வண்ணச் சொற்கள்
வண்ணச் சொற்கள் (Words in Colour) என்பது முனைவர் காலேப் கட்டெக்னோவால் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்தறிவுக்கான ஓர் அணுகுமுறையாகும்.[1] முதன்முதலில் 1962 ஆம் ஆண்டில் வண்ணத்தில் சொற்கள் வெளிவந்தன. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில் இது வெளியிடப்பட்டது. பிந்தைய பதிப்புகள் பிரெஞ்சு மொழியிலும் எசுப்பானிய மொழியிலும் வெளியிடப்பட்டன.[2]
வண்ணச் சொற்கள் என்பது ஒரு செயற்கை ஒலியியல் அமைப்பாகும். எழுத்துக்களின் ஒலிப்பு பண்புகளைக் குறிக்க இம்முறை வண்ணத்தைப் பயன்படுத்துகிறது.[3] இந்த அமைப்பு காதுகேளாத குழந்தைகள்,[4] வாசிப்புக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக[3] பயன்படுத்தப்பட்டது. வண்ணத்தில் கதை படித்தல், வண்ண ஒலிப்புத் திட்டம், ஆங்கில வண்ணக் குறியீடு போன்ற பல வண்ண உதவி கல்வித் திட்டங்களில் வண்ணத்தில் சொற்கள் என்ற அணுகுமுறையும் ஒன்றாகும்.[5]
இதையும் காண்க
[தொகு]- Teacher's Guide to Words in Colour Gattegno.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brenda Hopkin (November 1964). "Eight Hours to Literacy". Schools and College.
- ↑ Words in Colour Catalogue. The Cuisenaire Company. 1973.
- ↑ 3.0 3.1 Stringer, Bobrow and Linn (9 May 2011). "Jacob, a case study of dyslexia in Canada". In Peggy L. Anderson; Regine Meier-Hedde (eds.). International Case Studies of Dyslexia. Routledge. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-73592-9.
- ↑ Sister Caterina, O.P.. Words in Colour for the Deaf. Educational Explorers.
- ↑ Experiments and Innovations in Education (Unesco Press) (1–9): 18–20. 1973.