ரேபிட் ரெயில்
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | மலேசியா (2002) (Rangkaian Pengangkutan Integrasi Deras) |
தலைமையகம் | No. 1, Jalan PJU 1A/46, Off Jalan Lapangan Terbang Subang, 47301 பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர். |
சேவை வழங்கும் பகுதி | கிள்ளான் பள்ளத்தாக்கு |
முதன்மை நபர்கள் | அமீர் அம்டான் (தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | பொது போக்குவரத்து |
சேவைகள் | தொடருந்துகள் |
தாய் நிறுவனம் | பிரசரானா மலேசியா |
இணையத்தளம் | www.myrapid.com.my |
ரேபிட் ரெயில் (ஆங்கிலம்: Rapid Rail; மலாய்: Rapid Rail Sdn Bhd) என்பது கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குச் சேவை செய்யும் விரைவுப் போக்குவரத்து (Rapid Transit) மெட்ரோ (Metro) நிறுவனம் ஆகும்.[1]
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனம்; மற்றும் ஐந்து விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் (Rapid Transit Lines) சேவைகளில் ஈடுபட்டுள்ள ஒரே நிறுவனமும் ஆகும்; அத்துடன் ஒரு கூட்டு அமைப்பாக ரேபிட் கேஎல் (Rapid KL) எனும் விரைவுப் போக்குவரத்து அமைப்பையும் செயல்படுத்துகிறது.[2]
பொது
[தொகு]இந்த ரேபிட் ரெயில் அமைப்பானது, தற்போது மூன்று இலகு விரைவு தொடருந்து (எல்ஆர்டி) (Light Rapid Transit) வழித்தடங்கள்; இரண்டு பெரும் விரைவு தொடருந்து (எம்ஆர்டி) (Mass Rapid Transit) வழித்தடங்கள்; மற்றும் ஒரு ஒற்றைத் தண்டூர்தி (Monorail) வழித்தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[3]
தொடருந்து சேவைகள் காலை 6:00 மணி தொடங்கி நள்ளிரவு வரையில் செயல்படுகின்றன. உச்ச நேரத்தின் போது மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறையும்; உச்ச நேரம் அல்லாத போது பதினான்கு நிமிடங்களுக்கு ஒரு முறையும் சேவைகள் வழங்கப்படுகின்றன.
தொடருந்துகள்
[தொகு]இந்தத் தொடருந்துகள் ஓட்டுநர் இல்லாதவை; ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிப்பதற்கும்; குறிப்பிட்ட நிலையங்களில் நிறுத்துவதற்கும்; தானியங்கி முறையில் இயங்குகின்றன. இருப்பினும்கூட, அவசரநிலையின் போது பயன்படுத்துவதற்காக, தொடருந்துகளின் ஒவ்வொரு முனையிலும் மனித ஓட்டுநர்களுக்கான கட்டுப்பாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "the owner-operator of the country's rail services, including LRT networks, KL Monorail and the MRT lines. In addition to that, we are also the owner-operator for the stage bus services in Kuala Lumpur, Selangor, Penang and Pahang". Prasarana Malaysia Berhad. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ "Officially established after a corporate restructuring exercise in 2013, Rapid Rail Sdn Bhd commenced operations in 2002 when Prasarana officially took over the assets and operations of the Star-LRT and Putra-LRT and renamed both lines to Ampang Line and Kelana Jaya Line respectively. It then acquired the KL Monorail in 2007". Prasarana Malaysia Berhad. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ "LRT". MyRapid (Syarikat Prasarana Negara Berhad). Archived from the original on 2 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்பிரல் 2014.