யானை மூஞ்சூறு
யானை மூஞ்சூறு | |
---|---|
கருப்பு-சிவப்பு யானை மூஞ்சூறு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Gotthelf Fischer von Waldheim, 1814
|
துணைக்குடும்பங்கள் | |
|
யானை மூஞ்சூறு (Elephant shrews) இதனை குதிக்கும் மூஞ்சூறு என்றும் அழைப்பர். எலியைப் போன்று காணப்படும் மூஞ்சூறுக்கள், எலியின் அளவை விட சிறியதாகும். இதன் மூக்கு யானையின் தும்பிக்கை போன்று நீண்டு இருப்பதால் இதற்கு யானை மூஞ்சுறு எனப்பெயராயிற்று. இவைகள் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனம் முதல் தெற்கு ஆப்பிரிக்கா வரை பரவியுள்ளது. 1970-ஆம் ஆண்டில் அழிந்து போனதாக கருதப்பட்ட யானை மூஞ்சூறுக்கள் ஆப்பிரிக்காவில் 2020-ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
குணங்கள்
[தொகு]யானை மூஞ்சூறு வேகமாக வளரும் சிறிய பாலூட்டிகளில் ஒன்றாகும். இது மணிக்கு 28.8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுகிறது. பாலூட்டிகளான யானை மூஞ்சூறுவுக்கு, யானையின் தும்பிக்கைப் போன்ற நீண்ட மூக்கு கொண்டது. இதன் நீண்ட மூக்கு அளவிற்கு கால்கள் நீளமுடையது. இதன் நீண்ட கால்கள் முயல்களைப் போன்று ஓடப்பயன்படுகிறது. காடுகளில் இவற்றின் ஆயுட்காலம் சுமார் இரண்டரை முதல் நான்கு ஆண்டுகள் வரையாகும்.[2]இவைகள் பெரிய கோரைப் பற்களைக் கொண்டுள்ளது. இதன் கன்னப் பற்கள் நீண்டது.[3]
யானை மூன்சூறுக்கள் அதிக சமூக விலங்குகள் அல்ல. ஆனால் பல ஒற்றைத் தம்பதிகளாக வாழ்கிறது. இவைகள் தங்கள் சொந்த நிலப்பரப்பைப் பகிர்ந்துகொண்டு பாதுகாக்கிறது. இது வாசனை சுரப்பிகளைப் பயன்படுத்தி தங்களது நிலப்பரப்பை குறித்துக்கொள்கிறது.
தென்மேற்கு ஆபிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் குறுகிய காது யானை மூஞ்சூறுக்கள் வாழ்கின்றன. அவை தனித்தனி கூடுகளைக் கூட கொண்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் பிறக்கும்போதே நன்கு வளர்ந்திருக்கும்; சில மணி நேரங்களுக்குள் அவை இயங்கும். பெண் யானை மூஞ்சுறுக்கள் மனிதப் பெண்களைப் போன்ற ஒரு மாதவிடாய் சுழற்சியை கொண்டுள்ளது.[4]
உணவுப் பழக்கம்
[தொகு]எறும்பு தின்னி போன்று யானை மூஞ்சூறுக்கள் நீண்ட மூக்கினால் இரையை மோப்பம் பிடித்து, நாக்கைப் பயன்படுத்தி உணவை பற்களால் மென்று உண்கிறது. இதன் முக்கிய உணவு பூச்சிகள், சிலந்திகள், மண்புழுக்கள் ஆகும். சில வகை யானை மூஞ்சூறுக்கள் சிறிய அளவிலான தாவரப் பொருட்களையும், குறிப்பாக புதிய இலைகள், விதைகள் மற்றும் சிறிய பழங்களையும் உண்கிறது.
படக்காட்சிகள்
[தொகு]-
வட்டக் காது யானை மூஞ்சூறு
-
யானை மூஞ்சூறு, மொசாம்பிக்
-
வட ஆப்பிரிக்க யானை மூஞ்சூறு, மொராக்கோ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elephant shrew rediscovered in Africa after 50 years
- ↑ EBSCO Publishing. Online database.
- ↑ Rathbun, Galen B. (1984). Macdonald, D. (ed.). 730 The Encyclopedia of Mammals. நியூயார்க்: கோப்பில் உள்ள உண்மைகள். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87196-871-5.
{{cite book}}
: Check|url=
value (help); Unknown parameter|பக்கங்கள்=
ignored (help) - ↑ van der Horst, Cornelius; Gillman, Joseph (1941). "The menstrual cycle in Elephantulus". The South African Journal of Medical Sciences 6: 27–47.
- Murata, Y.; Nikaido, M.; Sasaki, T.; Cao, Y.; Fukumoto, Y.; Hasegawa, M.; Okada, N. (2003). "Afrotherian phylogeny as inferred from complete mitochondrial genomes". Molecular Phylogenetics and Evolution 28 (2): 253–260. doi:10.1016/S1055-7903(03)00035-6. பப்மெட்:12878462.
- Murphy, W.J.; Eizirik, E.; Johnson, W.E.; Zhang, Y.P.; Ryder, O.A.; O'Brien, S.J. (2001). "Molecular phylogenetics and the origins of placental mammals". Nature 409 (6820): 614–618. doi:10.1038/35054550. பப்மெட்:11214319. Bibcode: 2001Natur.409..614M.
- Tabuce, R.; Marivaux, L.; Adaci, M.; Bensalah, M.; Hartenberger, J.-L.; Mahboubi, M.; Mebrouk, F.; Tafforeau, P. et al. (2007). "Early Tertiary mammals from North Africa reinforce the molecular Afrotheria clade". Proceedings of the Royal Society B: Biological Sciences 274 (1614): 1159–1166. doi:10.1098/rspb.2006.0229. பப்மெட்:17329227.
வெளி இணைப்புகள்
[தொகு]- SENGIS - Elephant shrews
- "Sengis (Elephant-Shrews)". California Academy of Sciences. Archived from the original on 10 May 2013. பார்க்கப்பட்ட நாள் 1 October 2012.
- "New sengi species is related to an elephant, but small as a mouse". Los Angeles Times. June 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.