மலேசிய பிணையங்கள் ஆணையம்
Securities Commission Malaysia Suruhanjaya Sekuriti Malaysia | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 மார்ச்சு 1993 |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | புக்கிட் கியாரா, கோலாலம்பூர் |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
மலேசிய பிணையங்கள் ஆணையம் (மலாய்: Suruhanjaya Sekuriti Malaysia; ஆங்கிலம்: Securities Commission Malaysia) (SC); என்பது மலேசியாவின் மூலதனச் சந்தைகளை Capital Markets மேம்படுத்துவதற்கும்; ஒழுங்கு படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட மலேசிய நடுவண் அரசு சார்ந்த சட்டப்பூர்வ ஆணையம் (Malaysian Statutory Body) ஆகும்.[1]
மலேசியாவில் உள்ள மூலதனச் சந்தைகளைப் பாதுகாப்பான முறையில் வழிநடத்தவும்; மற்றும் செயல்திறன் மிக்க செயல்பாடுகளை ஒழுங்கான முறையில் மேம்படுத்துவதற்கும்; அவற்றைச் சரியான முறையில் பராமரிப்பதற்கும் (Orderly Operations of the Capital Markets) இந்த ஆணையம் செயல்படுகிறது.[2]
இந்த ஆணையம் கோலாலம்பூர், புக்கிட் கியாராவில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]1993 மார்ச் 1--ஆம் தேதி, சுயநிதியால் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மலேசிய பிணையங்கள் ஆணையம் நிறுவப்பட்டது. இந்த ஆணையம், நாட்டின் நிதித் துறைக்குள் செயல்படும் மூலதனச் சந்தை நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்; மற்றும் சந்தை நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும்; நேர்த்தியான விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.
கூட்டு முயற்சிகள்
[தொகு]2009-இல் மலேசிய பிணையங்கள் ஆணையமும்; மற்றும் மலேசிய நடுவண் வங்கியும் (Central Bank of Malaysia) இணைந்து ஆசிய நிதி நிறுவனத்தை (Asian Institute of Finance) நிறுவின.[3][4]
2013-ஆம் ஆண்டில், அந்த இரு அமைப்புகளும் இணைந்து நிதி அங்கீகார முகமையையும் (Finance Accreditation Agency) நிறுவின.[5]
அத்துடன் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளுக்கு மின்னணு மூலமாக நிதி செலுத்தும் முறையையும் (Electronic Share Payment); மற்றும் மின்னணு மூலமாக ஈவுத் தொகை பெறுவதையும் (e-Dividend) அந்த இரு அமைப்புகளும் அறிமுகப் படுத்தின.[5]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Commission functions to serve as the authority in developing and maintenance of a secure, efficient and Orderly Operations of the Capital Markets in Malaysia". www.sc.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
- ↑ "Securities Commission: Malaysia". Thomson Reuters (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-19.
- ↑ "Asian Institute Of Finance". www.aif.org.my.
- ↑ "Establishment of Asian Institute of Finance to Enhance Financial Sector Human Capital Development". www.bnm.gov.my.
- ↑ 5.0 5.1 "- Bank Negara Malaysia - Central Bank of Malaysia". www.bnm.gov.my.