ராம நாராயணன்
Appearance
இராம நாராயணன் [1] | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 3, 1949 |
இறப்பு | சூன் 22, 2014 | (அகவை 65)
மற்ற பெயர்கள் | ராமநாராயணன், ராம் நாராயண் |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
பெற்றோர் | இராமசாமி மீனாட்சி ஆச்சி |
வாழ்க்கைத் துணை | இராதா (இறந்துவிட்டார்) |
பிள்ளைகள் | தேனாண்டாள் முரளி |
இராம நாராயணன், (Rama Narayanan, ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.[2] 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும்.[3][4] தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.[4] சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
திரைப்படங்கள்
[தொகு]- குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.
தயாரித்தவை
[தொகு]இயக்கியவை
[தொகு]மரணம்
[தொகு]இராம நாராயணன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சூன் 22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ http://filmcircle.com/director-producer-rama-narayanan/
- ↑ "புதிய படங்களில் மிருகங்களை பயன்படுத்த முடியவில்லை - ராம நாராயணன்". Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
- ↑ ”கல்பனா” என் 125வது படம் - ராம நாராயணன்
- ↑ 4.0 4.1 http://cinema.dinamalar.com/tamil-news/9162/cinema/Kollywood/Malayan-language-film-directed-by-Rama-Narayanan!.htm
- ↑ "சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் இயக்குநர் ராம நாராயணன் மரணம்; விமானம் மூலம் உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது". தினத்தந்தி. 23 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2014.