மருடி வானூர்தி நிலையம்
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | மருடி, சரவாக், மலேசியா | ||||||||||
அமைவிடம் | மருடி, மிரி பிரிவு | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 607 ft / 185 m | ||||||||||
ஆள்கூறுகள் | 04°10′39″N 114°19′19″E / 4.17750°N 114.32194°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2015) | |||||||||||
| |||||||||||
Source: Aeronautical Information Publication Malaysia[1] |
மருடி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MUR, ஐசிஏஓ: WBGM); (ஆங்கிலம்: Marudi Airport; மலாய்: Lapangan Marudi) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, மிரி மாவட்டம், மருடி நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
சரவாக் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையங்களில், மருடி வானூர்தி நிலையம், ஒரு நடுத்தரமான நிலையமாகும். ஒரே நேரத்தில் நான்கு டி அவாலாந்த் (de Havilland Canada DHC-6 Twin Otter) வானூர்திகளைக் கையாளும் திறன் கொண்டது.
சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கிற்கு வட கிழக்கே 824 கி.மீ. (512 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]இந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது.
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது. அந்த வகையில், முலு தேசிய பூங்காவிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் மருடி வானூர்தி நிலையத்தின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சேவை
[தொகு]விமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
மிரி வானூர்தி நிலையம் பாரியோ வானூர்தி நிலையம் லோங் அக்கா வானூர்தி நிலையம் லோங் பங்கா வானூர்தி நிலையம் லோங் லேலாங் வானூர்தி நிலையம் லோங் செரிடான் வானூர்தி நிலையம் |
விபத்துகள்
[தொகு]- 7 நவம்பர் 2012 — மிரியில் இருந்து வந்த டி அவாலாந்த் (de Havilland Canada DHC-6 Twin Otter) ரக வானூர்தி, தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று ஒரு பள்ளத்தில் விழுந்தது. இருப்பினும் வானூர்தியில் இருந்த 17 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.[2]
- 27 ஆகஸ்ட் 2016 — மிரியில் இருந்து வந்த டி அவாலாந்த் (de Havilland Canada DHC-6-400 Twin Otter (9M-SSB) ரக வானூர்தி, தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த நான்கு பயணிகளும், இரண்டு பணியாளர்களும் உயிர் தப்பினர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AIP Malaysia: Index to Aerodromes at Department of Civil Aviation Malaysia
- ↑ http://www.theborneopost.com/2012/11/08/a-maswings-twin-otter-is-believed-to-have-met-an-accident-at-marudi-airport-today/"Marudi Incident"
- ↑ http://www.theborneopost.com/2016/08/28/twin-otter-skids-from-runway-at-marudi-airport/"Marudi Incident"