விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி
Appearance
100% போட்டி நிறைவுற்றது
2013 தொடர் கட்டுரைப் போட்டி, சூன் 2013 முதல் மே 2014 வரையான 12 மாதங்கள் நடைபெறுகிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட்டு அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட்டு அளவு குறிக்கப்பட்டிருக்கும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல், மேற்கோள்கள், ஆதாரங்கள், சான்றுகோள் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய உரை தவிர்த்த பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பவை யாவும் உரைப்பகுதியாக மட்டும் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு கட்டுரையிலும் தகுந்த ஆதாரங்கள், வெளியிணைப்புகள் முதலியன இருக்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
தலைப்புகள்
- விரிவாக்க வேண்டிய குறுங்கட்டுரைகள் பட்டியல்.
- நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை முன்கூட்டியே பதிவு செய்ய இங்கு செல்லுங்கள். பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.
முடிவுகள்
- ஒவ்வொரு மாதமும் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குபவர்கள் இருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மிகவும் விரிவாக ஒரு கட்டுரையை மேம்படுத்துபவருக்குத் தனியே ஒரு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
- போட்டிக்குத் தகுதியானவாறு நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகளின் பட்டியலை இங்கு இடுங்கள். போட்டியில் யார் முந்துகிறார் என்பது தானே தெரிய வரும் :) போட்டிக்கு வந்துள்ள கட்டுரைகள் அனைத்தும் விதிகளை முறையாகப் பின்பற்றியுள்ளனவா என்பதைச் சரி பார்த்து ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
பரிசு
மொத்தப் பரிசுத் தொகை: இந்திய ரூபாய் 30,000/-
- ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள்
- கூடுதல் எண்ணிக்கையிலான கட்டுரைகளை விரிவாக்கியவருக்கான முதல் பரிசு: இந்திய ரூபாய் 1000/-
- கூடுதல் எண்ணிக்கையிலான கட்டுரைகளை விரிவாக்கியவருக்கான இரண்டாம் பரிசு: இந்திய ரூபாய் 500/-
- மிகவும் விரிவாக ஒரு கட்டுரையை மேம்படுத்துபவருக்கான சிறப்புப் பரிசு: இந்திய ரூபாய் 500/-
- ஆண்டு முழுமைக்கும் சேர்த்து இரண்டு வாகையர் பட்டங்கள்
- 12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை முதற்பரிசு வெல்பவருக்கு ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-
- 12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை மிகவும் விரிவான கட்டுரை உருவாக்குபவருக்கான சிறப்பு பரிசு வெல்பவருக்கு ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-
- ஒவ்வொரு மாதமும் பரிசுகளை வெல்லும் விக்கிப்பீடியர்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.
- அனைத்து வெற்றியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- வெற்றி பெறுபவர் விரும்பினால் பரிசுத் தொகை முழுவதையும் அதற்கு ஈடான புத்தகங்கள் அல்லது மின் புத்தகங்களாகப் பெற்றுக் கொள்ளலாம்.
போட்டியின் முடிவுகள்
ஒவ்வொரு மாதத்திற்குமான விபரமான தொடர் கட்டுரைப் போட்டி முடிவுகள் இங்கே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
வாகையாளர்கள்
- ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை விரிவாக்கி முதற்பரிசை வென்றமைக்கான வாகையாளர் - ஸ்ரீகர்சன் (6 முறை முதற் பரிசு)
- ஒவ்வொரு மாதமும் விரிவான கட்டுரைகளை உருவாக்குவதற்கான சிறப்புப் பரிசு வாகையாளர்கள் - ஸ்ரீகர்சன் (3 முறை), குறும்பன் (3 முறை)
பரிசுத் தொகை
(இந்திய உரூபாயில்)
- தென்காசி சுப்பிரமணியன் - 2,000 (2 முதற் பரிசுகள்)
- ஆதவன் - 1,000 (2 இரண்டாம் பரிசுகள்)
- பார்வதி - 1,000 (2 சிறப்புப் பரிசுகள்)
- மணியன் - 1,000 (1 இரண்டாம் பரிசு + 1 சிறப்புப் பரிசு)
- நந்தினி - 2,750 (2 முதற் பரிசுகள் + 1 இரண்டாம் பரிசு (அரைப் பங்கு) + 1 இரண்டாம் பரிசு (கால் பங்கு))
- முத்துராமன் - 1,500 (1 முதற் பரிசு + 1 இரண்டாம் பரிசு)
- ஜெயரத்தின மாதரசன் - 500 (1 இரண்டாம் பரிசு)
- குறும்பன் - 3,250 (3 சிறப்புப் பரிசுகள் + 1 இரண்டாம் பரிசு (கால் பங்கு) + 1 வாகையாளர் பரிசு (அரைப் பங்கு)
- ஹோபிநாத் - 500 (1 இரண்டாம் பரிசு)
- அசோக்ராஜ் - 1,000 (1 இரண்டாம் பரிசு + 1 சிறப்புப் பரிசு)
- தமிழ்க்குரிசில் - 500 (1 இரண்டாம் பரிசு)
- ஸ்ரீஹீரன் - 1,500 (1 முதற் பரிசு + 1 இரண்டாம் பரிசு)
- ஸ்ரீகர்சன் = 12, 167 (6 முதற்பரிசுகள் + 1 இரண்டாம் பரிசு (மூன்றில் ஒரு பங்கு) + 3 சிறப்புப் பரிசுகள் + 1 வாகையர் பரிசு + ஒரு வாகையர் பரிசைச் சமமாக பகிர்ந்து கொள்ளல்)
- மாதவன் - 250 (1 இரண்டாம் பரிசு (கால் பங்கு)
- சரவணன் பெரியசாமி - 916 (1 இரண்டாம் பரிசு + 1 இரண்டாம் பரிசு (கால் பங்கு) + 1 இரண்டாம் பரிசு ( மூன்றில் ஒரு பங்கு)
- சாரல் - 167 (1 இரண்டாம் பரிசு (மூன்றில் ஒரு பங்கு))
பரிசு வெல்பவர்கள் - 16 பேர்.
குறிப்பு: சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்படாத சனவரி 2014, மார்ச்சு 2014 மாதங்களில் எஞ்சிய பரிசுத் தொகை, அந்தந்த மாதங்களில் இரண்டாம் பரிசு வென்றோர் இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.