மாப்பிங்குவாரி
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
மாப்பிங்குவாரி (யுமா என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பிரேசிலிய நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் காடு மற்றும் அதன் விலங்குகளைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் தொன்ம வேற்றுருவுடைய காட்டில் வாழும் ஆவிகளாகும்.
விளக்கம்
[தொகு]மாப்பிங்குவாரி பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கூறப்படுகின்றன.1933 க்கு முன், பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில் முன்னொருபோது மனிதராயிருந்த ஷாமன் ஒரு உரோமத்தால் மூடப்பட்ட மனித உருவமாக மாறியதாக விவரிக்கிறது.[1] இந்த உருவத்தில் பெரும்பாலும் அதன் அடிவயிற்றில் ஒரு இடைவெளி வாய் இருப்பதாக கூறப்படுகிறது.[2] அதன் கால்கள் பின்னால் திரும்பியதாயுமுள்ளன. அதைக் கண்காணிக்க முயற்சிப்பவர்களைக் குழப்பும் இத்தகைய கால்களைக் கொண்ட உயிரினங்கள் உலகெங்கிலும் உள்ள நாட்டுப்புறக் கதைகளில் காணப்படுகின்றன.[1]
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சில புதுவிலங்காய்வு உயிரியலாளர்கள் மாப்பிங்குவாரி பிக்ஃபூட்டைப் போன்ற அறியப்படாத விலங்குகளாக இருக்கலாம் என்று ஊகித்தனர்.[1]
பிலிசுடோசின் காலத்தின் இறுதியில் அழிந்துவிட்டதாக மதிப்பிடப்பட்ட மந்த அசைவுடைய ஒரு மாபெரும் தரை விலங்கின் சம காலக் காட்சி இது என்று வேறு சிலர் கருதுகின்றனர். [2][3]
கலைச்சொல்
[தொகு]பெலிப் பெரேரா வாண்டர் வெல்டனின் கூற்றுப்படி, அதன் பெயர் தூப்பி-குவாரானி மொழிச் சொற்களான "ம்பாப்பே", "பை" மற்றும் "குவாரி" ஆகியவற்றின் கலவையாகும். இதன் பொருள் "வளைந்த கால் [அல்லது] பாதம் கொண்ட ஒரு பொருள்"[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Dunning, Brian. "On the Trail of the Mapinguari". Skeptoid. Skeptic Media. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.Dunning, Brian. "On the Trail of the Mapinguari". Skeptoid. Skeptic Media. Retrieved 15 June 2023.
- ↑ 2.0 2.1 Rohter, Larry. "A Huge Amazon Monster Is Only a Myth. Or Is It?". https://www.nytimes.com/2007/07/08/world/americas/08amazon.html.
- ↑ Oren, David C. "Does the Endangered Xenarthran Fauna of Amazonia Include Remnant Ground Sloths?", Edentata (June 2001) p. 2-5
- ↑ Felipe Ferreira Vander Velden "Sobre caes e indios: domesticidade, classificacao zoologica e relacao humano-animal entre os Karitiana", Revista de Antropología 15 (2009) p. 125–143