மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள்
மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள் மைக்ரோசாப்டினால் இணையமூடாக நடைபெறும் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள் (MCP) ஆவதற்கு ஆகக் குறைந்தது மைக்ரோசாப்டின் ஓர் பரீட்சையிலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
MCP பல்வேறு பட்ட பல்வேறு துறைகளில் சான்றிதழ் அளித்து வருகின்றது. இவ்வாறு சான்றிதழ்களைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக பல பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும். பிரபலான சான்றிதழ்களாவன MCP, மைக்ரோசாப்ட் சான்றிதழ் அளிக்கப் பட்ட சிஸ்டம் பொறியியலாளர்கள் (எஞ்ஜினியர்ஸ்), மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப் பட்ட தகவற் தள நிர்வாகிகள் போன்றவையாகும். இதுபற்றிய விபரங்களை மைக்ரோசாப்டின் உத்தியோகபூர்வ கல்விகற்கும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
சிலவேலைகளிற்குப் பெரும்பாலும் இயங்குதளம் தொடர்பாக அறிவதற்கு MCP சான்றிதழ்களை விரும்புகின்றார்கள். இதனைப் போன்றே பிரபலமான நிறுவனங்களான சண்மைக்ரோ சிஸ்டம், ரெட்ஹட், சிஸ்கோ போன்ற நிறுவனங்களும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரீட்சைக் கட்டணமானது 125 அமெரிக்க டாலர்கள் ஆகும். இலங்கையில் இதன் பரீட்சைக் கட்டணமானது 50 டாலர்கள் ஆகும். இப்பரீட்சையானது 2-3 மணித்தியாலங்கள் நீடிக்கும் இதில் 50 முதல் 90 வரையான கேள்விகளிற்கு விடையளிக்க வேண்டும். இதில் பல்தேர்வு வினாக்கள், இழுத்துக் கொண்டு போடுதல் (drag and drop), தீர்வுகளை உருவாக்கும் வினாகள் அடங்கியிருக்கும்.
மைக்ரோசாப்ட் அக்டோபர் 2005 இல் அதன் பரீட்சைகளை மீள் புனருதாரணம் செய்து மூன்று படிகளூடான பரீட்சையாக மாற்றியமைத்தது.
சான்றிதழ்கள்
[தொகு]மைக்ரோசாப்ட்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட சிஸ்டம் பொறியியலாளர்கள்
[தொகு]மைக்ரோசாப்ட்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட சிஸ்டம் பொறியியலாளர்கள் (MCSE) இதுவே மைக்ரோசாப்டின் நன்கு பிரபலான தேர்வாகும். இத் தேர்வானது வர்தகத் தேவைகளைக் கண்டறிந்து அலசி ஆராய்ந்து, தீர்வுகளை வடிவமைத்து நடைமுறைப் படுத்துவதாகும். 2006 ஆம் ஆண்டுப் படி MCSE பரீட்சைகள் விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 2003 சேவர் இரண்டு பாதைகளூடாக இருவேறு பட்ட பரீட்சைகள் மூலம் அடையலாம்.
MCSE 2003 இல் 6 முக்கியமான பரீட்சைகளுடன் (4 வலையமைப்புத் தொடர்பான, ஓர் கிளையண்ட் இயங்குதளம் மற்றும் ஓர் வடிவமைப்புத் தேர்வு) அத்துடன் ஓர் விருப்பத்திற்குரிய தேர்வு. MCSE 2000 இல் 5 முக்கியமான தேர்வுகளுடன் (4 இயங்கு தளம் தொடர்பான பரீட்சைகளுடன் 1 வடிவமைபுப் பரீட்சை) மற்றும் 2 விருப்பத்திற்குரிய தேர்வுகளில் சித்தியடைய வேண்டும்.
மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பிரயோகங்களை விருத்தி செய்பவர்
[தொகு]மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட பிரயோகங்களை விருத்தி செய்பவர் (MCAD) ஓர் ஆரம்பகட்ட நிரல்லாக்கரின் சான்றிதழாகும். பெரும்பாலானவை மைக்ரோசாப்டின் .நெட் (Microsoft .NET) அபிவிருத்தி தொடர்பானதாகும்.
மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தீர்வுகளை விருத்தி செய்பவர்
[தொகு]மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தீர்வுகளை விருத்தி செய்பவர் (MCSD) சான்றிதழே மைக்ரோசப்டின் நிரலாக்கலில் வழங்கப் படும் அதியுயர் சான்றிதழாகும்.