Photo Credit: Huawei
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Huawei Mate XT Ultimate செல்போன் பற்றி தான்.
Huawei Mate XT அல்டிமேட் செல்போன் டிசைன் செப்டம்பர் மாதம் அறிமுகமானது. மூன்று முறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. இது Z பாணியில் மடிக்கக்கூடிய மூன்று திரைகளுடன் வருகிறது. இது விரல் நகக் கீறல்களுக்கு ஆளாகக்கூடும் என்று பிரபல யூடியூபர் கூறுகிறார். வழக்கமான மடிக்கக்கூடிய மாடல்களுடன் ஒப்பிடும்போது டிஸ்பிளே சேதமடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Huawei டிரிபிள் ஃபோல்டபிள் Mate XT Ultimate செல்போனின் ஆயுள் சோதனையை ஆராய்வதற்கு முன், யூடியூபர் ஜாக் நெல்சன் விமர்சனம் வைரலாகி வருகிறது. அவர் இந்த செல்போனை அன்பாக்ஸிங் செய்து காட்டினார். தோராயமாக ரூ. 2,36,700 விலையில் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக Huawei Mate XT இருக்கிறது. கார்பன் ஃபைபர் கேஸ், இரண்டு USB உடன் 66W பவர் அடாப்டர் உட்பட பல வசதிகளுடன் வருகிறது. Type-C கேபிள்கள், 88W மதிப்பிடப்பட்ட கார் சார்ஜர் மற்றும் ஒரு ஜோடி Huawei FreeBuds 5 இதனுடன் இருக்கிறது.
ஆயுளைப் பொறுத்தவரை Huawei Mate XT Ultimate செல்போன் கடினத்தன்மையினால் சில கீறல்களை உண்டாக்குகிறது. ரேஸர் பிளேடு லெவல் 3 அளவுக்கு ஆழமான பள்ளங்கள் உருவாகிறது. மடிக்கக்கூடிய மென்மையான பிளாஸ்டிக் திரையின் லேமினேட் கட்டமைப்பின் காரணமாக இது நிகழும் என்றாலும், சோதனையின் போது விரல் நகங்களால் கூட எளிதில் கீறப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை காட்டுகிறது. டிஸ்பிளே அணைத்தவுடன் விரல் நகங்களால் ஏற்படும் கீறல்கள் தெளிவாக தெரிகிறது.
ரேஸர் பிளேடால் ஏற்படும் கீறல்கள் போல செல்போனில் கீறல்கள் விழுகிறது. Samsung Galaxy Z Fold 6 செல்போனில் கூட இதே அளவில் கீறல்கள் ஏற்பட்டாலும், Mate XT அல்டிமேட் டிசைனில் விரல் நகங்களால் ஏற்படும் கீறல்கள் தெளிவாக தெரிகிறது.
மூன்று முறை மடிக்க கூடிய ட்ரை-ஃபோல்ட் ஸ்மார்ட்போனாக இருப்பதால், கீல் மெக்கானிசம் Huawei Mate XT Ultimate செல்போனின் மற்றொரு பலவீனமானமாக கூறப்படுகிறது. தவறான வழியில் திரைகளை மடிப்பதும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனை உணர்த்தும் விதமாக யூடியூபரால் ஸ்மார்ட்போன் வளைக்கப்பட்டது. இது போன்ற நேரங்களில் செல்போனை வைத்திருப்பதற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. திரையின் மடிந்த விளிம்புகளில் ஒன்று முழுவதுமாக மடிந்திருக்கும் போது அதன் உள் பாகங்கள் வெளிப்படையாக தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்