அதிநுண்ணுயிரி
அதிநுண்ணுயிரி புதைப்படிவ காலம்:புது முகிழுயிரிகள்வகை – அண்மைக்காலம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | முழுக்கருவன் உயிரிகள்யூக்கார்யோட்டா
|
வகைபாடு வேறுபடுகிறது |
அதிநுண்ணுயிரி அல்லது முகிழுயிரி (Protists) என்பது விலங்கு, தாவரம், பூஞ்சை அல்லாத பல்வேறுபட்ட மெய்க்கருவுயிரி சார்ந்த நுண்ணுயிரிகளைக் குறிக்கும். இவை அனைத்தும் எளிமையான அமைப்பைக் கொண்டவை என்பதைத் தவிர இயற்கையான தனிக்குழுவாக அமைவதில்லை.[2]. இவை இயற்கையாக ஒரு குழுவாக இல்லாதிருப்பினும், வசதிக்காக ஒரே குழுவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை சிறப்பமைவு கொண்ட இழையங்கள் அற்ற, பொதுவாக தனிக்கல (ஒருகல உயிரினங்களாகவோ, அல்லது தனிக்கலக் கூட்டங்களாகவோ (unicellular-colonial) இருக்கலாம்[3]. இவற்றின் எளிமையான கல அமைப்பின் அடிப்படையிலேயே இவை பூஞ்சைகள், இயங்குதிணை அல்லது விலங்குகள், நிலைத்திணை அல்லது தாவரங்கள் போன்ற பிற மெய்க்கருவுயிரிகளிலிருந்து வேறுபடுகின்றன.
இவை ஒரே பொது மூதாதை உயிரியில் இருந்து வந்தவையல்ல. இவை வேறுபட்ட வாழ்க்கைச் சுழற்சிகளும், ஊட்டநிலை மட்டங்களும், இயங்குமுறைகளும், கலக்கட்டமைப்புகளும் கொண்டுள்ளன.[4][5]
முகிழுயிரி (protista) எனும் சொல்லை முதன்முதலில் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்தான் 1866 இல் பயன்படுத்தினார். இவரால் உருவாக்கப்பட்ட மூன்று திணைக்களங்களைக் கொண்ட அறிவியல் வகைப்பாட்டில், தாவரம், விலங்கு ஆகிய இரு திணைக்களங்களும், அவ்விரு திணைக்களங்களுக்குள் அடங்காத அனைத்து நுண்ணுயிரிகளும் புரொட்டிஸ்டா வகையிலும் சேர்க்கப்பட்டிருந்தன.[6] பின்னர் 1938 இல் ஹேர்பேர்ட் கோப்பலாண்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டில், மெய்க்கருவுயிரிகளான நுண்ணுயிரிகள் மட்டுமே புரொட்டிஸ்டா வகைக்குள் கொண்டு வரப்பட்டு, ஏனைய நிலைக்கருவிலி நுண்ணுயிரிகள் மொனேரா என்னும் திணைக்களத்திற்குள் அடக்கப்பட்டன.[7][8] இராபர்ட் வீட்டேகர் என்பவரால், 1969 இல் உருவாக்கப்பட்ட ஐந்து திணைக்களங்களைக் கொண்ட அறிவியல் வகைப்பாட்டில், இவை முகிழுயிரி என்னும் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு தனித் திணைக்களமாக பாகுபடுத்தபட்டன.[3][9][10]2004 இல் தோமஸ் கவாலியர்-ஸ்மித் இனால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டில், புரோட்டிஸ்டா என்ற திணைக்களம் இல்லாது செய்யப்பட்டு, மாற்றாக அத்திணைக்களத்திலிருக்கும் நுண்ணுயிரிகள் மூத்தவிலங்கு, குரோமிஸ்டா என்னும் இரு திணைக்களத்திற்குள் கொண்டு வரப்பட்டன.[11] 2015 இல் உருகீரோவும் ஏனையோரும் உருவாக்கிய வகைப்பாட்டிலும், அதிநுண்ணுயிரிகள் இவ்வாறு இரு திணைக்களங்களாகவே உள்ளன.[12]
இலின் மார்குலிசின் வகைபாட்டு முறையில், முகிழுயிரி எனும் சொல் நுண்ணுயிரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது. என்றாலும், பலகல முழுக்கருவன் உயிரிகளாகிய செம்பாசி, கடற்பூண்டு, கோழைப் பூஞ்சைகள் அடங்கிய மேலும் விரிந்த உயிரிகளுக்குப் புரோட்டாக்டிசுட்டா (Protoctista) எனும் திணைக்களம் ஒதுக்கப்பட்டுள்ளது.[13]பிறர், மற்ற மரபான திணைக்களங்களுக்குள் அடக்கமுடியாத அனைத்து நுண்ணுயிரிகளையும் பருவுயிரிகளையும் சேர்த்த முழுக்கருவன் உயிரிகளைப் பரவலாகக் குறிக்க, முகிழி ( protist) எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
கவைப்பிரிவு வகைபாட்டு முறைகளில், இந்தவகை முழுக்கருவன் உயிரிகள் அனைத்தையும் விரிவாக உள்ளடக்கிய இணைதொகுதிக் குழுவேதும் இல்லை.
கவைப்பிரிவு வகைபாட்டில், முகிழுயிரிகளின் உள்ளடக்க உயிரிகள் பல மீக்குழுக்களில் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, சார் மீக்குழு(SAR மீக்குழு), தொல்கணிகங்கள்(Archaeplastida), எக்சுகவேட்டா(Excavata), ஒபிசுத்தோகோண்டா(Opisthokonta)) என்பனவாகும். "முகிழுயிரி (Protista)", புரோட்டாக்டிசுட்டா (Protoctista), "முன்னுயிரி (Protozoa)" ஆகிய சொற்கள் வழக்கிறந்தனவாக கருதப்படுகின்றன. எனினும், முகிழி ("protist") எனும் சொல் மட்டும் அனைத்து முழுக்கருவன் நுண்ணுயிரிகளையும் குறிக்க, தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. எடுத்துகாட்டாக, "முகிழி நோயீனி" எனும் சொற்றொடர் குச்சுயிரியோ நச்சுயிரியோ இடைநிலை உயிரியோ நச்சுயிரியனோ அல்லாத நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளைக் குறிக்கிறது.[14]
உட்பிரிவுகள்
[தொகு]முகிழுயிரிகள் முன்பு பலகுழுக்களாக அவற்றின் உயர்திணைக்களங்களின் ஒற்றுமையை வைத்துப் பின்வருமாறு பிரிக்கப்பட்டன:
மூத்தவிலங்கு (Protozoa): விலங்கு-போன்ற ஒருகல சார்பூட்ட உயிரி மூத்தவிலங்கு வகை. இது மேலும் அதன் இயங்குமுறையை வைத்துப் வெவ்வேறு நகரும் உயிரி வகைகளாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன கசையிழை அல்லது புற இழை கொண்ட உயிரிகள் (Flagellata), நுண்மயிர் அல்லது பிசிர் இழைகள் கொண்ட உயிரிகள் (Ciliophora), உயிர்க்கல உண்ணிகளாகிய அமீபாக்கள் (amoeba), விதைத்தூள் அல்லது நுண்வித்தி உருவாக்கும் உயிரிகள் (Sporozoans) ஆகும்.
முதல்நிலைத்திணை உயிரி ((Protophyta or Thallophyta): தாவரம்-போன்ற தன்னூட்ட உயிரி (autotrophic) முன்நிலைத்திணைவகை. இவை பெரும்பாலும் ஒருகல அல்காக்களாகும்.
காளான்கள் (Molds): பூஞ்சை-போன்ற அழுகலுண்னிவகை (saprophytic) உயிரிகளாகும். அவை கோழைக் காளான்களும் (பசைக் காளான்கள்) நீர்க்காளான்களும் ஆகும்.
சில முகிழுயிரிகள், இருதிணைவகை முகிழுயிரிகள் எனவும் சிலவேளைகளில் அழைக்கப்பட்டன; இவை மூத்தவிலங்குயிரியிலும், அத்துடன் அல்கா அல்லது காளான்களிலும் (எ.கா. கசை அல்காக்கள் அல்லது கோழைக் காளான்கள்) வகைப்படுத்தப்பட்டன. இவற்றின் பெயர், பாசி, பூஞ்சை, நிலைத்திணைகளுக்கான பன்னாட்டுக் குறிமுறையிலோ இயங்குதிணைகளுக்கான பன்னாட்டுக் குறிமுறையிலோ அல்லது இரண்டிலுமோ வெளியிடப்பட்டன.[15][16] கலப்பூட்டவகை உயிரினங்களாகிய யூகிலெனிடுகளும் டினோபிரியான்களும் இருவகைகளில் வகைபடுத்தப்பட்ட முரண்பாடு முகிழுயிரி எனும் திணைக்களம் உருவாகக் காரணமாகியது.
இந்த மரபான உட்பிரிவுகள் புறத்தோற்றப் பொதுமைகளை வைத்துப் பெயரிடப்பட்டவை. இவை பின்னர் உயிரினங்களுக்கு இடையில் அமையும் படிமலர்ச்சித் தொடர்பைவைத்து தொகுதிமரபியல் சார்ந்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தியலான மூலக்கூற்றுப் பகுப்பாய்வு வகைப்பாட்டில் இதக்குழுவின் முந்தைய உறுப்பினர்களைப் பன்முகமான பல தொகுதிகளிலும் ஏன், மிகச் சேய்மையாக அமையும் தொகுதிகளிலும் கூட பிரித்து வேவ்வேறு இடங்களில் வகைபடுத்தப்பட்டுள்ளன. எடுத்துகாட்டாக, நீர்ப்பூசணங்கள் இப்போது ஒளிச்சேர்க்கைபுரியும் உயிருஇகளாகிய பழுப்புப் பாசிகளிலும் நீலப்பசும்பாசிகளிலும் கோழைப்பூசணங்கள் அமீபிய உயிரிகளிலும் (இதில் அமீபாக் குழுவின் சில உட்கணங்களே உள்ளன) "அமீபாயிடு" பேரினத்தின் கணிசமான எண்ணிக்கை உயிரிகள், இரிசாரியா குழுவிலும் அமீபியா தொகுதியிலும் பிற தொகுதிகளிலும் பிரித்து வகைபடுத்தப்பட்டுள்ளது.
என்றாலும் இந்தப் பழைய சொற்களே முகிழுயிரிகளின் புறத்தோற்றவியலையும் சூழலியலையும் படிக்கும்போது பயன்பாட்டில் உள்ளன. எடுத்துகாட்டாக, மூத்தவிலங்கு (protozoa) எனும்சொல் படலமற்ற முகிழுயிரி சார்ந்த பல்லூட்ட இனங்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
வகைபாடு
[தொகு]வரலாற்றியலான வகைபாடுகள்
[தொகு]வோட்டிசெல்லா, கேயாசு. வோல்வாக்சு, கோரல்லினா, கான்ஃபெர்வால், உல்வா, சாரா (பாசியினம்), ஃபக்கசு எனும் சில பேரினங்களைத் தவிர, இலின்னேயசு கைவிட்ட முகிழுயிரி ஆய்வில் ஈடுபட்ட முன்னோடிகளில், [17][18] இலீவன்கோயெக், ஓ. எஃப். மூல்லெர், சி. ஜி. எத்திரென்பர்கு, ஃபெலிக்சு துசார்தீன் ஆகியோர் அடங்குவர்.[19] நுண்ணுயிரிகளில் முதன்முதலில் வகைபடுத்தப்பட்ட குழுக்களாகThe விலங்குநுண்ணுயிரிகள் (Animalcules), இன்ஃபெசோரியா (Infusoria) ஆகியனவாகும்.[20]செருமனி இயற்கையியலாளராகிய ஜார்ஜ் ஆகத்து கோல்டுஃபசு 1817 இல் கசையுயிரிகளையும் பவழங்களையும் குறிக்க, முன்விலங்குயிரி (Protozoa) அல்லது முன்னுயிரி எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.[21] சுவான், சுலைடன் இருவரின் உயிர்க்கலக் கோட்பாட்டுக்குப் பின்னர் (1838–39), இந்தக் குழு 1848 இல் கார்ல் வான் சீபொல்டால் ஒருகல் உயிரிகளாகிய போரமினிஃபெரா, அமீபியே ஆகிய முகிழுயிரிகளை உள்ளடக்கித் திருத்தப்பட்டது. ஜான் ஓகு 1860 இல் புரோட்டாக்டிசுட்டா (Protoctista) எனும் வகைபாட்டு வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்தி, முகிழுயிரிகள் அனைத்து ஒருகல முகிழ்நிலை நிலைத்திணைகலையும் இயங்குதிணைகளையும் (விலங்குகளையும்) உள்ளடக்க வேண்டுமென வாதிட்டார். இவர் புரோட்டாக்டிசுட்டாவை அன்று நடைமுறையில் இருந்த நிலைத்திணை, விலங்கு, கனிமத் திணைக்களங்களோடு கூடுதலாக நான்காம் திணைக்களமாக வரையறுத்தார்; .[21] கனிமத் திணைக்களம் 1866 இல் வகைபாட்டில் இருந்து எர்னெசுட்டு ஏக்கலால் நீக்கப்பட, எஞ்சிய மூன்று திணைக்களங்களே உயிரியல் வகைப்பாட்டில் மிஞ்சியது. முகிழுயிரி முதனிலை அல்லது முகிழ்நிலை உயிரிகளின் வடிவங்களாக வரையறுக்கப்பட்டது.[22]
எர்பெர்ட் கோப்லேண்டு 1938 இல், குச்சுயிரிகள் போன்ற உயிரிகளை ஏக்கலின் முகிழுயிரி வகைபாட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாலும் அவை முதலி நிறுவிக்கொண்ட உயிரிகள் என்று பொருள்படும் புரோட்டாக்டிசுட்டா வகைபாட்டுடன் பொருந்தாமையாலும் ஓகுவின் பெயரீட்டைத் திருத்தினார். மாறாக, கோப்லேண்டின் வகைபாடு, கலக்கரு உள்ளமைந்த முழுக்கருவன் உயிரிகளாகிய நீலப்பசும் பாசிகளையும் பசும்பாசிகளையும் பூஞ்சைகளையும் உள்ளடக்கியது.[7] இந்த வகைபாடு பின்னர் விட்டேக்கர் நான்கு திணைக்களங்களாக, பூஞ்சையையும் இயங்குதிணையையும் நிலைத்திணையையும் முகிழுயிரிகளை உள்ளடக்கிய முகிழ்திணையையும் வரையறுப்பதற்கான அடிப்படையை வழங்கியது.[23] இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய கட்டத்தில் மூலக்கூற்று தொகுதிமரபியல் வகைபாடு உருவாகும் வரை, ஏற்கப்பட்ட உயிரியல் வகைபாடாக இந்த ஐந்து திணைக்களங்களே நிலவியது; அப்போது முகிழுயிரிகளோ அல்லது ஒற்றைக்கல உயிரிகளோ உறவுடைய தனிக்குழு சார்ந்த உயிரிகள் அல்ல என்பது தெளிவாக விளங்கியது அதாவது அவை ஒற்றைத் தொகுதிக்குழு சார்ந்த உயிரிகள் அல்ல என்பது தெளிவாகியது.[24]
புத்தியலான வகைபாடுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Adl Sina M. (2012). "The revised classification of eukaryotes" (PDF). Journal of Eukaryotic Microbiology 59 (5): 429–514. doi:10.1111/j.1550-7408.2012.00644.x. பப்மெட்:23020233. பப்மெட் சென்ட்ரல்:3483872. http://www.paru.cas.cz/docs/documents/93-Adl-JEM-2012.pdf. பார்த்த நாள்: 2017-09-22.
- ↑ "Systematics of the Eukaryota". பார்க்கப்பட்ட நாள் 2009-05-31.
- ↑ 3.0 3.1 Whittaker, R. H. (1969). "New Concepts of Kingdoms of Organisms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட்:5762760.
- ↑ Simonite T (November 2005). "Protists push animals aside in rule revamp". Nature 438 (7064): 8–9. doi:10.1038/438008b. பப்மெட்:16267517. Bibcode: 2005Natur.438....8S.
- ↑ Harper, David; Benton, Michael (2009). Introduction to Paleobiology and the Fossil Record. Wiley-Blackwell. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4051-4157-3.
- ↑ Haeckel, E. (1866). Generelle Morphologie der Organismen. Reimer, Berlin.
- ↑ 7.0 7.1 Copeland, H. F. (1938). "The Kingdoms of Organisms". Quarterly Review of Biology 13 (4): 383. doi:10.1086/394568. https://archive.org/details/sim_quarterly-review-of-biology_1938-12_13_4/page/383.
- ↑ Copeland, H. F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5962/bhl.title.4474.
- ↑ "whittaker new concepts of kingdoms – Google Scholar". scholar.google.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
- ↑ "whittaker new concepts of kingdoms – Google Scholar". scholar.google.ca. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
- ↑ Cavalier-Smith, T. (2004), "Only six kingdoms of life" (PDF), Proceedings of the Royal Society of London B Biological Sciences, 271: 1251–62, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1098/rspb.2004.2705, PMC 1691724, PMID 15306349, பார்க்கப்பட்ட நாள் 2010-04-29
- ↑ Ruggiero, Michael A.; Gordon, Dennis P.; Orrell, Thomas M.; Bailly, Nicolas; Bourgoin, Thierry; Brusca, Richard C.; Cavalier-Smith, Thomas; Guiry, Michael D. et al. (2015). "A higher level classification of all living organisms". PLOS ONE 10 (4): e0119248. doi:10.1371/journal.pone.0119248. பப்மெட்:25923521.
- ↑ Margulis, Lynn; Chapman, Michael J. (2009-03-19). Kingdoms and Domains: An Illustrated Guide to the Phyla of Life on Earth (in ஆங்கிலம்). Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080920146.
- ↑ Siddiqui, Ruqaiyyah; Kulsoom, Huma; Lalani, Salima; Khan, Naveed Ahmed (2016-07-01). "Isolation of Balamuthia mandrillaris-specific antibody fragments from a bacteriophage antibody display library". Experimental Parasitology 166: 94–96. doi:10.1016/j.exppara.2016.04.001. http://www.sciencedirect.com/science/article/pii/S0014489416300637.
- ↑ Corliss, J.O. (1995). "The ambiregnal protists and the codes of nomenclature: a brief review of the problem and of proposed solutions". Bulletin of Zoological Nomenclature 52: 11–17. http://biostor.org/reference/2636.
- ↑ Barnes, Richard Stephen Kent (2001). The Invertebrates: A Synthesis. Wiley-Blackwell. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-632-04761-1
- ↑ Ratcliff, Marc J. (2009). "The Emergence of the Systematics of Infusoria". In: The Quest for the Invisible: Microscopy in the Enlightenment. Aldershot: Ashgate.
- ↑ Sharma, O. P. (1986). Textbook of Algae. McGraw Hill. p. 22.
- ↑ Fauré-Frémiet, E. & Théodoridès, J. (1972). État des connaissances sur la structure des Protozoaires avant la formulation de la Théorie cellulaire. Revue d'histoire des sciences, 27–44.
- ↑ The Flagellates. Unity, diversity and evolution. Ed.: Barry S. C. Leadbeater and J. C. Green Taylor and Francis, London 2000, p. 3.
- ↑ 21.0 21.1 Scamardella, J. M. (1999). "Not plants or animals: a brief history of the origin of Kingdoms Protozoa, Protista and Protoctista". International Microbiology 2: 207–221. http://www.im.microbios.org/08december99/03%20Scamardella.pdf. பார்த்த நாள்: 2017-10-22.
- ↑ Rothschild LJ (1989). "Protozoa, Protista, Protoctista: what's in a name?". J Hist Biol 22 (2): 277–305. doi:10.1007/BF00139515. பப்மெட்:11542176.
- ↑ Whittaker, R. H. (1959). "On the Broad Classification of Organisms". Quarterly Review of Biology 34 (3): 210. doi:10.1086/402733. https://archive.org/details/sim_quarterly-review-of-biology_1959-09_34_3/page/210.
- ↑ Stechmann, Alexandra; Thomas Cavalier-Smith (2003). "The root of the eukaryote tree pinpointed". Current Biology 13 (17): R665–R666. doi:10.1016/S0960-9822(03)00602-X. பப்மெட்:12956967. http://www.cladocera.de/protozoa/stechmann_2003_cb.pdf. பார்த்த நாள்: 15 May 2011.
நூல்தொகை
[தொகு]பொது
[தொகு]- Haeckel, E. Das Protistenreich பரணிடப்பட்டது 2013-10-22 at the வந்தவழி இயந்திரம். Leipzig, 1878.
- Hausmann, K., N. Hulsmann, R. Radek. Protistology. Schweizerbart'sche Verlagsbuchshandlung, Stuttgart, 2003.
- Margulis, L., J.O. Corliss, M. Melkonian, D.J. Chapman. Handbook of Protoctista. Jones and Bartlett Publishers, Boston, 1990.
- Margulis, L., K.V. Schwartz. Five Kingdoms: An Illustrated Guide to the Phyla of Life on Earth, 3rd ed. New York: W.H. Freeman, 1998.
- Margulis, L., L. Olendzenski, H.I. McKhann. Illustrated Glossary of the Protoctista, 1993.
- Margulis, L., M.J. Chapman. Kingdoms and Domains: An Illustrated Guide to the Phyla of Life on Earth. Amsterdam: Academic Press/Elsevier, 2009.
- Schaechter, M. Eukaryotic microbes. Amsterdam, Academic Press, 2012.
உடலியக்கவியல், சூழலியல், தொல்லுயிரியல்
[தொகு]- Foissner, W.; D.L. Hawksworth. Protist Diversity and Geographical Distribution. Dordrecht: Springer, 2009
- Fontaneto, D. Biogeography of Microscopic Organisms. Is Everything Small Everywhere? Cambridge University Press, Cambridge, 2011.
- Levandowsky, M. Physiological Adaptations of Protists. In: Cell physiology sourcebook : essentials of membrane biophysics. Amsterdam; Boston: Elsevier/AP, 2012.
- Moore, R. C., and other editors. Treatise on Invertebrate Paleontology. Protista, part B (vol. 1, Charophyta, vol. 2 பரணிடப்பட்டது 2016-10-09 at the வந்தவழி இயந்திரம், Chrysomonadida, Coccolithophorida, Charophyta, Diatomacea & Pyrrhophyta), part C பரணிடப்பட்டது 2016-10-09 at the வந்தவழி இயந்திரம் (Sarcodina, Chiefly "Thecamoebians" and Foraminiferida) and part D[தொடர்பிழந்த இணைப்பு] (Chiefly Radiolaria and Tintinnina). Boulder, Colorado: Geological Society of America; & Lawrence, Kansas: University of Kansas Press.
வெளி இணைப்புகள்
[தொகு]- Tree of Life: Eukaryotes பரணிடப்பட்டது 2012-01-29 at the வந்தவழி இயந்திரம்
- A java applet for exploring the new higher level classification of eukaryotes
- [https://web.archive.org/web/20110907012031/http://www.planktonchronicles.org/en/episode/9 பரணிடப்பட்டது 2011-09-07 at the வந்தவழி இயந்திரம் Plankton Chronicles – Protists – Cells in the Sea –
- Holt, Jack R. and Carlos A. Iudica. (2013). Diversity of Life. http://comenius.susqu.edu/biol/202/Taxa.htm. Last modified: 11/18/13.
- Tsukii, Y. (1996). Protist Information Server (database of protist images). Laboratory of Biology, Hosei University.[1]. Updated: March 22, 2016.