மேத்யூ குழல்நாடன்
Appearance
மேத்யூ குழல்நாடன் Mathew Kuzhalnadan | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மே 2021 | |
முன்னையவர் | எல்டோ ஆபிரகாம் |
தொகுதி | மூவாற்றுபுழா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 மே 1977 பைங்கோட்டூர், கோதமங்கலம், எர்ணாகுளம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | எல்சா கேத்தரின் ஜார்ஜ் |
பிள்ளைகள் | ஆர்டன் ஆபிரகாம் மேத்யூ |
பெற்றோர் | ஆபிரகாம்,
|
முன்னாள் கல்லூரி | சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி |
வேலை |
|
மேத்யூ குழல்நாடன் (Mathew Kuzhalnadan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1977 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். கேரள சட்டமன்றத்தில் மூவாற்று புழா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [1] [2]
குழல்நாடன் புது தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் "பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களில்" முனைவர் பட்டம் பெற்றார். ஓர் எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் முன்னணி செய்தித்தாள்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தேசிய அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரசின் கேரள மாநிலத் தலைவராகவும் இருந்தார். கேரள பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்..
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Muvattupuzha Election Result 2021 Live Updates: Dr Mathew Kuzhalnadan of INC Wins". www.news18.com. May 2, 2021.
- ↑ "A generation change needs to happen in Congress': Party candidate Mathew Kuzhalnadan". The News Minute. March 25, 2021.