உள்ளடக்கத்துக்குச் செல்

காருபேடியா

ஆள்கூறுகள்: 26°31′N 92°08′E / 26.52°N 92.13°E / 26.52; 92.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காருபேடியா
நகரம்
காருபேடியா is located in அசாம்
காருபேடியா
காருபேடியா
அசாம் மாநிலத்தில் காருபேடியா நகரத்தின் அமைவிடம்
காருபேடியா is located in இந்தியா
காருபேடியா
காருபேடியா
காருபேடியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°31′N 92°08′E / 26.52°N 92.13°E / 26.52; 92.13
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்வடக்கு அசாம் கோட்டம்
மாவட்டம்தர்ரங் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்காருபேடியா நகராட்சி
ஏற்றம்
37 m (121 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,783
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
784115
வாகனப் பதிவுAS13
இணையதளம்darrang.nic.in

காருபேடியா (Kharupetia), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் வடக்கு அசாம் கோட்டத்தில் அமைந்த தர்ரங் மாவட்டத்தில் உள்ள மங்கல்தோய் வருவாய் வட்டத்தில் நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

காருபேடியா நகரம், மாவட்டத் தலைமையிடமான மங்கல்தோய்க்கு வடகிழக்கே 15.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு வடகிழக்கே 82 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 3,860 வீடுகளும் கொண்ட காருபேடியா நகரத்தின் மக்கள் தொகை 18,501 ஆகும். அதில் ஆண்கள் 9,764 மற்றும் பெண்கள் 8,737 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,293 மற்றும் 12 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.71%, இசுலாமியர் 17.57%, சமணர்கள் 3.58% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

[தொகு]

இதன் அருகே அமைந்த தொடருந்து நிலையம் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரௌதா பாகன் இரயில் நிலையம் ஆகும்.[2]தேசிய நெடுஞ்சாலை எண் 15 கவுகாத்தியை காருபேடியா நகரத்துடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.censusindia.co.in/towns/kharupatia-population-darrang-assam-801631 Kharupatia Population, Religion, Caste, Working Data Darrang, Assam - Census 2011]
  2. ROWTA BAGAN RWTB Railway Station Trains Schedule


"https://ta.wikipedia.org/w/index.php?title=காருபேடியா&oldid=3583926" இலிருந்து மீள்விக்கப்பட்டது