விஜயதுர்க்கம் கோட்டை
விஜயதுர்க்கம் கோட்டை | |
---|---|
विजयदूर्ग किल्ला | |
சிந்துதுர்க் மாவட்டம், மகாராட்டிரா | |
விஜயதுர்க்கம் கோட்டை | |
ஆள்கூறுகள் | 16°33′39″N 73°20′00″E / 16.5607°N 73.3334°E |
வகை | கடல் கோட்டை |
இடத் தகவல் | |
மக்கள் அனுமதி |
Yes |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1193 |
கட்டியவர் | இரண்டாம் போஜன் (சில்ஹார வம்சம்) |
கட்டிடப் பொருள் |
கருங்கல், சுண்ணாம்புக் கலவை |
விஜயதுர்க்கம் கோட்டை ('Vijaydurg Fort), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தின் கடலில் அமைந்த கடல் கோட்டை ஆகும். இக்கோட்டையை சில்ஹார வம்ச ஆட்சியாளர் இரண்டாம் போஜன் 1193-1205 காலகட்டத்தில் கட்டினார். மராட்டியப் பேரரசர் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் இக்கோட்டையை புதுப்பித்து கட்டினார்.[1][2][3]
5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த விஜயதுர்க்கம் கோட்டையைச் சுற்றிலும் நான்கு புறமும் கடல் நீரால் சூழப்பட்டது. பல காலத்திற்குப் பின்னர் இக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் சாலை அமைத்து நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டது. தற்போது இக்கோட்டையின் பரப்பளவு 17 ஏக்கராகவும், மூன்று புறங்களிலும் அரபுக் கடலால் சூழப்பெற்றது. சத்திரபதி சிவாஜி இக்கோட்டையின் பரப்பளவை அதிகரித்து, கிழக்குப் பகுதியில் 36 மீட்டர் உயரம் கொண்ட 3 மதில் சுவர்களை எழுப்பினார்.[3] இக்கோட்டை பாதுகாக்கப்பட்ட அரசுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்க்கப்பட்டுள்ளது.[4]
அமைவிடம்
[தொகு]மகாராட்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தின் தேவகடத் தாலுகாவில் உள்ள விஜயதுர்க் நகரத்தின் கடற்கரையை ஒட்டி, அரபுக் கடலில் அமைந்துள்ளது. இக்கோட்டையின் கிழக்குப் பகுதி சிறிய சாலையால் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டு, மற்ற மூன்று புறங்களில் அரபுக் கடலால் சூழப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coastal Konkan - Forts, Temples, Exotic Beaches
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- ↑ 3.0 3.1 "Top 5 Forts in Maharashtra: Revisiting History This Monsoon". India Destinations. 8 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-12-08.
- ↑ "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). Archived from the original on 6 June 2013.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)