உள்ளடக்கத்துக்குச் செல்

மறுபிறவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறுபிறவி
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஎஸ். பி. இலட்சுமணன்
எஸ். எஸ். பழனியப்பன்
எம். என். அருணாசலம்
எம். சூரியநாராயணன்
கதைடி. என். பாலு
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஆர். முத்துராமன்
மஞ்சுளா
எஸ். ஏ. அசோகன்
ஒளிப்பதிவுஅமிர்தம்
படத்தொகுப்புடி. கே. சங்கர்
வி. என். இரகுபதி
கலையகம்விஜயா & சூரி கம்பைன்சு
விநியோகம்விஜயா & சூரி கம்பைன்சு
வெளியீடு9 பெப்ரவரி 1973 (1973-02-09)
ஓட்டம்127 நிமி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மறுபிறவி (Maru Piravi) 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். 1972-ஆம் ஆண்டில் வெளிவந்த புனர்ஜென்மம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பே மறுபிறவி ஆகும்.[1] உளவியலாளர் ஆபிரகாம் கோவூர் உண்மையான சம்பவமொன்றை அடிப்படியாக கொண்டு எழுதிய கதையின் பின்னணியில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது;

கதை

[தொகு]

இளங்கோ (ஆர். முத்துராமன்) ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் அக்கல்லூரி மாணவியான சாரதாவை (மஞ்சுளா) விரும்பி மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவரால் முடியவில்லை. ஆனால் தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்ள தன் வீட்டு வேலைக்காரியிடம் உடலுறவு உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் ஏதோ ஒரு குறைபாடு. சாரதா தன் கணவனின் போக்கை எண்ணி திகைக்கிறாள். வேதனைப்படுகிறாள்.

இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் இந்தக் குறைபாடுக்கு காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், தன் மனைவியின் உருவமும் ஒத்துப் போவதால் அவர் தன் மனைவியை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் தாயின் உருவத்தைப் பார்க்கிறார். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறார். இறுதியில் அவருக்கு அளிக்கப்படும் மனநல சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு வருகிறார்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

கண்ணதாசன் இயற்றிய பாடல்களுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, எம். ஆர். விஜயா, சரளா, பி. எஸ். சசிரேகா ஆகியோர் பாடியிருந்தனர்.[2][3]

இல. பாடல் பாடகர்(கள்) இயற்றியவர் நீளம் (நி:செ)
1 ஏடீ பூங்கொடி ஏனிந்தப் பார்வை எம். ஆர். விஜயா கண்ணதாசன் 04:16
2 அலைகளிலே தென்றல் வந்து பி. சுசீலா 03:09
3 சொந்தம் இனி உன் மடியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 03:01
4 காவேரி மான்தோப்புக் கனியோ சூலமங்கலம் ராஜலட்சுமி 03:09

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வெள்ளித்திரையின் புதிய வெளிச்சம் - கே.எஸ்.சேதுமாதவன்". Theekkathir. 1 January 2022. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  2. "Marupiravi". JioSaavn. 31 May 1973. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.
  3. "Marupiravi Tamil Film EP Vinyl Record by T R Papa". Mossymart. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 27 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபிறவி_(திரைப்படம்)&oldid=4133659" இலிருந்து மீள்விக்கப்பட்டது