவியை சிக்கலான அவசரமான நேரங்களிலும் மற்றும் இயற்கை அநர்த்தங்களிலும் மனிதாபிமானப் பணிகளிற்கான பகுதியொன்றைத் உருவாக்கி 1972 இல் உருவாக்கப் பட்ட ஐக்கிய நாடுகளின் அநர்த்தன உதவி ஒருங்கமைப்பாளரை மாற்றியமைத்தது. மனிதாபிமானப் பணிகளை ஒருங்கமைக்கும் அலுவலகமானது 1988 இல் மனிதாபிமானத்திற்கான பணிகள் பிரிவை மீளமைத்தபோது பெரும்பாலான அநர்த்தங்களில் இதன் பணிகள் முக்கியமாகியது.[1][2][3]

இலங்கையில் இதன் பணிகள்

[தொகு]

இலங்கையில் சுனாமி அநர்த்தத்தைத் தொடர்ந்து இவ்வமைப்பானது அலுவலகங்களை கொழும்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் திறந்துள்ளது. யாழ்ப்பாணத்திலும் இவ்வமைப்பானது அலுவலகம் ஒன்றைத் திறக்க உள்ளது. ஏனைய ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுக்கு உதவியாக மனிதாபினப் பணிகளிற்குதவும் தேசப்படங்கள் போன்றவற்றைத் தயாரித்து இலவசமான விநியோகித்து வருகின்றனர்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஐக்கிய நாடுகள் General Assembly Session 46 Resolution 182. Strengthening of the coordination of humanitarian emergency assistance of the United Nations A/RES/46/182 19 December 1991.
  2. "Who We Are". OCHA (in ஆங்கிலம்). 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
  3. "OUR WORK". OCHA (in ஆங்கிலம்). 2016-09-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.